Read in : English
திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு (கியூசெட்) இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் நுழைவுத் தேர்வு கேள்வித்தாள்கள் வழங்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்வித்தாள்கள் வழங்கப்படுவது குறித்து இன்மதி இணையதளத்தில் அண்மையில் கட்டுரை வெளியாகியிருந்தது.
திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம் இருந்தபோதிலும்கூட, தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் கியூசெட் நுழைவுத் தேர்வை எழுதி அந்த மத்தியப் பல்கலைக்கழகத்தில் சேர முடியாத நிலை இதுவரை இருந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது, நாட்டில் உள்ள அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர நடத்தப்படும் கியூசெட் நுழைவுத் தேர்வில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா, ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் கேள்வித்தாள்கள் கொடுக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம் இருந்தபோதிலும்கூட, தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் கியூசெட் நுழைவுத் தேர்வை எழுதி அந்த மத்தியப் பல்கலைக்கழகத்தில் சேர முடியாத நிலை இதுவரை இருந்தது. Ðபல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த அறிவிப்பு, தமிழ் வழியில் படித்த மாணவர்களும் இந்த மத்தியப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.
அதேசமயம், என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கூறியுள்ளது. எனவே, தமிழில் தேர்வு எழுத வாய்ப்புக் கிடைத்தாலும்கூட, தமிழ்நாடு பாடத்திட்டப்படி படித்துள்ள மாணவர்கள், என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களிலிருந்து நுழைவுத் தேர்வுக்குத் தயாராக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த ஆண்டில் திருவாரூர் உள்பட 12 மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு மட்டும் கியூசெட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. தற்போது நாட்டில் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக இந்த நுழைவுத் தேர்வு தில்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜமியா மிலியா இஸ்லாமியா, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், பனராஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கியப் பல்கலைக்கழகங்களும் இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே இளநிலைப் பட்ட மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் எம். ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் வழியில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது, தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் மத்தியப் பல்கலைக்கழகத்தில் சேரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளபோதிலும்கூட, எத்தனை பேர் என்சிஇஆர்டி பாடத்திட்டன்படி நுழைவுத் தேர்வு எழுதத் தயாராவார்கள் என்பது தெரியவில்லை.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு பிளஸ் டூ மதிப்பெண்கள் மாணவர் சேர்க்கைக்குக் கருத்தில் கொள்ளப்படாது தெரிவித்துள்ள அவர், மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டாலும்கூட, பொதுக் கவுன்சலிங் இருக்காது என்றும் அந்தந்த மத்தியப் பல்கலைக்கழகங்கள் இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலப் பல்கலைக்கழகங்களும் தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும் மானியக் குழு கூறியுள்ளது. பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்தி வரும் தமிழகம், இதனை ஏற்றுக் கொள்ளாது என்பது வெளிப்படை.
தமிழ் வழியில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது, தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் மத்தியப் பல்கலைக்கழகத்தில் சேரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளபோதிலும்கூட, எத்தனை பேர் என்சிஇஆர்டி பாடத்திட்டன்படி நுழைவுத் தேர்வு எழுதத் தயாராவார்கள் என்பது தெரியவில்லை.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மத்திய அரசின் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அத்துடன், கம்ப்யூட்டர் மூலம் இத்தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டியதிருக்கும். இதுவரை 2 மணி நேரம் நடைபெற்ற நுழைவுத் தேர்வு மூன்று மணி நேரமாகவும் இரண்டு ஷிப்டுகளில் நடத்த உத்தேசித்துள்ளதாகவும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வரும்போதுதான் இந்த கியூசெட் நுழைவுத் தேர்வு நடைமுறை குறித்து விரிவாகத் தெரிய வரும்.
இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்வித்தாள்கள் வழங்கப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வு உள்பட அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் அனைத்திலும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித்தாள்களை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்பதே தமிழகக் கல்வி ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Read in : English