Read in : English
கொரோனா காலத்தில் பள்ளிக்குச் சென்று படிக்க முடியாத சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்காக எந்தக் கட்டணமும் இன்றி ஆன்லைன் மூலம் இலவச வகுப்புகளை நடத்துகிறது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வசந்தன் நூலகப் பள்ளி. ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அவர்•களின் தேவைக்கு ஏற்ப ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது இந்தப் பள்ளி.
தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் எம்ஏ படித்து போது ஐஏஎஸ் அதிகாரியாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற கனவுடன் இருந்து, 2014ஆம் ஆண்டில் 22 வயதிலேயே விபத்தில் இறந்துபோன தனது மகன் வசந்தன் நினைவாக இருந்த தனது மகன் வசந்தன் நினைவாக அமைக்கப்பட்ட இந்த நூலகத்தின் சார்பில் இந்த ஆன்லைன் பள்ளி கடந்த மே 15ஆம் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது.
எனது மகனின் சேகரிப்புகளிலிருந்த புத்தகத்துடன் சிவில் சர்வீஸ் தேர்வு, நீட் நுழைவுத் தேர்வு உள்பட பல்வேறு போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புத்தகங்களையும் சேர்த்து எனது மகனின் நினைவாக 2015இல் எங்களது வீட்டில் இந்த இலவச நூலகத்தை ஆரம்பித்தோம். இந்த முயற்சியில் எனது கணவர் உலக ஒளியும் துணை நிற்கிறார். அவர்தான் இதன் நிறுவனரும்கூட என்கிறார் வசந்தனின் அம்மாவும் இந்த நூலகத்தின் ஒருங்கிணைப்பாளருமான சுதா. இந்த முயற்சி குறித்து அவர் மேலும் கூறியதாவது:
டென்மார்க்கில் இருந்து ஆதவன் கதிரேச பிள்ளை நடிப்புப் பயிற்சி அளிக்கிறார். சாந்தி, தாரணி, சுஜாதா, ரமேஷ் ஆகியோர் சிங்கப்பூரிலிருந்து பாடம் நடத்துகிறார்கள். புனே, தில்லி, திண்டுக்கல், மதுரை, திருச்சி போன்ற பல்வேறு இடங்களிலும் உள்ளவர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் பாடம் நடத்துகின்றனர்
நூலகத்தில் அங்கு வாரந்தோறும் நடத்தும் கூட்டங்களில் பல்வேறு துறை நிபுணர்கள் கலந்து கொண்டு பேசுவார்கள். நாடகங்கள்கூட நடக்கும். மாணவர்களிடம் மரக்கன்று வளர்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். கொரோனா காலத்தில் அனைவரது வாழ்க்கையும் முடங்கிப்போன சூழ்நிலையில் சமானியக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதையடுத்துத் தொடங்கப்பட்டதுதான் இலவச ஆன்லைன் பள்ளி.
முதல் நாளில் முதலில் எட்டு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஐந்து மாணவர்களுக்கு நானே வகுப்பு எடுத்தேன். அன்றிரவே எனது வாட்ஸ் அப் குரூப்பிலிருந்த பிரேமா எனது முயற்சிக்கு துணை நிற்பதாகக் கூறினார். பின்னர் பெங்களூரிலிருந்து சுகன்யா கணிதம் கற்பிக்க முன்வந்தார். வாட்ஸ் அப் குரூப் மூலம் தகவல் அறிந்தவர்கள் நாங்களும் வகுப்புகளை எடுக்கிறோம் என்று இணைந்தார்கள். தற்போது 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கிறார்கள். டென்மார்க்கில் இருந்து ஆதவன் கதிரேச பிள்ளை நடிப்புப் பயிற்சி அளிக்கிறார். சாந்தி, தாரணி, சுஜாதா, ரமேஷ் ஆகியோர் சிங்கப்பூரிலிருந்து பாடம் நடத்துகிறார்கள். புனே, தில்லி, திண்டுக்கல், மதுரை, திருச்சி போன்ற பல்வேறு இடங்களிலும் உள்ளவர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் பாடம் நடத்துகின்றனர். ஆசிரியர்களை நாலெட்ஜ் ஷேரர் என்றே அழைக்கிறோம். அதாவது அறிவுத் தோழர்கள் என்று அழைக்கிறோம்.
பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் மட்டுமல்ல, மாணவர்களின் தேவையைப் பொருத்து பல்வேறு பாடங்களை நடத்துகிறோம். இசை, நடிப்பு, ஓவியம் குறித்த வகுப்புகள் எல்லாம்கூட உண்டு. மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டும் பாடல்களைக் கற்றுத்தருகிறோம். ஸ்போர்ட்ஸ் எஜுக்கேஷன் பாடத்தைக்கூட நடத்தியிருக்கிறோம். மாணவர்கள் கேட்டால், அவர்கள் விரும்பும் பாடங்களை எடுக்கிறோம். தமிழ் வழியில் பாடங்•களை நடத்துகிறோம். ஆங்கில வழியிலும் பாடம் நடத்துகிறோம். சென்னையில் மட்டுமல்ல மாநிலத்தின் பல்வேறு இடங்•களிலிருந்தும் இந்த ஆன்லைன் வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் மட்டுமல்ல, மாணவர்களின் தேவையைப் பொருத்து பல்வேறு பாடங்களை நடத்துகிறோம். இசை, நடிப்பு, ஓவியம் குறித்த வகுப்புகள் எல்லாம்கூட உண்டு. மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டும் பாடல்களைக் கற்றுத்தருகிறோம்
காலையிலிருந்து மாலை வரை 10 செஷன்கள் நடக்கும். ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் சுமார் 45 நிமிடங்கள். Ñமாணவர்கள் குறிப்பிட்ட பாட வகுப்பில் மட்டும் கலந்து கொள்வார்கள். சிலர் அனைத்துப் பாட வகுப்புகளிலும் கலந்து கொள்வார்கள். ஒரு மாணவர் குறிப்பிட்ட பாடத்தில் வகுப்பு நடத்தக் கேட்டுக் கொண்டாலும் அந்த மாணவருக்காக தனியே ஆன்லைன் வகுப்பை நடத்துவோம். சில நேரங்களில் குறிப்பிட்ட தலைப்புகளில் அத்துறை சார்ந்த ஒருவர் பாடம் நடத்துவார். கற்றலில் இனிமையுடன் மாணவர்களுக்கு அறிவூட்ட வேண்டும் என்பதுதான் நோக்கம். தற்போது வரை 250 மாணவர்கள் எங்களது வகுப்புகளில் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.
எங்களது முயற்சியை அறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர், எங்களது ஆன்லைன் வகுப்புகளை ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்தார்கள். அதையடுத்து தேவைப்படும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு தேவையான பாடங்•••களை மட்டும் எடுத்து வருகிறோம். இதுவரை 20 ஆதிதிராவிடர் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுத்திருக்கிறோம்.
தற்போது பள்ளிகள் திறந்துவிட்டதால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு முன் காலை ஆறே கால் மணிக்கு எங்களது ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. மாலையில் 5 மணி முதல் 8 மணி வரையிலும் வகுப்புகளை நடத்துகிறோம். சில இடங்களில் தனியே சிறு குழுவாக உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்தக் கேட்டுள்ளனர். அதனால் அந்தந்தப் பகுதியில் கற்பிப்பதில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களை அல்லது ஆசிரியர்களைக் கொண்டு அந்த வகுப்பு••களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இது ஜனவரி 14 முதல் சாத்தியமாகும். கற்றலில் இனிமையை ஏற்படுத்தும் எங்களது இந்த முயற்சி சிறியதாக இருந்தாலும் மாணவர்•களிடம் நிச்சயம் நல்ல பலனை அளிக்கும்” என்கிறார் சுதா
இதுவரை 20 ஆதிதிராவிடர் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுத்திருக்கிறோம்.
“இந்த முயற்சியை எங்களது சொந்த செலவிலேயே இதுவரை செய்து வந்திருக்கிறோம். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற எனது கணவர் உலக ஒளி தனது பணத்திலிருந்து இதற்காகச் செலவழித்து வந்தார். ஒரு மாணவி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு எழுதுவதற்காக தனியார் மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். தங்கும் இடத்திலிருந்து பயிற்சி மையத்துக்குச் சென்று வர சைக்கிள் வேண்டும் என்று சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவி கேட்டார். அதை அந்த மாணவிக்கு வாங்கித் தந்தோம். தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லுரியில் எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு படித்து வரும் ஒரு மாணவியின் அப்பா இறந்துபோனார். அந்த மாணவியின் படிப்புச் செலவுக்காக ரூ.8 லட்சம் பணம் திரட்டிக் கொண்டிருக்கிறோம். இதுபோல பலவேறு பணிகளைத் தொடர்ந்து செய்ய பணம் தேவைப்படுகிறது. அதனால் வசந்தன் அறக்கட்டளையை ஏற்படுத்தி இருக்கிறோம். விரும்பியவர்கள் எங்கள் முயற்சிகளுக்கு உதவலாம்” என்கிறார் சுதா
தொடர்புக்கு: 97161 77728
இ-மெயில்: vasanthanlibrary@gmail.com
Read in : English