Read in : English

பொறியியல் படிப்புகளைக் கற்றுத்தருவதில் நாட்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஐஐடிக்களில் தமிழக அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் சேருவது என்பது அபூர்வ நிகழ்வு. அது இந்த ஆண்டு நிகழ்ந்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் துவரங்குறிஞ்சியை அடுத்த கரடிப்பட்டியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன் பி. அருண்குமார் (17), இந்த ஆண்டு சென்னை ஐஐடியில் பி.டெக். மெட்டலர்ஜி அண்ட் மெட்டிரியல் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அருண்குமாரை அழைத்து பாராட்டினார்.

இந்த ஜேஇஇ அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வில் முதல் முறையிலே தேர்ச்சி பெற்றிருக்கிறார் விளிம்பு நிலைக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியான இவர்.
திருச்சி கலெக்டர் தலைமையிலான மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து திருச்சி என்ஐடி மாணவர்கள் இவருக்கு வழங்கிய இலவசப் பயிற்சியும் கடும் உழைப்பும் அருண்குமாரை அரசுப் பள்ளியிலிருந்து சென்னை ஐஐடிக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளது.

ஐஐடியில் இடம் கிடைத்தும் படிக்க போதிய பண வசதி இல்லாமல் இருப்பதை அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அருண்குமாரை சென்னைக்கு நேரில் அழைத்துப் பாராட்டியதுடன், எளிய பின்புலத்திலிருந்து வந்த அந்த மாணவரின் படிப்புச் செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கரடிப்பட்டியைச் சேர்ந்தவர் பி. அருண்குமார். ஓட்டு வீட்டில் வசிக்கும் அவரது தந்தை பொன்னழகனும் பொன்னாத்தாளும் கூலி வேலை செய்பவர்கள். சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்கள். அருண்குமாருக்கு இரண்டு தங்கைகள். அவர்கள் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

திருச்சி என்ஐடியில் இக்னைட் என்ற மாணவர்களுக்கான கிளப்பை நடத்தி வருகிறோம். அதில் இம்பல்ஸ் என்ற திட்டத்தின் கீழ்,  திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஜேஇஇ மெயின் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளித்து வருகிறோம்

ஐந்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் படித்த அருண்குமார், தொடர்ந்து பணம் கட்ட முடியாமல் பக்கத்து ஊரில் உள்ள கஞ்சநாயக்கன்ப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6, 7ஆம் வகுப்புகளைப் படித்த அவர், பின்னர் கரடிபட்டியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் சேவல்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஆங்கில வழியில் படித்தார். Ðபத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 444 மதிப்பெண்கள் பெற்றார். அதன் பிறகு, அந்தப் பள்ளியிலே பிளஸ் ஒன் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை எடுத்துப் படித்தார்.

Дபத்தாம் வகுப்பு வரை ஐஐடி என்ற கல்வி நிறுவனம் இருப்பது பற்றி எனக்குத் தெரியாது. அதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்பதும் எனக்குத் தெரியாது. என்ஐடியில் சேருவதற்கான ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திருச்சி என்ஐடி மாணவர்கள் இலவசப் பயிற்சி அளிப்பதாகக் கூறினார்கள். அதற்காக தேர்வு வைத்தார்கள். அதில் நான் தேர்வு பெற்றேன். அதன்பிறகு, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் திருச்சி என்ஐடியில் பயிற்சியில் கலந்து கொண்டேன். அக்கல்லூரி மாணவர்கள் எங்களுக்கு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளித்தார்கள். கொரோனா வந்ததிலிருந்து நேர்முகப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவில்லை. ஆனால், ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடர்ந்து நடந்தன. அத்துடன் பிளஸ் ஒன் வகுப்புகளும் ஆன்லைன் மூலமே நடைபெற்றன. இந்த நிலையில், எப்படியோ சிரமப்பட்டு எனது அப்பா பத்தாயிரம் ரூபாயில் நல்ல மொபைல் வாங்கித் தந்தார். கொரோன காலத்தில் பள்ளிக்கூடம் நடைபெறவில்லை என்பதால், ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரம் தவிர, மீதியுள்ள நேரத்தை படிப்பதற்கே செலவிட்டேன். ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு எழுதினேன். மெயின் தேர்வில் 17,069 ரேங்கில் தகுதி பெற்றேன். அதனால், ஜேஇஇ அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வு எழுதத் தகுதி பெற்றேன். அதற்கும் பயிற்சி அளித்தார்கள். அதில் 12,175வது ரேங்கில் தகுதி பெற்றேன். கம்யூனிட்டி ரேங்கிங் (OBC- Non creamy layer) 2503. எனக்கு முதல் கவுன்சலிங்கில் •ஹைதராபாத் ஐஐடியில் கெமிக்கல் என்ஜினியரிங்கில் இடம் கிடைத்தது. இரண்டாவது கவுன்சலிங்கில் சென்னை ஐஐடியில் மெட்டலர்ஜிக்கல் அண்ட் மெட்டீரியல் என்ஜினியரிங் படிப்பில் இடம் கிடைத்துள்ளது” என்கிறார் அருண்குமார்.

திருச்சி NIT மாணவர்கள் அளிக்கும் பயிற்சி வகுப்பு

Дஐஐடியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், கல்லூரியில் படிக்க பணத்துக்கு என்ன செய்வது என்று கவலையாக இருந்தது. எனது குடும்ப வருமானம் என்பதால் ஐஐடியில் படிப்புக் கட்டணம் (Tution Fee) செலுத்த வேண்டியதில்லை. இப்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கிவிட்டன. நேரில் வகுப்புகள் தொடங்கும்போதுதான் ஹாஸ்டலில் தங்க வேண்டியதிருக்கும். விடுதிக் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகள் இருக்கின்றன. படிப்புச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். எனவே, இனிமேல் படிப்புச் செலவு குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அதற்காக முதல்வருக்கு மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறும் அருண்குமார், “பட்டப் படிப்பை முடித்ததும் வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எனது முதல் விருப்பம். அதற்கு அடுத்துதான் மேற்படிப்பு குறித்து சிந்திக்க முடியும்” என்கிறார்.

ஐஐடியில் இடம் கிடைத்தும் படிக்க போதிய பண வசதி இல்லாமல் இருப்பதை அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அருண்குமாரை சென்னைக்கு நேரில் அழைத்துப் பாராட்டியதுடன்,  எளிய பின்புலத்திலிருந்து வந்த அந்த மாணவரின் படிப்புச் செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்

“திருச்சி என்ஐடியில் இக்னைட் (IGNITTE) என்ற மாணவர்களுக்கான கிளப்பை நடத்தி வருகிறோம். அதில் இம்பல்ஸ் (Impulse) என்ற திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் அரசுப் பள்ளியில் பிளஸ் ஒன் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஜேஇஇ மெயின் தேர்வுகளுக்கு இரண்டு ஆண்டுகள் சனி, {ஞாயிறு கிழமைகளில் இலவசப் பயிற்சி அளித்து வருகிறோம். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எங்களது முயற்சிக்கு ஆதரவாக இருந்தார். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பிய 300 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு வைத்து அதில் தகுதி பெறும் 30 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். கடந்த ஆண்டு நேரில் வகுப்புகள் நடைபெற்றன. தற்போது கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு இரண்டு மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சி என்ஐடியில் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டில் அருண்குமார், ஜேஇஇ அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஐஐடியில் சேர்ந்துள்ளார்” என்கிறார் திருச்சி என்ஐடி மூன்றாம் ஆண்டு மாணவரும் இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான நெய்வேலியைச் சேர்ந்த ஏ. தினேஷ்குமார்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival