Read in : English

Share the Article

சுவிட்சர்லாந்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது, திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துதனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குறிப்பிட்ட பாடகி சின்மயி, இதுகுறித்து தாம் போலீசில் புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்தார்.!

இதுதொடர்பாக இன்மதி.காம் செய்தி தளத்திற்கு பிரபல பின்னணி பாடகி சின்மயி ஸ்ரீபதா பிரத்யேகமாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலகம் முழுவதும்  ME  TOO மீ-டூ (நானும்) என்ற விழிப்புணர்வு பிரசார இயக்கம் மூலமாக, பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்துதுணிச்சலாக பேசி வருகின்றனர். அந்த வகையில் இந்த இயக்கத்தின் மூலம் தமிழ் திரை உலகில் முதல் குற்றச்சாட்டை முன்வைத்தவர் பாடகி சின்மயி ஸ்ரீபதா. இதுகுறித்து அவர் கூறும்போது, வைரமுத்து மீது சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் விரைவில் புகார் அளிக்க உள்ளேன். நான்மட்டுமல்ல என் போன்று 3 பெண்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களும் வைரமுத்து மீது புகார் அளிக்க உள்ளனர் என்றார். மேலும் வைரமுத்து மீதான புகாரை நியாயப்படுத்திய அவர், இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.!

வைரமுத்துக்கு எதிராக பாலியல் புகார் கூறிய நிலையில், அவர் மீது போலீசிலும் புகார் அளிக்க போகிறீர்களா.?

”நிச்சயமாக.. நான் 100 சதவீதம் உறுதியாக உள்ளேன். வைரமுத்து மீது உறுதியாக போலீசில் புகார் அளிப்பேன்.  என் வாழ்க்கையை  பந்தயம் கட்டி கூறுவேன், போலீசில் புகார் அளிக்க உள்ளேன் ” என்றார்.

மத்திய அரசால்  அமைக்கப்படவுள்ள குழுவில் புகார் அளிக்கும் திட்டம் உள்ளதா.?

”ஆமாம்.! பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மத்திய அரசால் குழு  அமைத்தவுடன், அந்த குழுவின்  மூலமாக பலன்எப்படி இருந்தாலும்,   அதில் நான் வைரமுத்து மீது நிச்சயமாக புகார் அளிப்பேன்.!”

மற்ற மூன்று பெண்களும் உங்களுடன் இணைந்து வைரமுத்து மீது போலீசில் புகார் அளிப்பார்களா.? ”அவர்கள் வெளியே வருவார்கள். அவர்களின் பெயர்களும் வெளியே வரும். அதில் ஒருவர் பிரபலமான  பாடகரின் உறவுக்காரர்.” என்றார்.

மீ-டூ இயக்கம் குறித்து சின்மயி கூறும்போது, ”இது மிகவும் சிறப்பானது. பல ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து உண்மையைபேசும் தைரியத்தை கொடுத்துள்ளது. இது எல்லா துறைகளிலும் வளர்ந்து மற்ற  துறைகளுக்கும் பரவ வேண்டும் என்று விரும்புகிறேன்.திரைப்படம் மற்றும் ஊடக துறையில் மட்டுமல்ல.!”

ஒருவேளை வைரமுத்து திருமணத்திற்கு அழைக்கப்படாமல் இருந்திருந்தால், சின்மயி வைரமுத்து எழுதிய பல பாடல்களை பாடினார். எனினும் அவரை தனது திருமணத்திற்கு அழைக்காமல் அவமதித்து விட்டார் என்று மக்கள் தவறாக புரிந்துக் கொண்டிருப்பார்கள்.!

மீ-டூ இயக்கத்தில் ஆண்களும் புகார்களோடு வந்தால் என்ன நடக்கும் என்று யோசித்து பாருங்கள் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு, ”மத்திய அமைச்சரின் கருத்துக்கு நன்றி கூறுகிறேன். ஒருவேளை ஆண்களும் இந்த இயக்கத்தில் சேர்ந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல்கொடுமைகள் குறித்து பேசினால் நன்றாக இருக்கும். ஏனெனில் சிறுவர்கள் வயதான பெரியவர்களால் குடும்பத்திலும் குடும்பத்திற்கு வெளியிலும் பாலியல்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாக  பல செய்திகள் வருகின்றன.  எனவே ஆண்கள் இதுகுறித்து பேசுவார்கள், அவர்களும்வெளியே வருவார்கள் என்று நம்புகிறேன்.” என்று பதில் அளித்தார்.

”உண்மையில் மீ-டூ இயக்கம் ஒரு பாலினம் சார்ந்தது அல்ல. இது பெண்கள் குறித்தது மட்டுமல்ல. ஆண்களுக்கான இயக்கம் கூட!  பாலியல் ரீதியாக யார் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தாக்குதலுக்குள்ளாகி இருந்தாலும் உண்மையை வெளியே சொல்ல இது சரியானதருணம்.! அதில் சிறுவன், சிறுமி என்ற வேறுபாடு இல்லை.!”

மீ-டூ இயக்கத்தை பெண்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே.!

”ரஜினி சாரின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கும் நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்கள்,தங்களுக்கு  நேர்ந்த தாக்குதலுக்கு நீதி வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். இந்த இயக்கம் தவறாக பயன்படுத்தப்பட்டால் அதை எதிர்த்து முதல் குரல் எங்கள் குரலாகத்தான் இருக்கும் என்று ரஜினி அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த இயக்கத்தின் வாயிலாக யாரையும்  யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை. நாங்கள் நீதியை நாடுகிறோம். அதனை பெற விரும்புகிறோம். மேலும், இந்த இயக்கத்தின் துஷ்பிரயோகத்திற்கு எதிராகவும் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்,.” என்று சின்மயிகூறினார்.

”பொது இடங்களில் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பெண்கள் பேசக் கூடாது, இது சமூக களங்கம் என்ற நிலையில் இருந்து இந்தசமுதாயம் வெளியே வர வேண்டும். உண்மையை வெளிக்கொணர வேண்டும். பல நாட்களாக பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தாக்குதல்கள் குறித்துஅமைதி காத்தனர். அந்த வகையில் பெண்கள் தற்போது பாலியல் வேட்டைக்காரர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்தவும், அவர்களை அவமானப்படுத்தவும்தயாராக இருக்கின்றனர்.! ஒருவரது சூட்கேஸ், தங்க நகைகள் தொலைந்தாலோ, யாரேனும் ஒருவர் தாக்குதல் நடத்தினாலும் காவல் நிலையத்தில் புகார்அளிக்கின்றனர். இதே சூழ்நிலைதான், பெண்கள் சுய மரியாதைக்கும், கவுரவத்தையும் இலக்காக கொண்டு பாலியல் ரீதியாக தாக்குதலுக்குள்ளாவது.! இந்தபெண்கள் போலீசில் புகார் அளித்தால் என்ன தவறு, நிச்சயமாக புகார் அளிக்க வேண்டும்!”

”இது முற்றிலும் நெறிமுறை சார்ந்த விஷயம். மாறாக நான்  அடி பணிந்தேன் என்று அர்த்தம் இல்லை.!”

தன்மீதான குற்றச்சாட்டுகளை வைரமுத்து முழுமையாக மறுத்துள்ளாரே என்ற கேள்விக்கு, ”குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கிறார் என்றால், இதை தவிர அவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.” என்றார்.

தங்களின் திருமண வரவேற்பு  நிகழ்ச்சிக்கு வைரமுத்துவை அழைத்தது ஏன்? என்ற கேள்விக்கு, ”அந்த நிகழ்ச்சியை என்னுடைய செய்தித்தொடர்பாளர்கள் கையாண்டனர். அப்போது வைரமுத்து குறித்து நான் புகார் தெரிவிக்காத நேரம்.  ஒருவேளை வைரமுத்து திருமணத்திற்கு அழைக்கப்படாமல் இருந்திருந்தால், சின்மயி வைரமுத்து எழுதிய பல பாடல்களை பாடினார். எனினும் அவரை தனது திருமணத்திற்கு அழைக்காமல் அவமதித்து விட்டார் என்று மக்கள் தவறாக புரிந்துக் கொண்டிருப்பார்கள்.! திருமண நிகழ்ச்சிக்கு மதன் கார்க்கியை அழைத்தேன். அப்போதுஅவர் என் தந்தை அழைக்கப்பட்டாரா.? இல்லையா.? என என்னிடம் கேட்டார். எனவே அதனை வேறுவிதமாக பார்த்தால், நான் அவரை சமுதாயத்தின் பார்வையிலே அழைத்ததாக  வேண்டும்.! ஸம்ப்ரதாயத்திற்காக அழைத்தாக வேண்டும் என்கின்ற சூழ்நிலை அவ்வளவுதான்.  என்குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே இது தெரிந்திருந்தது. எனவே2014 ம் ஆண்டு நடந்த எனது திருமணத்திற்கு அழைக்கப்படாமல் இருந்திருந்தால்அது வேறு விதமாக இருந்திருக்கும்.!  நிறைய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியதுஇருந்திருக்கும்.” என்றார்.  உண்மையான காரணத்தை நான் வெளியில் சொல்ல முடியாத சூழ்நிலையில், வைரமுத்துவை ஏன் அழைக்கவில்லைஎன்று என்னை கேட்டால், என்னால் என்ன பதில் சொல்லிருக்க முடியும்?

மேலும், ”இது முற்றிலும் நெறிமுறை சார்ந்த விஷயம். மாறாக நான்  அடி பணிந்தேன் என்று அர்த்தம் இல்லை.!”

இவ்வாறு சின்மயி இன்மதி.காம் செய்தி தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருந்தார். சின்மயின் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றுஎந்த சந்தேகமும் இல்லை.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles