Read in : English
மெக்கன்ஸீ-யின் குறிப்புகளின் கொடை(பங்கு)யானது பழைய சென்னைப் பகுதியின் வரலாற்றை அறிந்து ஆராய எவ்வளவு உதவியிருக்கின்றது என்பதைப் பற்றி போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. இந்தக் குறிப்புகளில் மெக்கன்ஸீ 2000 வருடங்களுக்கு முன்பிருந்த வரலாற்றை விவரித்து, அதில் புலியூர் கோட்டம் மற்றும் அதனைஆண்ட குரும்பர்கள் மற்றும் அவர்களுக்கு பின் ஆண்ட தொண்டைமான் பற்றி பதிவுச் செய்துள்ளார். புலியூர் கோட்டத்தை (சென்னையின் பல பகுதிகள் இதில் அடங்கும்) பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டக் காலம் வரை தொடர்ந்து பல ஆட்சியாளர்கள் ஆண்டு இருக்கின்றனர்.
கொலொனெல் கோலின் மெக்கன்ஸீ – பிரிட்டிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனியின் அதிகாரியாக பணியில் சேர்ந்து, பின்னால் இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனெரல்ஆக நியமிக்கப்பட்டார்.
பேராசிரியர் டி.வி. மகாலிங்கம் மெக்கன்ஸீ யின் கொடையைப் பற்றி கூறுவதாவது: “கிழக்கு இந்தியக் கம்பெனி யின் பல ஊழியர்கள் போல் இல்லாமல், தங்கப்பாதையை தேடாமல், உலகத்தின் கிழக்கு பகுதியை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியது, இந்தியாவின் வரலாற்றுத்துறைக்கு கிடைத்த மிக பெரிய அதிர்ஷ்டம் என்று தான் சொல்லவேண்டும்.”.
மெக்கன்ஸீ 1754 -ல் ஸ்காட்லாந்தில் பிறந்தார். அவர் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி ,1783 -ல் சென்னை வந்திரங்கியபொழுது வாரன் ஹேஸ்டிங்க்ஸ் இந்தியகவர்னர் ஜெனெரலாக இருந்தார். மெக்கன்ஸீ தனது இறுதிக் காலம்வரை அதாவது மே மாதம் 8 ஆம் தேதி, 1821 ஆம் ஆண்டுவரை இந்தியாவிலேயே இருந்தார்.
38 ஆண்டுகளுக்கு மேலாக தேசப்படங்கள், கல்வெட்டுகள், வரைப்படங்கள், நாணயங்கள், அசல் கையெழுத்துக் குறிப்புகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் தென்னிந்தியமொழிகளில் மற்றும் சமஸ்கிருதத்தில் உள்ள இலக்கியங்கள் ஆகியவற்றில் இருந்து நிறைய தகவல்களை திரட்டிக்கொண்டார்.
ஹொரஸ் ஹேமேன் வில்சன் மெக்கன்ஸீயின் கடின உழைப்பை பதிவுச் செய்திருப்பது என்னவென்றால் 1,568 இலக்கிய கையெழுத்திலானக் குறிப்புகள், 2,070 உள் நாட்டு பகுதிகளைப் பற்றியக் குறிப்புகள், 8,076 கல்வெட்டுச் செய்திகள், 2,159 மொழிப் பெயர்ப்புகள், 79 ப்ளான்கள், 2,630 வர படங்கள், 6,218 நாணயங்கள், 146 விக்கிரகங்கள் மற்றும் பல பண்டையப் பொருட்கள் ஆகியவற்றை சேகரித்து விரிவான ஆறாழ்ச்சியை மேற்கொண்டார் என்பதுதான்.
இந்த (மெக்கன்ஸீயால் சேகரிக்கப்பட்டவை) முழு அறிவுப் பெட்டகத்திற்கு ஈடு இணை இல்லை. மேலும் இந்த அறிவுப் பெட்டகத்தில் பண்டைய இந்தியாவை பற்றி அறிந்துகொள்ளத் தேவையான அடிப்படைச் செய்திகள் இருந்தன. இந்தச் செய்திகளை மெக்கன்ஸீ –யின் கையெழுத்துக் குறிப்புகள் அல்லது மெக்கன்ஸீ தகவல்கள் என்றுஅழைக்கின்றனர்.
மெக்கன்ஸீ மதுரையில் பிராமணர்களையும் மற்றும் தமிழ், சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற பண்டிதர்களையும் சந்தித்து இந்தியர்களின் பழைய பழக்க வழக்கங்களைப்பற்றி அறிய அதிக வேட்கைக் கொண்டார். மதுரையில் புரதானங்களின் சேகரிப்பை மேற்கொள்ளத் திட்டம் தீட்டினார். இவருடைய சேகரிப்பான இந்தியாவைப் பற்றியவரலாற்றுப் பதிவுகள் மிகவும் பரந்தவை மற்றும் உபயோகமானவை.
மெக்கன்ஸீ தென்னிந்தியாவில் பரந்த ஆராய்ச்சியை காவெல்லி வெங்கட போரைய்யா (மெக்கன்ஸீயின் ஆராய்ச்சிக்கு உதவியாளராகவும் மற்றும் இவரும் தகவல்களை சேகரிப்பதில் மிகவும் திறமைசாலி) என்பவரை உதவியாளராகக் கொண்டு மேற்கொண்டார்.
போரைய்யாவுடன் 1795-96 இருந்து அர்ப்பணிப்புள்ள இந்திய உதவியாளர்கள் குழு ஒன்றும் மெக்கன்ஸீயின் ஆராய்ச்சிக்கு உதவிச் செய்ய நியமிக்கப்பட்டது. போரைய்யாவின் இறப்புக்குப்பின் அவரது தம்பி காவெல்லி வெங்கட லட்சுமய்யா தலைமை மொழிப்பெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1810-ல் சார்லஸ் க்ராண்ட், எம்.பி. மற்றும் கிழக்கு இந்தியக் கம்பெனியின் சேர்மனும் ஆகிய இவர் மெக்கன்ஸீயின் பங்களிப்பை பாராட்டிக்கூறியதாவது – இந்தியாவின் உண்மையான வரலாறு மற்றும் கடந்தகால நிகழ்ச்சிகளின் அட்டவணை ஆகியவற்றை அளித்திருக்கின்றார் மற்றும் இவர் கடந்த கால இந்தியாவைப்பற்றிபதிவுசெய்யப்பட்ட ஆதாரங்களை திரட்டி ஆராழ்ச்சியை மேற்கொண்டார் என்றும் கூறினார்.
கடந்தகாலங்கள், நிகழ்வுகள், நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள் உலோகங்களிலும் காகிதங்களிலும் பாதுகாக்கப்பட்ட மானியங்கள் ஆகியவற்றைப் பற்றியும் வெளியிட்டிருக்கின்றார் என்றும் குறிப்பிட்டார்..
ராபர்ட் டபுள்யு. விங்க் மெக்கன்சீயைப் பற்றி குறிப்பிட்டிருப்பதாவது மெக்கன்ஸீ அலுவலகரீதியாக இல்லாமல் அவராகவே விரும்பி இந்த தகவல் சேகரிப்பில் ஈடுப்பட்டிருக்கின்றார். இப்படி ஒரு தனி மனிதனாக செய்த கடின உழைப்பிற்கு எதுவுமே ஈடாக முடியாது. இவரது குழுவினர் கிராமத்தலைவர்களை சந்தித்து ஒவ்வொருச் சுவடிகளின் உண்மைத்தகவல்களை சேகரித்து இறுதியில் மதிப்பீடுச் செய்தனர். சேகரிப்புகள் தென்னிந்தியாவின் தொன்மையானநாகரீகத்தையும் கடந்தப் பரம்பரையையைப் பற்றியும் ஒவ்வொரு மொழிக் குறிப்பும் உணர்த்துபவையாக இருந்தன. அவற்றில் சில இப்பொழுதும் ஆராய்ச்சிச்செய்யப்படுகின்றன.
மெக்கன்ஸீ அவரது முயற்சியில் அவரே முன்னோடி என்று பேராசிரியர் டி.வி. மகாலிங்கம் கூறுகின்றார். மேலும் இந்தியாவின் புராதானக் காலத்தைப் பற்றிய இந்தஸ்பெஸல் ஆராய்ச்சி முயற்சியை இவருக்கு முன்னால் யாரும் மேற்கொள்ளவில்லை . இந்த முயற்சியின் பயனாக இந்தியாவில் 40,000 சதுர மைல்கள் நில அமைப்புபற்றிய அளவீடு எடுக்கப்பட்டது. இதனால் இந்திய (தேச பொதுப் படம்) பொது மேப், மாகாண சம்பந்தமான பல மேப்களும், புராதனத்தைப்பற்றி அறிய மேற்கொண்ட சர்வேமூலம் கிடைத்ததாக கூறுகிறார்.
மெக்கன்ஸீ –யால் வழங்கப்பட்ட முக்கியமான தகவல்கள் என்னவென்றால் கிராம சார்ந்த பல விவரங்களான ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட நில மானியம், தென்னிந்தியாவைத் தாண்டியும் புனித யாத்ரிகர்களுக்காக சிறு மற்றும் பெரு நகரங்களில் ஏர்படுத்தப்பட்ட சத்திரங்கள் ஆகியவை.
முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த தலையாய முயற்சியானது தென்னிந்தியாவைப் பற்றி இன்னும் ஆராய்ந்து அறியவும் மற்றும் அறியப்படாத பல அயிரக்கணக்கானதகவல்களை அறியவும் உதவும்.
மெக்கன்ஸீ தன் ஆய்வுக்காக 70,000 சதுர மைல்கள் தென்னின்ந்தியாவில் சர்வேச் செய்துள்ளார்.
எழுத்தாளர் சந்தீப் பாலகிருஷ்ணா மெக்கன்ஸீயின் முயற்சியைப் பற்றிக் குறிப்பிடுவது யாதெனில் மெக்கன்ஸீயின் குறிப்புகள் விலை மதிப்பற்றவை, அவற்றைப்போற்றி (கொண்டாடி) மகிழத் தேவையான தகவல்கள் அதில் உள்ளன. மேலும் இதில் உள்ளத் தகவல்கள் எல்லாம் உண்மையானவை, அவற்றை பின்பற்ற வேண்டும். இவரது முயற்சி பரந்தது மட்டுமில்லை தரமும் கூடியதுதான். இவரின் சேகரிப்பை ஆராயும்பொழுது 1,568 இலக்கிய கையெழுத்துச்சுவடிகள், 2,070 உள்நாட்டின் தன்மைப்பற்றியக் குறிப்புகள், 8,076 கல்வெட்டுத் தகவல்கள், 2,159 மொழிப்பெயர்ப்புகள், 79 ப்ளான்கள், 2,630 வரைப்படங்கள், 6,218 நாணயங்கள் மற்றும் 146 விக்ரகங்கள் ஆகியவைநமக்கு முக்கிய வரலாற்று ஆதாரங்களாக விளங்குகின்றன.
1821-ல் கோலின் மெக்கன்ஸீ இறந்தபின், அவரது கையேடுகள் அவரது மனைவி திருமதி பெட்ரோனெல்லாவிடமிருந்து பெறப்பட்டன. ராயல் ஏசியாட்டிக் சொசைட்டி ஆஃப்பெங்கால் –ன் செயலாளர் ஹாரஸ் ஹேமேன் வில்சன் மெக்கன்ஸீயின் கையேடுகளை 1838-ல் பட்டியல் தயார் செய்தார். பல வால்யூம்களாக மெக்கன்ஸீயோடசேகரிப்புகள் தயார்ச் செய்யப்பட்டன.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மெக்கன்ஸீயுடைய சேகரிப்புகளில் மூன்று வால்யூம்கள் தென்னிந்திய கோவில்களின் கல்வெட்டுகள் பற்றியவை. இவற்றை கவர்மெண்ட் ஓரியண்டல் மேனுஸ்கிரிப்ட்ஸ் லைப்ரரி, மெட்ராஸ் பதிப்புச் செய்தது.
மெக்கன்ஸீ மற்றும் அவரது குழு அளித்த தகவல்கள் மற்றும் கையெழுத்து குறிப்புகள் கதைகள், செய்யுள்கள், பல வித்தகர்கள் (அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் புகழ்பெற்ற ஆட்சியாளர்கள்), ஜெயின் இலக்கியங்கள், வானவியல் சாஸ்திரங்கள் மற்றும் தத்துவங்கள் பற்றியவை.
மெக்கன்ஸீயின் குறிப்புகள் பல முக்கியத்துவம் வாய்ந்த தென்னிந்தியக் கோவில்களைப் பற்றிய வரலாற்றை விவரிக்கின்றன. அவை இப்பவும் பயன்படக்கூடியவகையில்உள்ளன என்று நிரூபணம் ஆகியுள்ளது என்று பேராசிரிய மகாலிங்கம் கூறுகிறார்.
மெக்கன்ஸீயின் குறிப்புகள் மன்னர்களின் ஆட்சியைப் பற்றியும் கோவில்களின் புராதானத்துடன் வடிவமைத்ததும் மற்றும் வடிவமைத்த கோவில்களை பழமை மாறாமல் பாதுகாத்ததையும் (இத்தனைக்கும் மன்னர்கள் வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்) உணர்த்துகின்றன.
அவரது சேகரிப்பில் முக்கியமானது என்னவென்றால் சிதம்பரம் கோவில் மற்றும் பல தென்னிந்தியக் கோவில்கள் பற்றியத் தகவல்கள். குறிப்பாக மைசூர் கோவிலும்அதற்கு மான்யம் அளித்த திப்புசுல்தான், போன்ற பல மன்னர்களைப் பற்றியத் தகவல்கள் இந்தியாவின் முந்தைய வரலாற்றையும் நாகரிகத்தையும் அறிய உதவுகின்றது.
அவரது கல்வெட்டுகள் ஆராய்ச்சியும் குறி[ப்புகளும் மதிப்புமிக்கவை என்றும் ஆகையால் கல்வெட்டுகள், நிலத்தைப்பற்றிய பதிவுகள், உள்நாட்டுத்தன்மைப் பற்றியகுறிப்புகள் ஆகியவற்றை பாதுகாக்கத் தவறினால் மீண்டும் தகவல்களை சேகரிப்பது என்பது முடியாத காரியம் என்று பேராசிரியர் டி.வி. மகாலிங்கம் மற்றும் டி.என். சுப்ரமணியன் தெரிவித்திருக்கின்றனர்.
டி.வி. மஹாலிங்கம், கே.ஏ. நீலகண்ட ஸாஸ்திரி மற்றும் எஸ்.கே. அய்யங்கார் ஆகியோர் மெக்கன்ஸீயுடைய படித்து ஆராய்ந்து நன்மையடந்துள்ளனர். சென்னைபல்கலைக்கழகத்தில் மெக்கன்ஸீயுடைய குறிப்புகளைப் பற்றிய சிறிய பட்டியல் பேராசிரியர் டி.வி. மகாலிங்கம் தலைமையிங்கீழ் தொகுக்கப்பட்டது. இந்த பட்டியலானதுதென்னிந்திய வரலாற்றைப் பற்றியக் கருத்துகள் 224 ஆக தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் தொகுக்கப்பட்டக் கருத்துகள் தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம்மொழிகளில் உள்ளன.
மெக்கன்ஸீயுடைய குறிப்புகள் பரந்த அளவில் ஏஸியாட்டிக் ஜர்னல், தி மெட்ராஸ் ஜர்னல் ஆஃப் லிட்ரேச்சர் அண்டு சைன்ஸ் மற்றும் ஜர்னல் ஆஃப் திராயல் ஏஸியாட்டிக் சொசைட்டி இன்னும் பலவற்றிலும் வெளியிடப்பட்டுள்ளன.
மெக்கன்ஸீயின் சேகரிப்புகளில் சிலவற்றை சென்னைக்குக் கொண்டுவந்து சென்னை பல்கலைக்கழகத்தில் வைத்திருந்தார்கள். பின்பு அவை கோட்டூர்புரத்திலுள்ளபேரரிஞர் அண்ணா காம்ப்ளக்ஸிலுள்ள அரசு ஓரியண்டல் லைப்ரரி-யில் வைத்துள்ளார்கள். சிலவற்றை பிரிட்டிஷ் நூலகங்களிலும் மற்றும் மியூசியத்திலும்வைத்துள்ளார்கள் – இவற்றை சென்னைக்கு கொண்டுவந்து குறிப்பிட்ட சில தென்னிந்திய வரலாற்றை ஆராய முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.
எழுத்தாளர் சந்தீப் பாலக்ருஷ்ணா குறிப்பிடுவது என்னவென்றால் – வரலாற்றை வேறொருசிறந்த வழியில் ஆராய்ந்து மேலும் விரிவடையச் செய்வதில் விருப்பம்இருந்தாலும் அப்போது இருந்த பிரிட்டிஷ் இந்திய அர்சாங்கம் பலமாக மறுத்துவிட்டது. சில எதிர்பார்க்காத/வியப்பான விஷயங்கள் நடந்தன – அவை இந்த ஆராய்ச்சியைவிஸ்தீரணம் செய்யக் கேட்ட உரிமைக் கூட கர்ஷன் போன்ற வைசிராய்களால் மறுக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இந்த மாதிரி நடந்தது இதுவே முதல்முறை.
இருந்தாலும் மெக்கன்ஸீயுடைய குறிப்புகள்/சேகரிப்புகள் மற்ற வரலாற்று பதிவுகளில் இருந்து தெளிவாக வேறுபடுகின்றது. இதில் மெக்கன்ஸீயின் பதிவுகளிலிருந்துஒரு உதாரணத்தை நாம் தெரிந்துக்கொள்ளலாம் அதாவது பாளையங்களின் கட்டுப்பாடான ஆட்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.
பாளையங்களை, காவல் மற்றும் சில நிர்வாக அமைப்புகளானது பற்றி விவரிக்கும்பொழுது அவை களின் நிர்வாக திறன் வியப்படையும்படியாக இருந்தன என்று.மெக்கன்ஸீயின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஏதோ ஆங்கிலேயர்களின் கருணையால் இங்கே ஒரு சிறந்த ஆட்சி முறை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது என்ற ஒரு மாழையை சிலர்உருவாக்குகிறார்கள். அது மிகவும் தவறு என்றும்., இந்தியாவின் பழைய காலத்தில் இருந்த நகரங்களிருந்தும் கிராமங்கள் வரை, மிகவும் சிறப்பான, பலமான,மக்களின் தேவைக்கு ஏற்றாற்போல் ஒரு அற்புதமான நிர்வாக அமைப்பு இருந்தது என்றும் அதுவே சிறப்பான அமைப்பு என்று மெக்கன்ஸீயே தெளிவாககுறிப்பிட்டுள்ளார் என்று எழுத்தாளர் சந்தீப் பாலக்ருஷ்ணா கூறுகிறார்.
மெக்கன்ஸீ-யின் குறிப்புகளில் 2000 வருடங்கள்க்குமுன் சென்னையை ஆண்ட குரும்பரிகளின் ஆட்சியைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குரும்பர் ஆட்சிக் காலத்தில் இந்தப் பகுதியை குரும்பர் பூமி என்றும் குரும்பர் ஆட்சிக்காலத்தில் 24 கோட்டங்களாக குரும்பர் நாடு பிரிக்கப்பட்டிருந்தது என்று மெக்கன்ஸீ-யின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த 24 கோட்டங்களில் புலியூர் கோட்டம்ஒரு கோட்டமாக இருந்துள்ளது. இந்த 24 கோட்டங்களும் சேர்ந்தது தான் வட தமிழ்நாடு. இவை தான் தொண்டைமண்டலம் என்று பின்புவழங்கப்பட்டது .
தொண்டைமான் தொடர்ந்து புலியூர் கோட்டம் உள்ளிட்ட 24 கோட்டங்களையும் ஆட்சிப்புரிந்தார். ஆனால் அந்த புலியூர் கோட்டம் உட்படஅந்த 24 கூட்டங்களின் அமைப்பும் அதிகாராத்தையும் தொண்டைமான் மாற்றவில்லை. அதை செம்மையாக அமுல்படுத்தினான். புலியூர் கோட்டம் உட்பட அந்த 24 கூட்டங்களின் அமைப்பு, தொண்டைமானுக்கு பிறகு வந்த ஆட்சிகள் (பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர சாம்ராஜ்யங்கள் உட்பட) காலத்திலும் தொடர்ந்து இயங்கின. அத்துணை மன்னர்களின் ஆட்சிகளிலும் சிறிய மாறுதல்களுடன் புலியூர் கோட்டம் என்ற நிர்வாக, நகர அமைப்பு தொடர்ந்து இயங்கியது. அதாவது 1,700 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பழைய சென்னையான புலியூர் கோட்டம் என்ற நிர்வாக அமைப்பு நீடித்ததது. மெக்கன்ஸீயின் குறிப்புகளின்படி புலியூர் கோட்டம் சார்ந்த பகுதிகளானவை எழுமூர் – தற்பொழுதுள்ள எக்மோர், மயிலார்பில் – தற்போதுள்ள மைலாப்பூர் முதல் திருவான்மியூர் வரை, கோயம்பேடு முதல், மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி வரை, நங்கநல்லூர் முதல் கிண்டி, ஆதம்பாக்கம், திருநீர்மலை, பல்லாவரம் வரை, திருசூலம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, தாம்பரம், பொழிச்சலூர், சோமங்கலம், மணிமங்கலம் வரை — இன்றைய சென்னை பெருநகர் போன்ற பெரிய நகர அமைப்பாக புலியூர் கோட்டம் திகழ்ந்தது.
புலியூர் கோட்டம் என்ற பெயர் தற்போது சென்னையிலுள்ள கோடம்பாக்கம் அருகில் உள்ள புலியூர் என்ற கிராமத்தின் பெயரிலிருந்துத் தோன்றியது. புழல் கோட்டம்என்பது தற்போது செங்குன்றம் அருகிலுள்ள புழல் என்ற கிராமத்தின் பெயரிலிருந்து தோன்றியது.
பல வரலாற்று அறிஞர்கள் கூட தொண்டைமண்டலமானது 24 கோட்டங்களாக இருந்ததாகவும் அவற்றில் ஒன்று புலியூர் கோட்டம் என்றும் சென்னை பகுதிகள் புலியூர் கோட்டத்தின் கீழ் இருந்தன என்றும் பதிவுச் செய்துள்ளனர்.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ளப்பகுதிகளில் உள்ள பலக் கல்வெட்டுகள் சென்னையில் உள்ள பல பகுதிகள் புலியூர் கோட்டம் கீழ் இருந்தவை என்றுத்தெரிவிக்கின்றன.
எக்மோர், மைலாப்புர், திருவான்மியூர், கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், நந்தம்பாக்கம், திருநீர்மலை, வேளச்சேரி, திரிசூலம், குன்றத்தூர், மாங்காடு, தாம்பரம், சோமங்கலம், பொழிச்சலூர், மணிமங்கலம் ஆகியவை புலியூர் கோட்டத்தைச் சேர்ந்தவை (பகுதிகள்) என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் 7 ஆம் நூற்றாண்டிலிருந்து பல்லவ, சோழ, பாண்டியர், விஜயநகர சாம்ராஜ்யத்தின் போன்ற மன்னர்களின் ஆட்சிக்காலம் வரையுள்ளத் தகவல்களைத் தெரிவிக்கின்றன. ஒரு வாசகர், நந்தன் கௌஷிக் என்பவர், நமது இக்கட்டுரையின் புலியூர் கோட்டம் பற்றிய கல்வெட்டுச் செய்திகளுக்கு இன்மதி.காம்-ல் பதில் தந்திருக்கின்றார். அவரது பதில்என்னவென்றால் புலியூர் கோட்டம் பற்றிய கல்வெட்டுகள் சோழர் லத்திலிருந்து அதுவும் 11 ஆம் நூற்றாண்டுக்கு பின்பிருந்து தான் வந்திருக்கலாம் என்றுதெரிவிக்கிறார். இது தவறான ஒரு மதிப்பீடு என்று ஆதாரபூர்வமாக தெரிவிக்கிறேன். . பல்லவக் காலத்திலிருந்து, 9ஆம் நூற்றாண்டு முதல் கூட, சென்னையின் பல பகுதிகள் புலியூர் கோட்டத்தில் இருந்தன என்று கல்வெட்டுகளின் ஆதாரங்கள் உள்ளன. மேலும் பல்லவர் காலக் கல்வெட்டுகளைப்பற்றி, மற்றும் சோழர், பாண்டியர், விஜயநகர சாம்ராஜ்யத்தின் கல்வெட்டு ஆதாரங்களுடன் நான் நிரூபிக்க தயார் என்று ஆணித்தரமாக அந்த நண்பருக்கு தெறிவித்துக்கொள்கிறேன்.
கல்வெட்டுகள் பல்வேறு ஆட்சியாளர்களின் காலங்களில் ஏற்படுத்தப்பட்டவை – அவற்றில் பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் பல ஆட்சியாளர்களின் காலத்தில்ஏற்பட்டவைகளும் அடங்கும்.
இந்த வாசகர் அளித்துள்ள மற்றொருத் தவறானத் தகவல் என்னவென்றால் ஆகஸ்டு 22, 1639 சென்னை நகரம் உருவாக அடிக்கல் நாட்ட/அஸ்திவாரம் போடப்பட்டதாக கூறியுள்ளார். இதுவும் சர்ச்சை ஆனதுதான். ஏனெனில் மார்ச் 1 ஆம் தேதியில் சந்திரகிரி அரசருக்கு ஃபிரான்ஸிஸ் டே என்பவரால் கட்டணம் கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. . மார்ச் 1 ஆம் தேதியே ஒப்பந்தம் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரமாக, இரண்டு ஆங்கிலேயர்கள் , இரண்டு ஆங்கில புத்தகங்கள் மூலமாக ஆதாரத்தைவழங்கியுள்ளார்கள். பின் 1639 ஆம் வருடத்தில் ஜுலை 22-ல் தங்கமுலாம் பூசிய ஒப்பந்தப் பத்திரத்தில் அரசரும் ஃபிரான்ஸிஸ் டேயும் கையெழுத்திட்டனர்.
மேலும், முதல் முதலாக சென்னையை சார்ந்த கிராமங்கள் ஒரு வட்டாரத்துக்குள், மெட்ராஸ் என்ற அமைப்பின் கீழ், கொண்டுவரப்பட்டன என்ற தவறான தகவலை தெரிவிக்கிறார். இந்த கிராமங்கள் எல்லாம் ஏற்கனவே புலியூர் கோட்டம் என்ற அமைப்பின் கீழ், ஒரே அமைப்பின் கீழ், ஏற்கனவே செயல்பட்டு, இயங்கிக்கொண்டிருந்தது என்று அவருக்கு தெரிவிக்கிறேன். இதற்கு ஆதாரமாக கிட்ட 100 கல்வெட்டுக்கள் உள்ளன.
இதிலிருந்து 2000 வருடங்களுக்கு முன்பு குரும்பர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து புலியூர் கோட்டம் தொடர்ந்து இருந்ததாகவும்மற்றும் அதன் கீழ் இருந்த பகுதிகளும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. பெரியப் புராணமானம் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த பகுதிகளைப்பற்றிகுறிப்பிடுகிறது.
மேலும் , 5 மற்றும் 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் பற்றி எடுத்துரைக்கும்போது மைலாப்பூர், திருவான்மியூர், மற்றும் திருநீர்மலைஇருந்ததாகக் கூறுவதை உதாரணமாகக் கொள்ளலாம். இந்தப் பகுதிகள் புலியூர் கோட்டத்தைச் சேர்ந்தவை என்று வேறு சில இடங்களிலிருந்த கல்வெட்டுகளும் உறுதிச்செய்கின்றன.
பிரிட்டிஷ்காரர்களால் ஒன்று சேர்த்து ஒரு நகரமாக அதாவது சென்னையாக உருவாக்குவதற்கு முன்பே இந்தப் பகுதிகள் புலியூர் கோட்டம் என்ற நகரத்தின் பகுதிகளாக இருந்துள்ளன. ஏற்கனவே அந்தந்த பகுதியிலுள்ள, புலியூர் கோட்டத்தின் அமைப்பின் கீழுள்ள கிராம சபைகளின் மூலமாக மக்கள் வரியை செலுத்திருந்தார்கள். அந்த வரிகள் தன் கஜானாவிற்கு வரவேண்டும் என்று ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு, அந்த கிராமங்களை வலுக்கட்டாயமாக மதராஸ் என்ற அமைப்பின் கீழுள்ளதால் அறிவித்து, அந்த வரிகைளை ஆங்கிலேயர்கள் தங்கள் கஜானாவை நிரப்பிக்கொண்டார்கள்.
Read in : English