Read in : English

கிருஷ்ணகிரி மாவட்டம் பென்னேஸ்வரமடம் கோயிலில் உள்ள கல்வெட்டில் மதராஸபட்டினம் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. ஆம் இன்று ஜூலை 21, 2018 மெட்ராஸ் என்ற நகருக்கு வயது 651. கிருஷ்ணகிரி மாவட்டம், பெபெண்ணையாறு அருகில் உள்ள பென்னேஸ்வரமடம் கோயிலில் 1367 வருடம் இப்போதைய  ஆங்கிலமாதக் கணக்கின்படி ஜூலை 21ஆம் தேதி மதராஸபட்டினம் என்ற நகரை நிர்மாணித்தார்கள் என்ற குறிப்பு கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் இன்று மெட்ராஸ்  என்ற நகரம் உருவாகி 651 ஆண்டுகள் ஆகியுள்ளன. வரலாற்றில் மிக பழைமையன நகரம் நம் மெட்ராஸ். இந்த நகரம் ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகு ஆகஸ்டு 22, 1639ஆM ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட நகரம் அல்ல என்பதே உண்மை.

இந்தக் குறிப்பு கிருஷ்ணகிரி மாவேடுட்டு கல்வெட்டுகள் எண் 77/பி, 1973-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தொல்லியல் துறை சர்வேயில் முனைவர் எஸ்.ராஜவேல் மற்றும் முனைவர் ஒய். சுப்பராயலு தொகுத்த இஜயநகர் கல்வெட்டுகள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்தினை இந்தியன் கவுன்சில் ஆப் ஹிஸ்டாரிகல் ரிசர்ச் வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தில் அவர்கள் மதராஸபட்டினம் வடக்கில் இருந்த ஒரு சிறு துறைமுகம் என்றும் புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர் வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அங்கிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த சாட்சியம், காவிரிபட்டினம் அருகில் ஓடும் பெண்ணாற்றின் கரையில் இருக்கும் பென்னேஸ்வரமடம் கல்வெட்டில் கம்பனா-2 என்பவரால் ஜூலை 21, 1367ஆம் ஆண்டு வஎழுதப்பட்டுள்ளது. அதில் மதராஸ்பட்டினம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளாது என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் எஸ்.ராஜவேலு.

அவர் மேலும் கூறுகையில் மெட்ராஸ் ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகு உருவாக்கப்படட் நகரம் என சில வரலாற்று ஆய்வாளர்கள் திரித்துக் கூறுகின்றனர். ஆனால் மதராஸ்பட்டினம் மற்றும் ஒட்கே கல்வெட்டுகள் ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னரே இந்த பட்டினம் உருவாகியது எனவும் அப்போதே இது பரபரப்பக இருந்த துறைமுகம் எனவும்  உறுதிபட கூறுகிறார்கள்.

இந்தக் கல்வெட்டில் பல்வேறு வெற்றிக் கதைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. கம்பனா என்னும் இளவரசர் சார்பில் அவர் அடைந்த வெற்றிகள் குறித்து யக்கர்மஹாபிரதானி சோமையப்ப டென்னாயக்கர் மகன் கங்காதரகுளி மரைய நாயக்கர் குறிப்பிட்டுள்ளார் என கூறுகிறார் முனைவர் ராஜவேலு. இதில் பல்வேறு மலைகள், கோட்டைகள், கடற்கரையோர நகரங்கள் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, தொண்டைமான்,(சம்புவராயர் மலை) தாலமலை, ராஜகம்பீரன் மலை மற்றும் புதுப்பட்டினம், நிலகங்கராயபட்டினம், மதராஸபட்டினம் என பல நகரங்கள் குறித்து எழுதப்பட்டுள்ளது என்று கூறுகிறார் ராஜவேலு. இந்த குறிப்புக்ளாஇ எழுத காரணம் அபோது கண்டகண்டான்வெளி பெருவாய்க்கால் என்கிற கால்வாய் பென்னையாறுக்கும் பெண்ணை நயினார் கோயிலுக்கு இடையில் அமைக்கப்பட இருந்தது. அதை முன்னிட்டெ இந்த குறிப்பு எழுதபப்ட்டுள்ளது என்கிரார் ராஜவேலு.

பென்னேஸ்வரமடம் கல்வெட்டு

சென்னை 2000 அறக்கட்டளையினர், கிருஷ்ணகிரிக்கு ஆய்வுய்வுப் பயணம் மேற்கொண்டபோது சென்னை நகரம்  கலாச்சார,இலக்கிய, தொல்லியல் மற்றும் இசை  வழியில் பழமையானது  என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்கிறார் ராஜவேலு. மெட்ராஸ் நகரத்தின் தொன்மையான பெயர் மதராஸபட்டினம் என்றும் 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகு அது மெட் ராஸ் என்று குறிப்பிடப்பட்டு வருகிறது எனவும் கூறுகின்றார்.

விஜயநகர பேரரசு பலாமைவதற்கு பல ஆண்டுகளுக்கு  முன்பே மதராஸபட்டினம் மிக பழகாக உருவாகியிருந்த துறைமுகம் என்றும் அதனால் தான் சென்னையை சுற்றி பல்வேறு ஏற்றுமதி சார் தொழில்கள் நடைபெற்றன எனவும் கூறுகிறார். இந்த கல்வெட்டு மட்டுமல்லாது பல்வேறு வராலாற்று சாட்சியங்கள் மெட்ராஸ் என்னும் பழைய நகரம் இருந்ததை குறிப்பிடுகின்றன.

கம்பனா எழுதிய கல்வெட்டில் அவர் புதுப்பட்டினம், சதிராபட்டினம்,(சதுரங்கப்படினம் ) நீலாங்கரை-இதன் பழைய பெயர் நீலாகங்கராயபட்டினம் உள்லிட்ட பல பட்டினங்களை அவர் கைப்பற்றியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். நீலாங்கரையான் என்பவர் சோழர்காலத்தில் பெரிய தலைவர். அவர் அக்காலகட்டத்தில் பல்வேறு கோயில்களுக்கு கொடுத்த நன்கொடை விவரங்களும் அந்த கல்வெட்டில் பொறிக்கபப்ட்டுள்ளது. மதராஸடப்ப்டினம் ராயபுரத்துக்கு அருகில் செயல்பட்ட துறையமுகம் என்பதால் அது ராயபுரம் என்றுதான் அழைக்கப்பட்டிருக்க  வேண்டும். ஆனால் அது விஜயநகர பேரரசின் கீழ் இருந்ததால் மதராஸபட்டினம் என்று அழைகக்ப்பட்டது என்று காரணம் கூறுகிறார் ராஜவேலு.

சோழர் ஆட்சிகலத்தில்  மதராஸபட்டினம் அருகிலொஉம் அதனை சுற்றியும் இருந்த நகரங்கள், ஊர்கள் குறித்தும் கல்வெட்டில் குறிப்புகள் உள்ளன. இது மதுரவாயல் பகுதிக்குக்கு மேற்குப்பகுதி நுழைவாயிலாக இருந்துள்ளது. இந்தக் கல்வெட்டில் புதுப்பாக்கம், இப்போதைய புதுப்பேட்டை பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் புதுப்பாக்கத்தில் இருந்து   சில நிலங்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு  தானமாக கொடுக்கப்பட்டது குறித்தும் கூறப்பட்டுள்ளது. சோழர் மற்றும் பல்லவர் கால கல்வெட்டில் மைலப்பர்(மயிலாப்பூர்) கோட்டூர்(கோட்டூர்புரம்) வெளிச்சேரி(வேளச்சேரி)தரமணிவே ளச்சேரி சிவன் கோயிலுக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட  தரமணி, தாம்புரம்(தாம்பரம்) ஆதன்பாக்கம்(ஆதம்பாக்கம்)குன் றத்தூர், மாங்காடு, மாபுலம்(மாம்பலம்) போரூர், விருகன்பாக்கம்(விருகம்பாக்கம்) பம்மல், பொழிசெலூர்(பொழிச்சலூர்) பற்றியும் எழுதப்பட்டுள்ளது.

மதராஸபட்டினத்தின் வடமேற்கு பகுதிகளாக வேப்பேரி வேஷருபடி(வியாசர்பாடி)பிரம்பூர் (பெரம்பூர்) இருந்தது என கல்வெட்டுகள் கூறுகின்றன. அதேகல்வெட்டில் சோழர் காலத்தில் பிரையபாக்கம் என்று குறிப்பிடபப்ட்டு பின்பு விஜயநகர் பேரரசில் அது புரசபாக்கம் என மாறி ஆங்கிலேயர் அதனை தங்கள் உச்சரிக்ப்புக்கு ஏற்ப புரசைவாக்கம் என மாற்றினர். புரசைவாக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது எக்மோர் நாடு. சென்னையில் உள்ள குரட்டூர்(கொரட்டூர்) திருவலிதாயம்(பாடி) அம்பத்தூர்(அம்பத்தூர் நாட்டின் தலைநகர்) திருமுல்லைவாயில், ஆகுடி(ஆவடி) சிங்கவிஷ்னுசதுர்வேதிமங்கலம்(மண லி)பால்குளத்தூர்(குளத்தூர்)ஆம் பில்வாயில்(ஆமுல்லைவாயில்)வெள் ளிவாயில்,வைக்காடு,சதிரம்(கணக் கன் சதிரம்) விண்ணூர்(மின்னூர்) ஆகிய ஊர்கள் பற்றியும் எழுதப்பட்டுள்ளது.

சென்னை- மெட்ராஸ் நகருக்கு வெறும் 380 வருடங்கள் தான் ஆயிற்று என்று குறிப்பிடுவதும் அதனை ஆங்கிலேயர் வருகைக்கு பிறகு உருவாக்கப்பட்ட நகரம் என குறிப்பிடுவதும் ஒரு அரலாற்று பிழை.
அந்நகரம் 2000 வருடங்கள் பழமையான நகரம். செப்டம்பர் மாதத்தில் சென்னை மக்கள் ஒன்று சேர்ந்து  சென்னை மாதம் என்று கொண்டாடுகிறார்கள். காரணம் செம்படம்பர் 30, 1996ஆம் ஆண்டு இந்த நகரம் அதிகாரப்பூர்வமாக சென்னை என பெயரிடப்பட்டது என்பதால். ஆனால்  ஆகஸ்டு 22, 1639 ஆம் ஆண்டிலிருந்தே அதாவது ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே மதராஸபட்டினம் என்ற நகரம் இருந்ததால் இதனை நாம் கொண்டாட வேண்டும். பெண்ணேஸ்வரம் கல்வெட்டு குறிப்புகள் சென்னை மிகப் பழமையான நகரம் என்பதை அறுதியிட்டு கூறுவதால் இந்நகரம் குறித்த்து நாம் பெருமை கொள்வோம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த துறைமுகத்தில் இருந்து உலகின் பல பகுதிகளுக்கு வியாபாரம் நடந்துள்ளது. இது ஒரு துறைமுக நகரமாக உருவாவதற்கு முன்பே மதராஸபட்டினம் என்ற நகரம் இருந்துள்ளது. நம் சென்னை – மெட்ராஸ் 2000 வருடங்கள் பழமையான நகரம் என்பதில் பெருமை கொள்வோம்;கொண்டாடுவோம்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival