Read in : English

டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையிலான  அமைச்சரவைக் கூட்டத்தில் ஆதார விலை நெல்லுக்கு குவிண்டாலுக்கு 200 ரூபாய்அதிகரிக்கப்பட்டு,1750 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.  அதுமட்டுமில்லாமல் உளுந்து உள்ளிட்ட பருப்புவகைக்களுக்கும் பருத்தி ஆகிய 14 வகை பயிர்களுக்கும்  ஆதார விலை அதிகரிக்க மத்திய அரசின் அமைச்சரவை ஒப்ப்புதல் அளித்துள்ளது.

நெல்லுக்கு குவிண்டாலுக்கு(100 கிலோ) 200 ரூபாய் அதிகரிக்கபப்ட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும்ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி பரவலாக  எழுந்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மூத்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், ‘’விவசாயிகளின் வாழ்வியல் சூழலும் பொருளாதார சூழலும்சந்தோஷமானதாக  இல்லை. அதனால் தான் விவசாயிகளில் பலர் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. விவசாய சங்கங்களின் முதன்மைகோரிக்கை, கடன்களை ரத்து செய்ய வேண்டும்; விளைபொருட்களுக்கு  நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதே. பருவநிலையும் சந்தையும்தான்விவசாயிகளுக்கு வருமானத்தைத் தரவல்லவை. பயிர் காப்பீட்டுத் திட்டதை மத்திய அரசு செயல்படுத்த முனைந்திருக்கிறது. ஆனால் அது விவசாயிகள்திருப்தி அடையும் விதத்தில் இல்லை. கடன் விவகாரத்தில் சீர்திருத்தமும் பொருட்களுக்கு அதிகவிலையுமே தீர்வை தருபவை’’ என்று கூறியுள்ளார்.
இன்மதி வேளாண்மை பிரிவு ஆசிரியர் எம்.ஜெ.பிரபு இது குறித்து கூறுகையில்,’’கடந்த 15 வருடங்களாக நெல்லுக்கு ஆதார விலை கிலோவுக்கு 1.50-3 ரூபாய் வரைதான் அதிகரித்து வருகிறார்கள். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் கூற்றுப்படி ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய விதைநெல், நிலம் பண்படுத்துதல், உரம், மருந்து, ஆள் கூலி என குவிண்டாலுக்கு ரூ.1549 செலவாகிறது. இதோடு உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை சொஸைட்டிக்கு எடுத்துச் செல்லும் செலவு தனி. இந்தநிலையில் ஒரு கிலோவுக்கு வெறும் 2 ரூபாய் அதிகரித்திருப்பது வேதனையளிக்கக் கூடியவிஷயம்.  இதில் ஒரு விவசாயி மகிழ்ச்சி அடைவதற்கு ஒன்றுமேயில்லை. நடைமுறையில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை கடன் கேட்க வந்தவர் போல்தான்  நடத்துகிறார்கள். தற்போது ஒரு கிலோ நெல்லுக்கு 15 ரூபாய் தருகிறார்கள். சன்னரக நெல்லுக்கு ரூ.16 வரை தருகிறார்கள். ஆனால் ஒரு ஹெக்டரில் நெல் உற்பத்தி செய்யப்படும் விலையை கணக்கிட்டுப் பார்க்கும்போது இந்த ஆதார விலை அதிகரிப்புக்குப் பிறகும் விவசாயின் பட்ஜெட்டில் துண்டு விழத்தான் செய்யும். இதனால் தான் பல விவசாயிகள் தனியார் தரகர்களை நாடுகிறார்கள்.  அவர்களும் அரசு கொடுப்பதை விட குறைந்த அளவே பணம் தருகிறார்கள். ஒரு விவசாயி எதிர்ப்பார்ப்பதெல்லாம் தான் உற்பத்தி செய்த  பொருட்களுகுக்கு நல்ல சந்தையும் அதற்கான விலையும் தான். ஆனால் அது இங்கு நடப்பதே இல்லை. 2019-ல் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் நிறுத்தியே அரசு இந்த 2 ரூபாய் அதிகரிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பு. மாறாக,  விவசாயிகளின் குறை தீர வேண்டுமானால் விவசாயத்தை தனியார் மயமாக்கினால் போதும்’’ என்கிறார், பிரச்சனைக்கு தீர்வுபெறும் நோக்கில்.


ரகுபதி

இதுகுறித்து செய்யூர்சிறுநகர் கிராமத்தை சேர்ந்த விவசாயி  பி.ரகுபதி கூறுகையில், “குவிண்டாலுக்கு 200 ரூபாய் என்று அதிகரிப்பதுவிவசாயிகளைப் பார்த்து இனமாக சில்லறைக் காசை  விட்டெறிவது போல உள்ளது. தமிழகத்த்தில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பல இடங்களில்விவசாயிகள் கௌரவத்துக்காகத்தான் விவசாயம் பார்த்துக்கொண்டுள்ளார்கள். டெல்லியில் பல நாட்கள் பட்டினியுடன் போரட்டம் நடத்தியும் மத்தியஅரசு எங்களை கண்டுகொள்ளவும் இல்லை. எங்கள் பிரச்சனை குறித்து விவாதிப்பதாகவும் இல்லை. இந்தியாவில் வேறு எந்த துறையிலாவது வெறும் 2 ரூபாய்,  விளைபொருளுக்கு உயர்த்துவார்களா?’’ என வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.

அடுத்து நம்மிடம்  பேசிய மதுராந்தகத்தைச் சேர்ந்த ஜெ. திருவேங்கடம் கூறுகையில்,

திருவேங்கடம்

‘’எதுவுமே கிடைக்காதற்கு  இந்த 200 ரூபாய் ஆதார விலைஅதிகரிப்பு பரவாயில்லை என்று சொல்லக் கூடிய விரக்தியான மனநிலையில்தான் இருக்கிறோம். குறைந்தபட்சம் 5-10 ரூபாய் விலை அதிகரிக்கவேண்டும் என மாநில, மத்திய அரசுகளிடம்  தொடர்ந்து கோரிக்கைவிடுத்தும் வெறும் 200 ரூபாய்தான் குவிண்டாலுக்கு தருவார்கள் என்றால் அரசுவிவசாயிகள் நலன் மீது கொண்டுள்ள அக்கறை அவ்வளவுதான்’’ என  கூறினார்.

“எப்போதோ ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் கூட மிஞ்சாது” என்று சொன்ன பழமொழி இன்றுவரை நிலைத்திருக்கிறது என்றால்காலம்காலமாக அரசாங்கம் விவசாயிகளி துன்பங்களைக் கண்டுகொள்ளவில்லை என்றுதானே அர்த்தம். காஞ்சிபுரம் பகுதிகளில் நெல் விளைவிக்கமோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சுவதில் இருந்து, நாற்றங்கால், நாற்று நடுவது உள்ளிட்ட அத்தனை வேலைகளையும் செய்தால், ஒரு ஏக்கருக்கு 25-30 ஏக்கர் வரைதான் நெல் கிடைக்கும். அந்த நெல்லுக்கு அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கலில் இதுவரை கிலோவுக்கு ரூ.16 தான் கொடுத்துவருகிறார்கள். ஆனால் உற்பத்தி செலவு அரசு கொடுக்கும் விலையை விட அதிகமாகத்தான் உள்ளது. இன்னும் கூட, அரசு நெல் விலையை ஏற்றும் என்றநம்பிக்கையில் நெல் மூட்டைகளை விறபனைக்கு கொடுக்காமல் அப்படியே வைத்திருக்கிறோம். கிலோவுக்கு வெறும் 2 ரூபாய் அதிகரிப்பதால்சிறு,குறு விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை’’ என்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எம்.கே.கோபிநாதன்.

கோபிநாதன்

 

விவசாய உற்பத்தி பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முன், விவசாய சங்கங்களிடம் அரசு கருத்துக் கேட்க வேண்டும். அதைவிட முக்கியம்அமைச்சரவை முடிவு எடுக்கும்போது விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அக்கூட்டத்தில் இடம்பெறுவது அவசியம் என்ற கோரிக்கையை அனைவரும் ஒட்டுமொத்த குரலில்  சொல்கிறார்கள்.  மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்குமா?

 

 


 

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival