Read in : English
கார்த்திக் குமார் கிண்டலுக்கு உள்ளாவது இது முதல்முறை அல்ல.இயக்குநர் மணிரத்தினத்தின் ‘அலைபாயுதே’ காலத்தில் இருந்தே அவர் கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறார். அதுவும் தமிழ் திரைப்படங்களில் அமெரிக்க மாப்பிள்ளையாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே நையாண்டி அவரைச் சுற்றி வருகிறது. கார்த்திக் தன் திரைப்படங்களில் தகுதி படைத்தவராக, வசதியானவராக இருப்பார். ஆனால் ஒரு பெண் விரும்புக்கூடிய ஆணாக அவர் இருக்க மாட்டார்.
மற்றவர்களின் கிண்டலுக்கு ஆளாகி வந்த கார்த்திக் குமார் தற்போது, ஒரு காமெடியனாக உருமாறியுள்ளார். ’’ஆல் இண்டியா பக்சோத்’’ ஷோவில் காண்பிக்கப்படுவதைப் போலான நகைச்சுவை இல்லை. எனினும், கார்த்திக் குமாரின் நகைச்சுவை அனைவரையும் கடுமையாகத் தாக்குவதாக இல்லாவிடினும், தாக்குதல்கள் இருக்கவே செய்கின்றன.
குறிப்பாக, அவர் தன் நடுத்தர வர்க்க சூழ்நிலைகளையே நகைச்சுவையாக்குகிறார்.‘செகண்ட் டிகாஷன்’ என்கிற தன்னுடைய காமெடி சீரியலில், தன் பாட்டி பல கிலோ பால் பாக்கெட்டுகளை பதுக்கியதை நகைச்சுவையாக்கிருப்பார். காலத்தின் ஓட்டத்தில் திரும்பவும் கார்த்திக் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டார். சுசி லீக்ஸுக்குப் பிறகு 7500 பேர் அவரை டிவிட்டரில் பின்தொடர்ந்தார்கள். சுசி லீக்ஸ் மக்களின் நினைவிலிருந்து மறைந்து போன பின்பும் அவரை அவர்கள் பின் தொடர்ந்தார்கள். ஏன்? ‘’நம்பிக்கை’’ என்கிறார் கார்த்திக், பெங்களூரு குட் ஷெப்பர்டு கான்வென்ட் ஆடிட்டோரியதில் 2017 செப்டம்பரில், நடைபெற்ற ஸ்டேண்டப் காமெடி நிகழ்வான ’பிளட் சட்னி’ என்ற நிகழ்ச்சியில் அவ்வாறு கூறினார். அதாவது, அவருடைய டிவிட்டர் அக்கவுண்ட்டில் இருந்தோ அல்லது அவரின் மனைவி சுசித்ராவின் டிவிட்டரிலோ பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் வெளிவராதா என்ற நம்பிக்கைதான். ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ காமெடி ஷோவின் நிகழ்ச்சி நிரல்களும் சில தத்துவார்த்த சிந்தனைகளும் தான் என்கிறார் கார்த்திக்.
சென்னையில் ’இவம்’ என்னும் நாடகம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி குழுவின் இணை நிறுவனராக கார்த்திக் அறியப்பட்டார். இந்த சூழ்நிலையில்தான் சுசி லீக்ஸ் வெளியானது. அந்தக் காலக் கட்டம் மிகவும் உக்கிரமான துயர் நிறைந்தது என்கிறார் கார்த்திக். அவருடைய மனைவி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில்தமிழ் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அக்காலக்கட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் அவருடைய டிவிட்டரில் பின்தொடர்ந்தார்கள். ஆமாம், ஒரே சமயத்தில் 4.5 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர். அதேபோல் அரை டஜனுக்கும் மேலான சுசிலீக்ஸ் போலி அக்கவுண்டுகள் வலம் வந்தன. அவற்றில் பல நிர்வாண வீடியோக்களும் வெளியாகின.
’’இதில் துயரமான சம்பவம் என்னவென்றால் என்மனைவி மருத்துவமனையில் இருக்கும் போது, நான் காவல் நிலையத்தில் டிவிட்டர் போலி கணக்குகளை நீக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்’’ என்கிறார் ஒரு பேட்டியில்.
”என் மனைவி மருத்துவமனையில் இருக்கும் போது, நான் காவல் நிலையத்தில் டிவிட்டர் போலி கணக்குகளை நீக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்’’
கார்த்திக் குமாரின் ஸ்டேண்ட் அப் காமெடியான ‘பிளட் சட்னி’ தொடர், போக் மீ, செகண்ட் டிகாஷன் ஆகிய இரண்டு தொடர்களுக்கு பிறகு மூன்றாவது தொடராக மேடையேறிக் கொண்டுள்ளது. இந்தியாவில் பல இடங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த நிகழ்ச்சி களைகட்டியது. அதனைத் தொடர்ந்து ‘அமேசான்’ தளத்தில் ஜூன் 8 ஆம் தேதி இந்த காமெடி நிகழ்ச்சி வெளியானது.
‘பிளட் சட்னி’ காமெடி, நடிகர் வடிவேலுவின் ‘இது ரத்தமா, தக்காளி சட்னியா’ என்ற காமெடியில் இருந்து உருவானது. தனக்கு வருவது தக்காளி சட்னி அல்ல, ரத்தம் தான்… அதுவும்பல்வேறு காயங்களில் இருந்து வரும் ரத்தம் என்கிறார் கார்த்திக். சுசி லீக்ஸ் வெளியான காலகட்டத்தில் டிவிட்டர் பயனாளர்களின் சீண்டலால் தான் உள்ளே ரத்தம் வடித்ததாகக் கூறுகிறார் கார்த்திக். அவரையும் அவர் மனைவியையும் அவமானப்படுத்தி பல டிவிட்கள் வலம் வந்தன. கலாச்சாரரீதியாக நாம் ஒருவரை ஒருவர் அவமானப்படுத்த ஆர்வமாக இருக்கிறோம் என்கிறார் கார்த்திக்.
பிளட் சட்னி, சில கெடுமதிகளை அமைதியுறச் செய்திருக்கிறது என்று கூறுகிறார் கார்த்திக். ஆனால் சுசிலீக்ஸ் பல பிரபலங்களை நடுக்கமுறச்செய்தது. அவர்கள் அவமானப் படுத்தப்பட்டார்கள். அவர்களின் அந்தரங்க வீடியோ பொதுவெளியில் பகிரப்பட்டது. சுசி லீக்ஸ், இணையதளத்தில் ஒருவிஷயம் எத்தனை வேகமாக பகிரபப்டுகிறது என்பதையும் அது எளிதாக ஒருவரை எப்படி அழிக்கிறது என்பதையும் காட்டியது.
பிளட் சட்னி ஒரு ஒப்புதல் வாக்குமூலம் போல் இருக்காது, நல்வழிப்படுத்துவாதக இருக்கும். ஆனால் யாரையும் குற்றம்சொல்வதாகவும் இருக்காது. கார்த்திக்குமார், சுசிலீக்ஸ் குறித்த சர்ச்சைகளுக்கு எந்தளவுக்கு நேர்மையாகக் கையாண்டிருக்கிறார் என்பதைக் காண, அமேசான் பாருங்கள்!
Read in : English