Read in : English
மழையில் நனைந்து வெயிலில் காயும் துப்புரவுப் பணியாளர்கள்
கொரோனா காலத்திலும் சரி, பெரும் மழை வெள்ளத்திலும் சரி, தூய்மைப் பணியாளர்களின் பணிக்கு ஓய்வு இல்லை. அவர்கள் ஒட்டுமொத்தமாக ஓய்வு எடுத்துவிட்டால் சென்னை நகரமே குப்பைக்களமாகிவிடும். பரபரப்பாக காணப்படும் சாலை ஆள் நடமாட்டமின்றி அமைதியாக இருக்க, கொட்டும் மழையில் ஒரு பெண், கையில் குப்பைகளை வாரி போடும்...
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ஸ்டைல்: ரஜினியின் இளமை; ரசிகர்களின் முதுமை!
இளமை போனால் திரும்ப வராது. இப்படிச் சொல்லி சொல்லி வளர்த்ததாலேயே, 40களுக்குள் தனி வீடு, கார், ‘கெட்டி’யான பேங்க் பேலன்ஸ் என்றொரு பாதுகாப்பான வாழ்க்கையை அடையத் துடிக்கிறது இன்றைய தலைமுறை. இதற்கு மாறாக, முந்தைய தலைமுறையோ ’என்றும் இளமை’ என்றொரு தாரக மந்திரத்தை வாழ்க்கைப் பாடமாகக் கொண்டிருந்தது. இது...
உலக நாயகனுக்கு கொரோனா: மூன்றாவது அலை சாத்தியமா?
அமெரிக்கா சென்று திரும்பிய உலக நாயகன் கமல் ஹாசன், தான் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் மருத்துவமனையில் தனிமைபடுத்திக்கொண்டுள்ளதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்....
அத்தியூர் விஜயா பாலியல் வன்புணர்ச்சி வழக்கு: புத்தகமாகிறது உண்மை வரலாறு!
பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜெய் பீம் திரைப்படம் எடுக்கப்பட்டு அது விவாதப் பொருளாகியுள்ள சூழ்நிலையில், 38 ஆண்டுகளுக்கு முன் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடி இனத்தைச்...
மத்திய சர்வே அறிக்கை: கட்டடக் கழிவுகளால் மாநகரங்கள் இழந்து போன வாய்ப்புகள்
தூய்மை மாநகரங்களுக்கான ஸ்வச் பாரத் அர்பன் மிஷன் என்பது நடுவண் அரசைப் பொறுத்தவரை வெற்றிகரமான மக்கள் புரட்சியாக இருக்கலாம். ஆனால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 4,320 மாநகரங்களில் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் அந்தத் திட்டம் இன்னும் முழுமையடையாமலும், வளர்ச்சி குன்றிய நிலையிலும்தான் இருக்கிறது....
கொரோனா பெருந்தொற்று: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போது கமல் வருவார்?
கொரோனா தொற்று வராமல் இருக்க இரண்டு கட்டத் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவரும், கொரோனாவைத் தடுக்கும் வகையில் எப்போதும் முன் எச்சரிக்கையுடன் கவனமாக இருப்பவருமான கமல் ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற செய்தி வந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று குறைந்து வருகிறது என்றாலும்கூட, இது முழு முற்றாக...
ஸ்வத்சித் சர்வேக்ஷன் அறிக்கை: கழிவு மேலாண்மையில் பின்தங்கியுள்ளதா தமிழ்நாடு?
இந்தியாவில் 40 லட்சம் மக்கள் தொகையிலிருந்து 25 ஆயிரம் மக்கள் தொகை வரையுள்ள இந்திய நகர நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பிரச்சினையைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டில் ஒரு நாளில் உருவாகும் நகராட்சித் திடக்கழிவு 1,40,980 டன்கள் என்று மக்களவையின் அதிகாரப்பூர்வத் தகவல்...
தடைகளைத் தாண்டி சாதனை: பொதுத்துறை நிறுவனத்தில் சட்ட உதவி மேலாளரான பார்வைத்திறனற்றவர்!
ஒரு சிறிய கிராமத்தில் தாழ்த்தப்பட்ட ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளியான ராம்குமார் பல்வேறு தடைகளைத் தாண்டி விடா முயற்சியுடன் சட்டப் படிப்பைப் படித்து, மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தில் உதவி சட்ட மேலாளராகப் பணிபுரிகிறார். வேலூர் அருகே உள்ள...
ஜெய்பீம்: ராஜாக்கண்ணு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நிஜ நீதிபதிகள்!
கடலூர் அருகே ஒரு கிராமத்தில் விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு, தான் செய்யாத குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் மரணமடைந்தது தொடர்பான வழக்கில் அப்போது வழக்கறிஞராக இருந்த நீதிபதி கே. சந்துருவின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய வாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அந்த...
வணிக நிதி இலக்குக்கான கட்டமைப்பை அமைத்துக் கொள்வது எப்படி?
சொந்த வாழ்க்கையாகட்டும், வணிகமாகட்டும் பலர் நிதி இலக்கை அமைத்துக் கொள்வதில்லை. என்னுடைய பல வருட தலைமை மற்றும் வணிகப் பயிற்சியாளர் அனுபவத்தில் இதைக் கண்கூடாக அறிந்திருக்கிறேன். அப்படியே இலக்கை நிர்ணயித்திருந்தாலும், அதற்கான தெளிவு இல்லாததையும் பார்த்திருக்கிறேன். நிதி இலக்கு இல்லாத வணிகம்,...
Read in : English