அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இன்னும் ஏன் தேவைப்படுகிறது?
கமலா இல்லாத மாளிகை என்னாகும்? சோனியா குடும்பத்தினர் அனைவரும் நீக்கப்பட்டுவிட்டால், காங்கிரஸ் என்னாகும்? காவியமெழுதாத காகிதமாகிவிடுமா? இப்போது மட்டும் என்ன வாழ்கிறது? மரணப்படுக்கையில் இருக்கும் கட்சிக்கு புத்துயிர் ஊட்டிவிடமுடியுமா? உயிர்த்தெழும் வித்தை தெரிந்த இயேசு கிறிஸ்து இருக்கிறாரா என்ன?...