Read in : English

பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னை  கல்வெட்டுகளில் பலமுறை தலைவர்கள் அல்லது அலுவலர்களை அவர்களது கொடையளிக்கும் குணத்தைக்கொண்டு நீலங்கரையன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். இவர்கள் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தோடு அதிக தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர். இவர்களது செயல்பாடுகள் சிறப்பிடம் கொடுக்கப்பட்டு(கே.வி.ராமன்)  குறிப்பிடப்பட்டுள்ளது. நீலங்கரையன் என்பது பொதுவான குடும்பப் பெயர் அல்லது பட்டமாக இருக்கக் கூடும். அதில் ஒவ்வொரு தலைவரும் தனிப்பட்ட தங்கள் பெயரை அதனுடன் சேர்த்துள்ளனர்.

திருவொற்றியூரில் முதலாம் ராஜாதி ராஜாவின் 28ஆம் வருடத்திலான கல்வெட்டில் ஒரு தலைவர் குறித்து  எழுதப்பட்டுள்ளது. அடுத்த இரு தலைவர்களின் பெயரை   திருமழிசை மற்றும் திருநீர்மலையில்  (1911-ல் 2 மற்றும் 1912-ல் 557, 556)(காலம்: கிபி 1202, 1210 மற்றும் 1217) கண்டெடுக்கப்பட்ட  மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டில் காணமுடியும். அடுத்த தலைவர், நீலாங்கரையான் கடக்கன் சோழகங்கா பற்றிய குறிப்பு மூன்றாம் ராஜராஜன் (1912-ல் 535 மற்றும் 562- காலம்: கிபி1222 மற்றும் 1235)

அடுத்த மூன்று தலைவர்கள் குறித்து தெலுங்கு – சோழ அரசர் விஜயகந்தகோபாலன் காலத்திய கல்வெட்டு திருவொற்றியூர், திருநீர்மலை மற்ரும் திருமழிசை (1912-ல் 117, 1911-ல் 5, 1912-ல் 547, 1911-ல் 1, காலம்: இந்த கல்வெட்டுகள் கிபி 1259க்கும் 1276க்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும்)   பஞ்சநதிவாணன் திருவேகம்பன் நீலங்கரையன் என்னும் தலைவரைப் பற்றி திருநீர்மலையில் பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகரன் காலத்து கல்வெட்டில் காண முடியும்.

உண்மை என்னவென்றால் இதில் சிலர் தங்களை சோழர்-கங்கா என்றுஅழைத்துக்கொள்வது, கங்காவினர் தமிழ்நாட்டில் இயங்கியுள்ளனர்; அவர்கள் சோழர்களுடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. அடுத்து, பஞ்சநதிவாணன் என்கிற பெயரில் உள்ள ‘வாணன்’ என்கிற ஒட்டுப் பெயர்  பாணர்களிடமிருந்து வந்திருக்கலாம் என ராபர்ட் செவெல் எண்ணுகிறார்.(ஆர்.செவெல், Historical Inscriptions of Southern India, பக்கம் 370) ஆனால், பிள்ளையார் என்கிற முன்னொட்டு பெயர் அவர்கள் அரச குடும்பத்தில் இளம் உறுப்பினர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. காரணம்,  நீலகங்கரையன் என்கிற பெயர் கல்வெட்டுகளில் விஜயகந்தகோபாலனின் பிள்ளையார் எனக் குறிப்பிடப்படுவதால், நீலங்கரையன் விஜயகந்தகோபாலனின் மகனாக இருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அது அப்படியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தென்னிந்திய  வரலாற்றில் பிள்ளையார் என்று முக்கியத் தலைவர்கள் அல்லது அலுவலர்களை குறிப்பதாக உள்ளது.

சென்னைக்கருகில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் நீலங்கரையன்   என்ற பெயர் முக்கியமான அலுவலர்களைச் சுட்டுவதாக உள்ளது. மேலும், அவர்கள் முதலாம் ராஜாதி ராஜா, மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன், கடவ அரசர் கோப்பெருஞ்ஜிங்கா, தெலுங்கு-சோடா அரசர் விஜயகந்தகோபாலா மற்றும் பாண்டிய அரசர் இரண்டாம் ஜடவர்மன் சுந்தரபாண்டியன்  போன்ற அரசர்கள் தொண்டைமண்டலத்தை வெவ்வேறு காலகட்டங்களில் ஆண்டபோது சேவகம் புரிந்தவர்களாக உள்ளார்கள்.

நீலகங்கரையர்கள்  பற்றி கல்வெட்டுகளில்குறிப்பிடப்படும் காலம் 11ஆம் நூற்றாண்டுக்கும் 14ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக உள்ளது.  திருநீர்மலை  விஷ்ணு கோயிலிலிலுள்ள ஐந்து கல்வெட்டுகள்  நீலங்கரையன்கள் வெவ்வேறு காலகட்டத்தில் கொடுத்த கொடை குறித்து பேசுகிறது. அதில், ஒன்று மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பணமாக (பத்து பணம்)  கொடுக்கப்பட்டது பற்றிய ஆவணம். அப்பணம், கோயிலிருந்த விளக்குகளை பராமரிக்க  அகம்பாடி – முதலிகளில் ஒருவரான பஞ்சநதிவாணன் என்கிற சோழகங்காதேவரால்(1912-ல் 546) வழங்கப்பட்டது.  அடுத்த ஆவணம் அதே கோயிலுக்கு இரண்டு விளக்குகள் கொடுக்கப்பட்டது பற்றிய குறிப்பு. அவற்றை திருச்சூர் – கண்ணப்பன் அபயம்புக்கான் நீலங்கரையன் கடகன் சோழகங்காதேவர். மூன்றாம் ராஜராஜனின் ஆட்சியில் 6ஆவது ஆண்டில் – கி.பி 1222 விளக்குகளைக் கொடுத்துள்ளனர்.(நீலங்கரையன் குடும்பத்தில் மற்றொவர் பெயர் புலியூர் கோட்டம் திருச்சூரத்தில் உள்ள கல்வெட்டில் காணக்கிடைக்கிறது. அதாவது பல்லாவரத்துக்கு அருகிலுள்ள திரிசூலம், சென்னை 1909-ல் 275, திருக்காச்சூர், செங்கல்பட்டு தாலுகா)

மற்றொரு ஆவணம் விஜயகந்தாகோபால் அரசரின் நான்காம் ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் வல்லமெரிந்தா பஞ்சநதிவாணன் கொடையாக பணம் கொடுத்தது பற்றிய குறிப்பு உள்ளது.  ஜடவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியின் 17ஆம்  வருடத்தில் அதே கோயிலுக்கு ஆறு வேலி நிலம் அருணகிரிபெருமாள்  நீலாங்கரையானால் கொடுக்கப்பட்டது பற்றி கல்வெட்டில் உள்ளது. அதற்கு பின்னான கல்வெட்டில், அதாவது மாறவர்மன் முதலாம் குலசேகரன்(கி.பி. 1304) ஆட்சியின் 37ஆம் ஆண்டில் பம்மநாகா நாயனார்(பல்லாவரம் அருகேயுள்ள பம்மல்) கோயிலுக்கு  வடக்குபட்டு என்னும் குமரகோபாலநல்லூர் என்ற கிராமத்தையே  பஞ்சநதிவாணன் திருவேகம்பன்  கொடையாக வழங்கியுள்ளார்.   அவருடைய பிறந்தநாள் அன்று திருவிழா கொண்டாடுவதற்காக அப்பரிசினை வழ்ங்கியுள்ளார்.

விஜயகந்தகோபால் காலத்து கல்வெட்டில், வருடம் குறிப்பிடப்படாமல்  நீலங்கரையன் வலட்டுவல்விட்டான்நல்லூர் கிராமத்தின் நிலங்களை திருநீர்மலையில் உள்ள நிர்வண்ண பெருமாள் கோயிலுக்கும் திருமழிசை எம்பெருமான் கோயிலுக்கும் (1911-ல் 4) வழங்கியது பற்றி பேசப்பட்டுள்ளது.  சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக் குறிப்புகளில் தலைமை உதவியாளர்கள் அல்லது அலுவலர்களை நீலங்கரையன்  என்று அழைப்பதும் அவர்கள் 11-14ஆம் நூற்றாண்டுகளில் வைஷ்ணவ மற்றும் சைவ கோயில்களில் தங்கள் கொடைத்தன்மை மூலம் பெரும் பங்காற்றியது குறித்தும் ஏராளமான குறிப்புகள் உள்ளன.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival