Read in : English
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில மலைப்பாங்கான கடலோரங்களில் வார்லி பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்கள் புழங்கும் பொருட்கள், வசிக்கும் இடங்களில் தனித்துவம் நிறைந்து இருக்கும். இயற்கை சார்ந்து வாழும் தனிப்பட்ட நம்பிக்கை உடைய இனக்குழு இது.
இவர்களின் வாழ்வு, கலாச்சாரம், பண்பாடு அனைத்தும் தனித்தன்மை கொண்டது. எழுத்துரு இல்லாத, வார்லி மொழியில் உரையாடுகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் வடக்கு பால்கார் மாவட்டத்தில் ஜவ்கர், மொக்காடா, தகானு, தலாசாரி தாலுகாக்கள், நாசிக், துளு மாவட்டங்களின் ஒரு பகுதி, குஜராத்தில் வால்சட், டாங்கசு, நவ்சாரி, சூரத் போன்ற பகுதிகளில் வார்லி பழங்குடியினர் அதிகம் காணப்படுகின்றனர். ஒன்றிய அரசின் ஆட்சி பிரதேசமான தாத்ரா மற்றும் நகர் அவேலி, டாமன்- டையூ பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
யசோதர தால்மிய என்பவர் எழுதிய வார்லி ஓவிய உலகம் என்ற நூலில், வார்லி ஓவியக் கலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது, இந்தக் கலை கி.மு.2500 முதல் 3000 ஆண்டுகள் பாரம்பரிய தொடர்ச்சி கொண்டதாகவும், தொன்மை நிறைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஓவியக் கலைக்கும், மத்தியப் பிரதேசம், பீம்பெத்கா பகுதில் கி.மு.500 ஆம் ஆண்டை சேர்ந்தாக கணிக்கப்பட்டுள்ள, குகை ஓவியங்களுக்கும் தொடர்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தக் கலை கி.மு.2500 முதல் 3000 ஆண்டுகள் பாரம்பரிய தொடர்ச்சி கொண்டதாகவும், தொன்மை நிறைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஓவியக் கலைக்கும், மத்தியப் பிரதேசம், பீம்பெத்கா பகுதில் கி.மு.500 ஆம் ஆண்டை சேர்ந்தாக கணிக்கப்பட்டுள்ள, குகை ஓவியங்களுக்கும் தொடர்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன
வார்லி ஓவியங்கள் எளிய கணித அடிப்படையில் வடிவங்களை கொண்டே வரையப்படுகின்றன. அதாவது, வட்டம், முக்கோணம், சதுரம் போன்ற அமைப்புகளே கொண்டே, காணும் இயற்கை காட்சிகளை வரைந்துள்ளனர். வட்ட வடிவத்தை சூரியன், சந்திரனை குறிக்கவும், முக்கோணத்தை மலைகள், கூரான மர வடிவங்களை குறிக்கவும் பயன்படுத்தியுள்ளனர். எல்லா ஓவியங்களுக்கும் மையக் கருத்து சதுரம் தான்.
பொதுவாக இவ்வகை ஓவியங்கள், இந்த பழங்குடிகள் வசிக்கும் குடிசை சுவர்களில் தற்போதும் வரையப் படுகிறது. வீட்டுச் சுவர் கட்டுமானத்தில் மரக்கிளைகள், மாட்டுச் சாணம் மற்றும் மண்ணைக் குழைத்து பயன்படுத்துகின்றனர்.
வீட்டின் உட்சுவர்களில் காவி வண்ணம் பூசப்படுகிறது. இந்த பின்புலத்தில்தான் ஓவியங்கள் வரையப்படுகின்றன. காவிப் பின்புலத்தில் தெளிவாகத் தெரிய வெள்ளை நிறம் பயன்படுகிறது. வெள்ளை நிறத்துக்கு அரிசி மாவைத் தண்ணீரில் குழைத்து பிசினோடு சேர்த்து பயன்படுத்துகின்றனர். மூங்கில் குச்சியின் நுனியை நசித்து, தூரிகை போல் பயன்படுத்துவது வியப்பு தரும். பெரும்பாலும் திருமணம், அறுவடைவிழாவில் வீட்டை அலங்கரிக்கும் விதமாக வரையப்படுகின்றன ஓவியங்கள். இந்த ஓவிய மரபை பாதுகாப்பது பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் வார்லி ஓவியங்கள், 1970 ஆம் ஆண்டுக்கு பின் புகழ் பெறத்துவங்கியது. பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ-கோலா பிரசாரத்துக்காக, ‘தீபாவளியே வீட்டிற்கு வா’ என்ற விளம்பரத்தில், 2010 இல் வார்லி ஓவியம் இடம்பெற்றது. இது, மேலும் அதை பிரபலமாக்கியது.
இந்தியாவில் வார்லி பழங்குடிகளின் தனித்துவமான கலைக்கு அங்கீகாரமாக கருதப்படுகிறது இந்த ஓவியம். வார்லி ஓவியக் கலை, சுவரில் வரையும் ஓவியம் என்ற நிலையில் இருந்து, மேம்பட்ட ஆடை வடிவமைப்பிலும் பயன்பட்டு வருகிறது. சேலை, சுடிதார் போன்றவற்றில் வார்லி ஓவியத்தை அடிப்படையாகக் கொண்ட டிசைன்கள் உருவாக்கி பயன்படுத்தப்படுகின்றன.
வார்லி ஓவியங்களை உருவாக்கும் கலை, இந்த ஆசிவாசி மக்களின் மரபு வழியில் நிறைந்துள்ளது என்பதை அவர்களின் பழக்க வழக்கங்கள் உறுதி செய்கின்றன. சமீபத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சர்வதேச பழங்குடியின நாள் கொண்டாட்டத்தில் இது வெளிப்பட்டது
திரைச் சீலைகள், படுக்கை விரிப்புகள் போன்றவையும் வார்லி ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. வார்லி ஓவியங்களை உருவாக்கும் கலை, இந்த ஆசிவாசி மக்களின் மரபு வழியில் நிறைந்துள்ளது என்பதை அவர்களின் பழக்க வழக்கங்கள் உறுதி செய்கின்றன. சமீபத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சர்வதேச பழங்குயின நாள் கொண்டாட்டத்தில் இது வெளிப்பட்டது.
வார்லி பழங்குடி இன மக்கள், வாழும் இடங்களில் பனைமரங்கள் அதிகம் உள்ளன. வீடுகளில் புழங்கு பொருட்களாக பனையில் தயாரித்த பலவற்றை பயன்படுத்துகின்றனர். கொண்டாட்டங்களில், தார்ப்பா என்ற பனை ஓலையில் செய்த ஒரு இசைக்கருவியை பயன்படுத்துகின்றனர். அது போல், பனை ஓலையால் செய்த ஆடைகள் அணிவது மரபாக பின்பற்றும் பண்பாடாகவும் உள்ளது.
சமீபத்தில் நடந்த சர்வதேச பழங்குடி தின விழாவில், இது போல் ஆடை அணிந்து வந்து வார்லி பழங்குடி இனத்தவர் அசத்தினர். தலையில் பனை ஓலையால் தயாரித்த நீண்ட தொப்பி போல அணிந்திருந்தனர். ஓலையால் செய்த ஆடையை இடுப்பில் உடுத்தியிருந்தது வியப்பு ஏற்பட்டது. கை வளையல், கால் சலங்கை என எல்லாமே பனையின் குருத்தோலை மயமாக இருந்தது. முதுகு புறத்தில் அட்டகாசமான பனைஓலை பின்னல் அமைக்கப்பட்டிருந்தது.
இது போல் உடையணிந்த பழங்குடினரை, மும்பை நகரத்தை ஒட்டிய ஆரோ பகுதியில் நடந்த பழங்குடியினர் பேரணியில் காண முடிந்தது. பனை சூழ்ந்த நிலத்தில் பனை கலாச்சாரத்துடன் வாழும் அந்த பழங்குடியினர் உலகத்துக்கு சொன்ன செய்தி ஒன்று தான். அது, இயற்கையை போற்றுங்கள்… இயற்கையுடன் இணைந்து வாழுங்கள். சூழலுடன் இணைந்து செயல்படுங்கள் என்பது மட்டும் தான்.
Read in : English