Read in : English
இந்த கட்டுரை முதலில் 2018 இல் வெளியிடப்பட்டது
அண்மையில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படத்துக்குப்பிறகு நடிகையர் திலகம் சாவித்திரிசெய்திகளில் ஆக்கிரமித்திருக்கிறார். அதுமட்டுமில்லாது ஜெமினி- சாவித்திரி வாரிசுகளுக்கு இடையில் நடக்கும் வார்த்தை சண்டைகள் அதிகரித்து வருகிறது. இந்த சண்டைகள் சாவித்ரியின் துரதிஷ்டமென்று தான் கூறவேண்டும்.
சாவித்ரியின் சமகால நடிகையும் தோழியுமான நடிகை ஜமுனாவிடம் நடந்த உரையாடலில் அவர் சாவித்திரி தேர்ந்தெடுத்த முடிவுகள் குறித்த வேறு பார்வைகளைத் தருகிறார். ஜமுனாவும் சாவித்ரியும் ஒரே காலகட்டத்தில் அவர்களது சினிமா வாழ்வைத் தொடங்கியவர்கள்.ஆனால் அவர்களது வாழ்க்கைப் பாதை வெவ்வேறாக மாறிவிட்டது. அதற்கு அவர்கள் எடுத்த முடிவுகள் தான் காரணம்.
சாவித்திரி ஒப்புதல் வாக்குமூலம் போல் ஜமுனாவிடம் சொல்லியது என்னவென்றால் ஏற்கனவே திருமணம் ஆன ஒருவரை, வயதில் மிகவும் மூத்தவரை மிகவும் இளமையான 16 வயதில் திருமணம் செய்ததுதான் தான் வாழ்வில் செய்த தவறு என்று கூறியுள்ளார்.
ஜமுனாவைப் போல் நடிகையாக மட்டுமில்லாமல், சாவித்திரி சினிமா இயக்குவதிலும் தயாரிப்பிலும் ஈடுபட்டார். அவருக்கான ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்த பொழுதில், சினிமாவில் ஊக்கத்துடன் செயலாற்ற நினைத்தார். ஆனால் அவருடைய சமகால நடிகைகளான சரோஜாதேவி, வைஜெயந்திமாலா போன்றோர் அவர்களுக்கான வாய்ப்பு குறைந்த போது திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள். ஒரு திரைப்பட இயக்குநராக, பாலசந்தரைப் போல் ஒரிஜினல் கதைகளை தேர்வு செய்யாமல் ஒவ்வொரு காட்சியையும் ரீமேக் செய்ய முனைந்தார். அது சினிமா ரசிகர்களிடம் எடுபடவில்லை.
சாவித்ரி அவரது இறுதி நாட்களில் கூட, தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படங்களைத் தொடங்க அதிக வட்டியுடன் கடன் வாங்கினார். ஆனால் அவருடைய திட்டத்தை புகழ்பெற்ற இயக்குநர் தேசரி நாராயண ராவ் எடுத்துக் கூறி மாற்றினார். அதுவும் 7,000 அடி படத்தை எடுத்த பிறகுதான் முடிவை மாற்றினார். ராவ் மாதிரி ஒரு சிலர்தான் சாவித்ரியின் திரைகாலம் முடிவை நெருங்கிய காலகட்டங்களில் கொரிண்டாகு(1979) உள்ளிட்ட சில படங்களில் வேடங்கள் கொடுத்து கைகொடுத்தனர். முரணாக, சாவித்ரி அவரது சொந்த வாழ்க்கையில் குழப்பமடைந்திருந்த பொழுதில் நடிகை ஜமுனா அரசியலில் இறங்கினார்,பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் காயம்படவில்லை.
தன்னுடைய 80 வயதில் மகிழ்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் நடிகை ஜமுனாவிடம் நாம் கண்ட தொலைபேசி உரையாடலில் இருந்து…..
நடிகையர் திலகம் படக் குழுவினர் உங்களிடம் கலந்தாலோசிகக்வில்லை என்று வருத்தப்பட்டீர்களாமே?
ஆமா. சாவித்தியுடன் பழகிய சமகால நடிகர்களுடன் நான் தான் இப்போது உயிருடன் இருக்கிறேன். அவர் என்னில் நம்பிக்கை கொண்டிருந்தார். என்னுடைய கருத்துகளைக் கேட்டிருந்தால் அவை அப்படத்துக்கு அதிக வலு சேர்த்திருக்கும்.
சாவித்திரிதான் உங்களை திரைப்டங்களில் அறிமுகப்படுத்தியதாக கூறுகிறார்களே?
அது தவறு. நாங்கள் இருவரும் ஒரேகாலகட்டத்தில் தான் எங்கள் திரைப்பயணத்தைத் தொடங்கினோம். நாங்கள் இருவரும் ஒரே வருடத்தில் தான் (1936) பிறந்தோம். டாக்டர்.கரிகபடி ராஜா ராவ் என்னை நாடகங்களில் பார்த்து, என் நடிப்பைக்கண்ட பின்புதான் ‘புட்டிலு’(1953) என்கிற திரைப்படத்தில் கதாநாயகி வேடம் கொடுத்தார்.அப்போது எனக்கு 16 வயதுதான்.
நீங்கள் சாவித்ரியுடன் எப்படி நெருக்கமானீர்கள்?
நான் பிளவுபடாத ஆந்திராவில் ஒருகுக்கிராமத்தில் பிறந்து வளர்தேன். சாவித்திரி ஒரு நடிகையாக திரையில் கால்பதிக்க முயன்று கொண்டிருந்த போது நவராத்திரியில் நடைபெறும் ஒரு நடன நிகழ்ச்சிக்காக எங்கள் ஊருக்கு வந்தார். 1950களின் தொடக்கத்தில் என நினைக்கிறேன். அவர் என் வீட்டில் தங்கியிருந்தார், நாங்கள் ஒன்றாக சாப்பிடோம். பிறகு பிறகு’மிஸியம்மா’ படபிடிப்பின்போது மிகவும் நெருக்கமானோம்.
மிஸியம்மா படப்பிடிப்பில் தான் நடிகர் ஜெமினியும் சாவித்திரியும் நெருக்கமானார்களா?
ஆமாம். மிகச் சரி. அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நெருக்கத்தை பார்த்தோம். அவர்கள் தனியே அமர்ந்துகொண்டு மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பார்கள். நான், இயக்குநர்கள் நாகிரெட்டி, சக்ரபாணி, மூத்த இயக்குநர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் இந்த உறவு குறித்தும் ஜெமினியின் காதல் நாடகம் குறித்தும் பேசி புரிய வைக்க முயர்சித்தோம். அப்போது நான் என் பதின்ம வயதுகளில் இருந்ததால் எனக்கு அதைப் பற்றி அதுதிகபுரிதல் இல்லை என்பது வேறு விஷயம். சாவித்திரி யாருடைய பேச்சையும் இந்த விஷயத்தில் கேட்கவில்லை. 1952வாக்கில் ஜெமினியை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார்.
ஜெமினியை மணந்துகொண்டதற்காக வருத்தப்பட்டு உங்களிடம் எதுவும் கூறியுள்ளாரா?
1966ஆம் ஆண்டு, நான் என் முதல் மகன் வம்சி கிருஷ்ணாவை பிரசவித்திருந்த நேரம். அச்சமயத்தில் அவ்வப்போது குடிக்கும் சாவித்திரி குடிக்கு அடிமையாகிவிட்டார் என அறிந்தேன். ஜெமினிக்கும் சாவித்திரிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு, 1969ல் இருவரும் பிரிந்தார்கள்.என்னுடைய மகன் பிறந்த நாளுக்கு வந்த சாவித்திரி ஏற்கெனவே திருமணம் ஆன, வயதான ஜெமினியை திருமணம் செய்து தான் இமாலயத் தவறை செய்துவிட்டதாகக் கூறி தேம்பியழுதார்.நான் என் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறினார். அவர் சொன்ன வார்த்தைகமகன்ள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது,’’ நீ ஒரு நல்ல மாப்பிள்ளையைத் தேர்வு செய்துகொண்டு, அதுவும் படித்தவரை, எந்த சுமையும் இல்லாதவரை திருமணம் செய்துகொண்டாய்’ என கூறினார். அவரிடம் பலமுறை குழந்தைகளின் நலனை நினைத்து குடியை கைவிடக் கோரினேன். ஜெமினி குடும்பத்தின் ஆண்வாரிசு சதீஷ்-ஐ சாவித்திரி இரண்டாவது குழந்தையாக 1965ல் பெற்றெடுத்தார். அப்போது நடிப்பிலிருந்து அவர் விலகி, துணை கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார். பல விஷயங்களை நினைவுகூர்கையில் இப்போது இருப்பது போல் அக்காலக்கட்டத்தில் மனநல ஆலோசனை இருந்திருக்கலாம். அது தமிழின் ஒரு சிறந்த நடிகையை காப்பாற்றியிருக்கும். ஆனால் எதையும் உறுதியாக உசொல்லமுடியாது அல்லவா? ஆனால் சாவித்திரி அடுத்தவர்களிடம் உதவிகேட்பதை மிகவும் வெறுத்தார்.
சாவித்திரியின் சினிமா இயக்க வேண்டுமென்கிற ஆசைதான் அவருடைய துன்பத்துக்கு காரணம் என்று கூறுகிறார்களே?
1971-ல் அவர் எடுத்த ‘பிராப்தம்’ படம் தான் அவர் அழிவின் முதற்புள்ளி. ‘சின்னாரி பபலு’ படத்தின் வெற்றியைக் கண்டு ருசித்தார். அதை தமிழில் குழந்தை உள்ளம் (1968) என்று ரீமேக் செய்ய அப்படம் பொருளாதாரத்தில் வெற்றியைத் தரவில்லை. இருந்தபோதும் அவருடைய அடுத்தடுத்த படங்கள் அவருக்கு வெற்றியைத் தராதபோதும் அவர் ரீமேக் படங்கள்நிறையச் செய்தார். ஓரிரு படங்களுக்குப் பிறகு அவர் அவற்றை விட்டிருக்கலாம். ஆனால் அவர் மனதில் என்ன ஓடியதோ. பிராப்தம் திரைப்படத்தை எடுக்கும் போது சாவித்திரிக்கு 30 வயதாகியிருந்தது. அவருக்கு திரைப்படங்களில் கதாநாயகி வாய்ப்புக் குறைந்து வந்தது. பிராப்தம் படத்தில்தான் அவர் கதாநாயகியாக இறுதியாக நடித்தது.அப்படத்தின் தமிழ் ரீமேக்கில் என்னுடைய கதாபாத்திரத்துக்காக அவர் காத்திருக்கவில்லை. தமிழில் சந்திரலேகாவை வைத்து அப்படத்தை எடுத்தார்.அப்போதும் நிலைமை ஒன்றும் மோசமில்லை. விநியோகஸ்தர்கள் அப்படத்தை 25-30 லட்சம் கொடுத்து வாங்க தயாராக இருந்தனர். ஆனால் சாவித்திரி தானே வெளியிடுவதில் உறுதியாக இருந்தார். சிவாஜி கணேசனின் நடிப்பு பிரசித்திபெற்ற அந்த நேரத்தில் துரதிஷ்டமாக இப்படம் தோல்வியைத் தழுவியது. அதன் விளைவாக சாவித்திரி தன் சொத்துக்களை இழந்தார்.
சாவித்திரிக்கு பிரமாண்டமான பங்களா, எஸ்டேட் அனைத்தும் கொடைக்கானலில் இருந்தது. அந்த சொத்து அக்காலகட்டத்தில் 50 லட்சம் ரூபாய்க்கு விலை போகக்கூடியதாக இருந்தது. அந்தசொத்தை விற்று, குழந்தைகள் நலனுக்காக ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட சொன்னேன். ஆனால் அவர் எதையும் காதில் வாங்குவதாக இல்லை. அப்போதும் சிவரகு மைலேடிடி(1960) என்ற திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கினார். அப்படம் அவருடைய திரைப்பட வரலாற்றில் சிறந்த படமாக இருக்கும் என்று எண்ணினார். நல்லவேளை அதை தமிழில் செய்யவில்லை.
அவருடைய இறுதி காலங்களில் அவரை சந்தித்தீர்களா?
1981-ல் சென்னையில் நடந்த ஒரு கலைநிகழ்ச்சிக்காக சென்றபோது போய் பார்த்தேன்.அப்போது பவர் கோமா நிலையில் இருந்தார். பின் பழைய நிலைக்குத் திரும்பவே இல்லை. தி.நகர் ஹபிபுல்லா சாலையில் அரண்மனை போன்ற வீட்டில் அவரை பார்த்து பழகியிருந்த நான், அண்ணாநகரில் ஒரு சாதாரண வீட்டில் பார்த்தேன்.
Read in : English