Read in : English
சென்னையில் பொதுக்கழிப்பிடப் பிரச்சினை காரணமாக சென்னை நகரம் இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் திறந்தவெளி மலங்கழித்தல் முற்றிலும் இல்லாத நிலை இல்லை என்பது வெளிப்படையானது. பொது சிறுநீர்க் கழிப்பிடங்கள் அருகிப் போய்விட்டன. ஸ்வச் பாரத் திட்டத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள் புறக்கணிப்பட்டதால் பல நீக்கப்பட்டுவிட்டன. சென்னையின் பல பகுதிகளில் காந்திய வழியிலான தூய்மை லட்சியங்கள் தோற்றுப்போய்விட்டதால் அவை சுகாதாரக்கேடுகளால் சீரழிந்துவிட்டன.
திறந்தவெளி மலங்கழித்தல் இல்லாதநிலையை உருவாக்க சென்னையின் எல்லா வார்டுகளிலும் பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்படும் என்று மாநகர நிர்வாகிகள் அறிவித்திருக்கிறார்கள். திறந்தவெளி மலங்கழித்தல் இல்லாதநிலையை உருவாக்கும் பணிகிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும் வெகுவிரைவில் அந்தப்பேரைச் சென்னை பெற்றுவிடும் என்றும் 2017-இல் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் அறிவித்தார்.
சென்னையில்2020 கழிப்பிடங்களும் 600 சிறுநீர்க் கழிப்பிடங்களும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று சமீபத்திய அறிக்கைகள் சொல்கின்றன. ஆயினும் பொருளாதார நடவடிக்கைகளும், மக்கள் நடமாட்டங்களும் அதிகரித்துவிட்ட பகுதிகளில் இன்னும் நிறைய கழிப்பிடவசதிகள் தேவைப்படுகின்றன.
2022-ஆம் ஆண்டுநிலவரப்படி, ஸ்வச்சர்வேக்ஷன் தரவரிசைப்படி சென்னை 44-வது இடத்தில் இருக்கிறது. மதுரையைவிட சற்று முன்னேறியும், கோயம்புத்தூரைவிடவும் பின்தங்கியும் சென்னை இருக்கிறத
2022-ஆம் ஆண்டுநிலவரப்படி, ஸ்வச்சர்வேக்ஷன் தரவரிசைப்படி சென்னை 44-வது இடத்தில் இருக்கிறது. மதுரையைவிட சற்று முன்னேறியும், கோயம்புத்தூரைவிடவும் பின்தங்கியும் சென்னை இருக்கிறது. மேலும் ஹைதராபாத்,மும்பை, கிழக்கு, வடக்குடில்லி ஆகிய மாநகரங்களைவிட மிகவும் பின்தங்கியும், பெங்களூருவைவிட சற்றுபின்தங்கியும் சென்னை விளங்குகிறது.
பொதுப்பங்கீட்டுக் கட்டமைப்பில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறது தமிழ்நாடு. ஆனால் அதன் தலைநகரான சென்னையின் நிர்வாகத்திறன் கழிப்பிடவசதி விசயத்தில் பெரிதாக அரசியல் முனைப்போடு செயல்படவில்லை.
மேலும் படிக்க: கழிவு மேலாண்மை: தமிழ்நாடு ஏன் விருது பெறவில்லை?
கழிப்பிடவசதிசட்டம்?
பொதுக்கழிப்பிடங்களைப் பற்றிய வரலாற்றைப் பார்த்தால், ரோமானிய குளியலறைகளுக்கு அருகில் கழிப்பிட்ட வசதிகள் கட்டப்பட்டிருந்தது தெரியவருகிறது. எஃபிசஸ் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பளிங்கு இருக்கைகளின் சிதிலங்களே அதற்குச் சான்றுகள்.
தற்போது பெரும் வணிகவளாகங்களிலும், பெரிய உணவகங்களிலும் பொதுக்கழிப்பிடவசதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. தேவைப்படும் இடங்களில் தரத்தோடும் குறிப்பிட்ட கட்டமைப்புவடிவங்களோடும் பொதுக்கழிப்பிடங்கள்கட்டப்படவேண்டும்என்பதை வலியுறுத்தும் சட்டங்களை இயற்றவேண்டும் என்று இங்கிலாந்தில் நடந்த சமீபத்திய ஆராய்ச்சிகள் சொல்லியிருக்கின்றன.
500 பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும் ஒரு பெரிய கழிப்பறையும், 1,100 ஆண்களுக்கு ஒரு பெரிய சிறுநீர்க் கழிப்பிடமும், 10,000 மாற்றுத்திறனாளிகளுக்கான இருபாலர் கழிப்பிடமும் கட்டவேண்டும் என்று பிரிட்டிஷ் கழிப்பறைகள் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது. பொதுப்போக்குவரத்து நிலையங்கள், கார் பார்க்கிங் இடங்கள், வணிக வளாகங்கள், தபால் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், தொழிலாளர் மையங்கள் ஆகிய இடங்களில் பொதுக்கழிப்பறை வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
சாலையோரங்களை இயற்கை உபாதைகளைத் தீர்த்துக்கொள்வதற்குப் பயன்படுத்துவோர்கள் பெரும்பாலும் லாரி, ஆட்டோ ஓட்டுநர்கள் போன்ற இடம்விட்டு இடம் பயணம் செய்யும் தொழிலாளிகள், சாலையோர உணவகத்தொழிலாளர்கள், புலம்பெயர் உழைப்பாளிகள் ஆகியோர் என்று சம்பவங்களின் அடிப்படையிலான சான்றுகள் சொல்கின்றன. அவர்களுக்குப் பொதுக்கழிப்பறை வசதிகள் இல்லை என்பதுதான் காரணம்.குப்பைத் தொட்டிகளும், பார்க் செய்யப்பட்ட வாகனங்களும் அவர்களுக்கு மறைவிடங்களாகச் செயல்படுகின்றன.
பொதுக்கழிப்பிடங்களுக்கான உரிமையும் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்து வலியுறுத்தப்படக்கூடிய உரிமைதான்
ஸ்வச் பாரத்தும், அதன் சர்வேக்ஷன் திட்டமும் மாநிலங்களைப் பொதுக்கழிப்பிடங்களைக் கட்டவைக்கக் கொண்டு வரப்பட்டன.அவற்றின் கொள்கை எழுப்பும் கேள்வி இதுதான்: பொதுக்கழிப்பிடங்கள் விசயத்தில் உரிமையை நிலைநாட்டும் சட்டம்கொண்டுவரப்பட்டால் அது சிறப்பாகச்செயல்படுமா?
ஆனால் உரிமை நிலைநாட்டும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கதாக இருந்ததில்லை. உதாரணமாக, மாற்றுத்திறனாளிகளின் உரிமைச்சட்டமும், விதிமுறைகளும் 2019-இல் உருவாகின. பல அரசுகள் அவற்றைச் செயல்படுத்தத் தயங்கின. குறிப்பாக, தமிழ்நாடு அரசு சக்கர நாற்காலிகள் உள்ளே செல்வதற்கு வசதியாக தாழ்தளம் கொண்ட பேருந்துகளை வாங்குவதற்கு தயங்கின. சாலை உட்கட்டமைப்பு சரியாக இல்லைஎன்று காரணம் சொன்னது அரசு.
அதைப்போலதான் பொதுக்கழிப்பிடங்கள் சம்பந்தமான அனுபவமும். அதுவும் உரிமை சம்பந்தமான பிரச்சினைதான். பீஜிங்கில் 2018-இல் நடந்த மாநாட்டில் பில்கேட்ஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சுகாதாரக் கொள்கை செயற்பாட்டிற்காகப் பாராட்டினார். இந்திய அரசியலில் இதுபோன்ற கொள்கை நடவடிக்கை முன்பு எடுக்கப்பட்டதில்லை.
பொதுக்கழிப்பிடங்கள் பற்றிய நீதிமன்ற ஆணைகள் பி.சரவணன் எதிர் ஒன்றிய அரசு வழக்கில், 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, உள்ளாட்சி அமைப்பின் நகராட்சி அல்லது கூடுதல் நகராட்சி ஆணையரின் தலைமையில் காதாரஅதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை நான்கு வாரங்களுக்குள் உருவாக்கவேண்டும் என்று ஆணையிட்டது.
அரசியல் சாசனப் பிரிவுகள் 21 மற்றும் 47 உத்தரவாதம் அளித்திருக்கும் ஊட்டம், ஆரோக்கியம் சம்பந்தமான உரிமைகளையும், மாநிலங்களின் கடமைகளையும் சுட்டிக்காட்டி பொதுக்கழிப்பிடங்கள் கட்டவேண்டும் என்று கட்டளை இட்டது நீதிமன்றம். நீதிமன்ற உத்தரவு கட்டணக் கழிப்பிட வசதியைப் பற்றியும் பேசியிருக்கிறது. பொதுக் கழிப்பிடங்களின் செலவு நகராட்சி பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும்.
பொதுக்கழிப்பிடங்களுக்கான உரிமையும் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்து வலியுறுத்தப்படக்கூடிய உரிமைதான். அரசியல் சாசனம் தரும் மற்ற உரிமைகளைப்போலதான் இந்தஉரிமையும்.
குறிப்பாகப் பொதுவெளியில் புழங்கும்பெண்களும், குழந்தைகளும், மருத்துவப் பிரச்சினைகள் கொண்ட முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் பொதுக்கழிப்பிட வசதிகளை அதிகமாக தேடுகிறார்கள் என்று தரவுகள் கூறுகின்றன.
நகரமயமாதலும், அதனால் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும் மக்களின் அதிகரிப்பும் பொதுக்கழிப்பிடங்களின் தேவையை முன்பைவிட தற்போது மிகமிகஅதிகமாக்கிவிட்டன.
ஸ்வச்சர்வேக்ஷன் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடிப்பது தமிழ்நாடுஅரசுக்குஅவசியம்தான். ஆனால் அதற்கு முதலில் அரசியல் உறுதிப்பாடுஅரசிற்குத்தேவை. எல்லோருக்குமான பொதுக்கழிப்பிடங்களைத்தவிர இந்த விசயத்தில் தொழில் மாதிரி ஒன்றை உருவாக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன.
Read in : English