Read in : English
ஒரு பத்திரிகையாளராகப் பல்வேறு நாளேடுகளில் பணியாற்றி, உயர்பதவிகள் வகித்தவர் வி.சுதர்ஷன். குற்றவியல் நிருபர் ஆகவேண்டும் என்ற இளமைக்காலக் கனவு தற்போது நிறைவேறியிருக்கிறது. அதிதீரங்களும் குற்றங்களும் நிகழ்ந்த தமிழ்நாட்டின் நகரமான தூத்துக்குடியைப் பற்றி அவர் எழுதி வெளிவரவிருக்கும் ‘தூத்துக்குடி’ என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘குற்றமும் கருணையும்’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அதைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
மதுரையில் ‘காலச்சுவடு’ பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் அந்தத் தமிழ்ப் புத்தகம் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய சுதர்ஷன், தனது செய்திப் பணியின்போது வெளியுறவு அமைச்சகம் போன்ற பல்வேறு துறைகள் தமக்குக் கொடுக்கப்பட்டதாகவும், நிஜவாழ்க்கைக்கு அப்பாற்பட்ட கதைகள் பல அப்போது தனக்குக் கிடைத்ததாகவும் கூறினார். “ஒவ்வொன்றும் தொன்மக்கதை போல இருந்தது” என்றார் அவர், இன்மதியிடம் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் வெளியுறவு அமைச்சகத்தில் அவருக்குக் கிடைத்த ஒரு நட்பின் காரணமாக அவர் தனக்குப் பிடித்த குற்றவியல் நிருபர் வேலையைச் செய்ய முடிந்தது. உளவுத் துறையில் துணை இயக்குநராய் இருந்த அனூப் ஜெய்ஸ்வாலின் நட்பு அவருக்குக் கிடைத்தது. இருவரும் தனித்தனியாய்த் தில்லியை விட்டுச் சென்ற பின்னும் அந்த நட்பு தொடர்ந்தது.
2007ஆம் ஆண்டு மத்தியில் அவர்கள் சென்னையில் மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது ஜெய்ஸ்வால் மாநில உளவுத் துறையின் தலைவராகவும், சுதர்ஷன் ஓர் ஆங்கிய நாளேட்டின் செயல் ஆசிரியராகவும் இருந்தனர். ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இறுதிகட்டப் போரைக் கட்டவிழ்த்துவிட்டதால், இந்தியா அந்தத் தீவுத்தேசத்திற்கான ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களும், அரசியல் கட்சிகளும் தமிழகத்தில் போராடிக்கொண்டிருந்த சூறாவளிக் காலகட்டம் அது (2009). அப்போது சுதர்ஷனும் ஜெய்ஸ்வாலும் நிறையப் பிரச்சினைகளைப் பற்றித் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
“தேசிய போலீஸ் அகாதெமியில் நான் புரோபேஷனராக இருந்த போது, வகுப்பறையில் தும்மியதற்காகவும், காலை அணிவகுப்பிற்குச் சில நிமிடங்கள் தாமதமாகச் சென்றதற்காகவும் நான் ஐபிஎஸ் பணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தேன். எனக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுபற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக சுதர்ஷன் என்னை முதன்முதலில் அணுகினார்” என்று ஜெய்ஸ்வால் நினைவுகூர்ந்தார்
“தேசிய போலீஸ் அகாதெமியில் நான் புரோபேஷனராக இருந்தபோது, வகுப்பறையில் தும்மியதற்காகவும், காலை அணிவகுப்பிற்குச் சில நிமிடங்கள் தாமதமாகச் சென்றதற்காகவும் என்னை ஐபிஎஸ் பணியிலிருந்து நீக்கினார்கள். எனக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுபற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக சுதர்ஷன் என்னை முதன்முதலில் அணுகினார்” என்று ஜெய்ஸ்வால் நினைவுகூர்ந்தார்.
தன்னைப் பணிநீக்கம் செய்வதற்கு அவர்கள் கண்டுபிடித்த சப்பையான காரணம்தான் அது என்றும், அதற்கு முன்பு அகாதெமியில் பயிற்சியளிக்கும் அதிகாரியின் நிலப்பிரபுத்துவ மனப்போக்கைத் தான் கேள்வி கேட்டதாகவும் ஜெய்ஸ்வால் சொன்னபோது, புத்தக ஆசிரியரான சுதர்ஷன் அவரை ஒரு குணச்சித்திரப் பாத்திரமாகப் பார்த்தார். “ஆரஞ்சுப் பழத்தைத் தின்றுவிட்டு விதைகளைத் துப்புவதைப் போல இந்த அமைப்பு தன்னைப் பயன்படுத்திவிட்டுத் தூர எறியும்போது, அதைச் சகஜமாக எடுத்துக்கொண்டு அடிபணிந்து போகும் மனிதரல்ல அவர்” என்று சுதர்ஷன் சொன்னார்.
மேலும் படிக்க: ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் நூற்றாண்டு: 50 ஆண்டுகளுக்கு முந்தைய நேர்காணல்!
ஜெய்ஸ்வால் ஐபிஎஸ் பணிக்குத் திரும்பப் போவதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் நடத்திய போராட்டம் புத்தகத்தில் ‘மிஸ்ஃபிட்’ (பொருத்தமற்றவர்) என்ற அத்தியாத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அவர் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லும் அந்தப் புத்தகத்தின் ஒவ்வோர் அத்தியாயமும் வீரத்தின் கதை; அல்லது கருணையின் கதை; அல்லது மனிதநேயத்தின் கதை; அல்லது புதுமையைப் பேசும் கதை.
புத்தக ஆசிரியர் ஒரு கொலை செய்தி தொடர்பாக அந்தக் காவல்துறை அதிகாரியை அணுகிய பின்புதான் இந்தப் புத்தகம் முழுமையாக உருவானது. அப்போது சுதர்ஷன் தனது நாளேட்டுப் பணியை முடித்து புத்தகம் எழுதுவதில் தனது கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தார். மேலும், கோவிட்-19 பெருந்தொற்று நாட்டை அலைக்கழித்த நேரம் அது. “கீழ்ப்பாக்கத்தில் இருந்த என் வீட்டிற்கு அவர் ஒவ்வொரு மதிய வேளையிலும் மைக்கோடும், ரெக்கார்டரோடும் வருவார். இருவரும் சமூக இடைவெளி விட்டு உட்கார்ந்து (ஆம். கோவிட் வழிகாட்டு நெறிப்படி), ஒரு காவல் அதிகாரியாய் என் பணிக்காலத்தில் நான் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றி விவாதிப்போம்” என்றார் ஜெய்ஸ்வால்.
தூத்துக்குடியில் முதல் காவல் கண்காணிப்பாளராய் அவர் பதவிவகித்த காலத்தில் சட்டத்தோடு மோதிய விளிம்புநிலை மக்களோடு தனக்கேற்பட்ட பல சந்திப்புகளை, பல உரசல்களை ஜெய்ஸ்வால் அந்த உரையாடலில் விவரித்தார். “மோசமான குற்றவாளிகள் என்று முன்னிறுத்தப்பட்ட அந்த மக்கள் சூழ்நிலைக்குப் பலியானவர்கள். ஆனால், அவர்களின் குணாம்சங்கள் அற்புதமானவை” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
ஒரு பத்திரிகையாளர் மற்றவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பவராக இருக்க வேண்டும் என்கிறார் புத்தக ஆசிரியர். “முதலில் மற்றவர்கள் சொல்கின்ற கதைகளைக் கேட்க வேண்டும். அப்புறம்தான் அவற்றை எழுதுவது” என்று சொல்லும் சுதர்ஷன், இந்தப் புத்தகமே ஒரு நிருபர் சேகரித்த செய்திகளின் திரட்டுதான் என்கிறார். “நமக்கு ஒரு பின்னணி கிடைத்துவிட்டது; அதுதான் தூத்துக்குடி மாவட்டம். அந்த மக்கள் கல்வியறிவு அற்றவர்கள். அவர்கள் காவல் நிலையத்திற்குச் செல்லும் போது அது அவர்களுக்கு வேறொரு உலகம். அவர்களின் முதல் தொடர்பே ஒரு காவல் அதிகாரிதான். அவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் அனுபவம் அது” என்றார் சுதர்ஷன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனூப் ஜெய்ஸ்வால் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லும் அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் வீரத்தின் கதை; அல்லது கருணையின் கதை; அல்லது மனிதநேயத்தின் கதை; அல்லது புதுமையைப் பேசும் கதை
இந்தப் புத்தகத்தின் 18 சம்பவங்களும் விளிம்புநிலை மக்களின் தீர்க்கமான அனுபவங்களை விவரிக்கிறது. அதில் ஓர் அத்தியாயம் நிறுவனமய குற்றத்தை எடுத்துரைக்கிறது; கணவர் இறந்து பல பத்தாண்டுகள் ஆனபின்பும் ஒரு பெண் ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருந்தார். அவளது கணவன் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் காவல்துறை ஊழியராகப் பணிபுரிந்தவர்.
ஒரு காவல்துறை அதிகாரி எப்படிக் குற்றவாளிகளிடம் நேர்மையாகவும், கருணையோடும் நடந்துகொள்ள முடியும் என்று ஒரு வாசகர் கேட்கலாம். ‘மீன்குழம்புச் சோறு’ என்ற அத்தியாயத்தில், அந்தோனி முருகன் என்ற குற்றவாளியின் மீது ஜெய்ஸ்வால் சட்டப்படி நடவடிக்கை எடுத்ததையும், பின்பு அந்தக் குற்றவாளியின் மனைவிக்கு மருத்துவச் சிகிச்சை ஏற்பாடு செய்து அந்தப் பெண்மணியின் உயிரைக் காப்பாற்றியதையும் ஆசிரியர் விவரிக்கிறார்.

பத்திரிகைக் கலையைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஒரு பத்திரிகையாளருக்கு உதவும். “நிகழ்வுகளைப் பதிவுசெய்ததைத் தவிர இந்தப் புத்தகத்தில் நானொன்றும் செய்திடவில்லை. இது ஒரு நிருபரின் செய்தித் திரட்டுதான்” என்று ஆசிரியர் சொல்கிறார்.
தூத்துக்குடியின் பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் புத்தகம் விவரிக்கிறது என்றாலும், இதில் வரும் மனிதர்கள் பொதுமைக்குணம் கொண்டவர்கள் என்று சுதர்ஷன் சொல்கிறார். “இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட கதாபாத்திரங்களை கோரக்பூரிலும் (ஜெய்ஸ்வாலின் சொந்த ஊர்) பார்க்கலாம்; அஸ்ஸாமிலும் பார்க்கலாம்; இந்தியாவில் எந்த இடத்திலும் பார்க்கலாம். ஏனென்றால், இந்தியக் கிராமங்களில் இருக்கும் எல்லோரது நிலையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது” என்கிறார் சுதர்ஷன். ஜெய்ஸ்வாலும் இந்தக் கருத்தை ஆமோதிக்கிறார்.
மேலும் படிக்க: எழுத்தாளர் சா. கந்தசாமியின் சொந்த நூல்சேகரிப்பை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு மகன் தானமளித்தார்
பத்திரிகைக் கலையைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஒரு பத்திரிகையாளருக்கு உதவும். “நிகழ்வுகளைப் பதிவுசெய்ததைத் தவிர இந்தப் புத்தகத்தில் நானொன்றும் செய்திடவில்லை. இது ஒரு நிருபரின் செய்தித் திரட்டுதான்” என்று ஆசிரியர் சொல்கிறார். காவல்துறை அதிகாரிகளுக்குப் புத்தகம் சொல்லும் செய்தி இதுதான்: அவர்கள் சட்டத்தின் பிரதிநிதிகள்; நிர்வாகத்தின் பிரதிநிதிகள் அல்ல. “தங்களின் முக்கியப் பொறுப்பு மக்கள் சேவையே அன்றி அரசாங்க சேவையன்று என்பதைக் காவல்துறையினர் புரிந்துகொள்ள வேண்டும். கருணை மனப்பான்மையை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மோசமான குற்றவாளிகள் என்று முன்னிறுத்தப்பட்ட அந்த மக்கள் சூழ்நிலைக்குப் பலியானவர்கள். ஆனால், அவர்களின் குணாம்சங்கள் அற்புதமானவை
மற்றவர்களை அவர்களின் கோணத்திலேயே பார்க்க வேண்டும். காவல் துறையினர் இதை மறந்துவிடக் கூடாது” என்கிறார் ஜெய்ஸ்வால். “சட்டத்தைப் புரிந்துகொள்ளும் காவல்துறையினர் கிட்டத்தட்ட ஒரு நீதிபதிதான். ஏனென்றால் இந்தத் துறையில் அவர்கள்தான் முதல் நீதிமன்றம்” என்று அறுதியிட்டுச் சொல்கிறார் ஜெய்ஸ்வால்.
புத்தகத்தின் முதல்பிரதியை வெளியிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் புத்தகத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசினார்; ஓரிரவில் இதை வாசித்துவிட்டு ஆசிரியரைத் தொடர்பு கொள்ளுவதாக அவர் வாக்களித்தார்.
புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read in : English