Read in : English
தமிழ்நாட்டின் சந்தனக்கடத்தல் வீரப்பனை கர்நாடகத்தின் சிறப்புப் பணிப் படை என்கவுண்டரில் போட்டுத் தள்ளி 18 வருடங்கள் ஆனபின்பும், தமிழ்நாட்டின் திருட்டு விலங்கு வேட்டைக்காரர்கள் இன்னும் யானைத்தந்தக் கடத்தலைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கர்நாடகத்திலும், கேரளாவிலும் பட இடங்களில் தந்தக் கடத்தல்காரர்கள் பிடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 45 நாட்களில், கர்நாடகத்தின் காவல்படையும், வனத்துறைப் படைகளும் சாம்ராஜ்நகர், புத்தூர், மங்களூரு, மைசூரு மற்றும் குடகு ஆகிய இடங்களில் ஐந்து தந்தக்கடத்தல் வழக்குகளைப் பதிவு செய்திருக்கின்றன. பிடிக்கப்பட்ட தந்தங்கள் வீரப்பன் காலத்தில் பிடிக்கப்பட்ட அளவுக்கு இல்லை என்றாலும், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களின் வனத்துறை அதிகாரிகள் இந்த மாநிலங்களின் எல்லைக் காடுகளில் திருட்டு விலங்குவேட்டை படுமும்முரமாக நடைபெறுவதாக நினைக்கிறார்கள்.
பிலிகிரிரக்ஞ பேட்டா, மலேமகாதேஷ்வர குன்றுகள், பண்டிப்பூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் காடுகளில் வீரப்பன் செய்ததைப் போன்ற செயற்பாடுகள் இன்னும் நடைபெறுவதாக உள்ளூர் இயற்கைவாதிகள் சுட்டிக் காட்டுகிறார்கள். மேலும், வீரப்பனின் முன்னாள் நண்பன் பிடரள்ளி கெஞ்சாவும், அவனுடைய நண்பன் சுதாகரனும் வெளியே திரிந்து கொண்டிருக்கிறார்கள். யானைகளைக் கொல்லும் ஆயுதங்கள் அவர்களிடம் இல்லை என்றாலும், அவர்கள் இன்னும் அந்தக் காடுகளில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
திருட்டு விலங்கு வேட்டைக்காரர்களை அடிக்கடி வனத்துறை சி.ஐ.டி அதிகாரிகளும், காவலர்களும், போலீஸும் பிடித்து சிறை வைக்கிறார்கள். 2021 நவம்பரில் பெரிய கும்பல் ஒன்று மாட்டியது; 20 கிலோ யானைத் தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. மாமிச உணவு நோக்கில் திருட்டு விலங்கு வேட்டைக்காரர்களையும் அதிகாரிகள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
வீரப்பனின் முன்னாள் நண்பன் பிடரள்ளி கெஞ்சாவும், அவனுடைய நண்பன் சுதாகரனும் வெளியே திரிந்து கொண்டிருக்கிறார்கள். யானைகளைக் கொல்லும் ஆயுதங்கள் அவர்களிடம் இல்லை என்றாலும், அவர்கள் இன்னும் அந்தக் காடுகளில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்
மலேமகாதேஷ்வர குன்றுகளின் மூத்த வன அதிகாரி எடாகொண்டலா இன்மதியிடம் சொன்னது இது: “காவல்துறையும், வனத்துறையும் இணைந்து முன்பு வீரப்பன் செயல்பட்ட பகுதியிலிருந்து விலங்கு வேட்டைக்காரர்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன. இந்தப் பகுதிகளில் எப்போதுமே இறைச்சிக்காக விலங்கு வேட்டை நடக்கிறது. ஆயினும் சில சமயங்களில் விலங்குத் தோல்களைக் கொண்டுபோகும் வேட்டைக்காரர்களும் பிடிபடுகிறார்கள். திருட்டு விலங்கு வேட்டைக்கான இந்த யுத்தம் முடிவில்லாதது. ஆனால் இப்போதெல்லாம் வனங்களின் உள்ளார்ந்த பகுதிகளில் இயங்குவது அவ்வளவு எளிதல்ல.
எனினும் எல்லா இடங்களிலும் எங்களது கண்காணிப்பாளர்களும் ஒற்றர்களும், கிராமத்து மக்களும் இருக்கிறார்கள்; திருட்டு விலங்கு வேட்டை நடந்தால் அதைப் பற்றிய தகவலை அவர்கள் எங்களுக்குத் தெரிவிக்கிறார்கள். வனக் கொள்ளையர்கள் தங்களின் வனயுயிர் வர்த்தகத்திற்காக, அதிசக்திமிக்க ரைஃபிள் போன்ற துப்பாக்கிகளைக் கொண்டு யானைகளையும், புலிகளையும் கொன்ற நாட்கள் மலையேறிவிட்டன.”
மேலும் படிக்க:
சந்தன மரக்காடுகளை வளர்க்க உதவும் வால் காக்கை!
கொரோனா பாதிப்பு: புதிய திருடர்கள் உருவாகிறார்களா?
யானைத் தந்த வர்த்தகத்தைத் தடை செய்த மிகவும் தாமதமான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் 1990-வாக்கிலே தந்தக் கலைப்பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்திருக்கிறது.
இந்தியாவின் இரகசிய சந்தையில் அழகுப்படுத்தாத யானைத்தந்தம் ஒருகிலோ ரூ.15,000-லிருந்து ரூ.50,000 வரை போகிறது; அதே சமயம் நன்றாக இழைக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்ட தந்த வர்த்தகம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் போகிறது. வனயுயிர் வர்த்தகப் பொருட்களுக்கான உலக வர்த்தக நிறுவனப் பிரிவு தந்த தகவல்கள் இவை.

கர்நாடக மாநிலம் புத்தூரில் தமிழகத்தைச் சேர்ந்த யானைத் தந்தம் கடத்தல்காரர்கள் பிடிபட்டனர்
தமிழ்நாட்டு திருட்டு விலங்கு வேட்டைக்காரர்களும், வனயுயிர் வர்த்தகர்களும் ஏன் கேரளா வழியாக கர்நாடகத்திற்கு வருகிறார்கள் என்பது சந்தனக்கடத்தல் வீரப்பன் காலத்திலிருந்தே கர்நாடகம், தமிழ்நாடு மாநிலங்களைச் சார்ந்த அதிகாரிகளுக்குக் குழப்பமாக இருந்திருக்கிறது. ஆனால் அதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது.
வனயுயிர் வர்த்தகத்திற்கு, குறிப்பாக தந்த வர்த்தகத்திற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரிய சந்தை இருக்கிறது. அந்தத் தந்த வர்த்தகச் சந்தையில் தந்தக் கைவினைஞர்கள் மும்முரமாகச் செயல்படுகிறார்கள்; அவர்களுக்கானத் தொழில்நுட்பமும் இருக்கிறது.
இந்தியாவின் இரகசிய சந்தையில் அழகுப்படுத்தாத யானைத்தந்தம் ஒருகிலோ ரூ.15,000-லிருந்து ரூ.50,000 வரை போகிறது; அதே சமயம் நன்றாக இழைக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்ட தந்த வர்த்தகம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் போகிறது
தூத்துக்குடி, சென்னை போன்ற கிழக்கிந்திய துறைமுகங்களிலிருந்து செல்கின்ற கப்பல்கள் மீது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் துறைமுகங்களில் ஒரு பெரிய கண்காணிப்பு இருக்கிறது. ஆனால் மேற்கிந்திய துறைமுகங்களிலிருந்து செல்கின்ற கப்பல்கள் அங்கே எளிதாகச் சென்று, சரக்கை இறக்கிவிட்டு பாதுகாப்பாகத் திரும்பி வருகின்றன.
மேற்குக் கடலோரத் துறைமுகங்களில் தந்த வர்த்தக வழக்கு ஒன்று கூட இதுவரை பதிவானதில்லை. முன்பு தந்த வர்த்தகம் பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்பட்டது. ஆனால் 2019-ல் வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், திருட்டு யானைத் தந்தச் சந்தை வெளிநாட்டிற்குப் புலம்பெயர்ந்தது. கடத்தல்காரர்கள் தங்கள் பாதைகளை மறைக்கும் விதமாக, யானைத் தந்தங்களை வேட்டையாடித் திருடிய தமிழ்நாட்டுப் பகுதியிலிருந்து கிளம்பி சுற்றுப்பாதைகளில் பயணித்து கர்நாடகத்தில் மங்களூரு, கார்வார், மால்பே போன்ற பெரிய துறைமுகங்களுக்கும், தடாடி போன்ற சிறிய துறைமுகங்களுக்கும் செல்கின்றனர்.
தமிழ்நாட்டு வனத்துறை அதிகாரிகள் இரகசிய செய்திகளை கர்நாடக, கேரளா அதிகாரிகளிடம் இப்போது பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால்தான் கர்நாடகத்திலும், கேரளாவிலும் தந்தக் கடத்தல்காரர்களும், வேட்டைக்காரர்களும் அதிகமாகவே கைது செய்யப்படுகிறார்கள் என்று தமிழ்நாட்டின் மூத்த வனத்துறை அதிகாரி ஒருவர் இன்மதியிடம் சொன்னார்.
யானை இறப்பு விசயத்திலும், கடத்தல் தந்த வர்த்தகத்திலும், தமிழ்நாட்டின் பெயர் அடிக்கடி அடிபட்டிருக்கிறது. 2017 வரை இந்திய யானைத் தந்தங்களை ஜப்பான் இறக்குமதி செய்து கொண்டிருந்தது. ஆனால் தடை விதிக்கப்பட்ட பின்பு, இந்திய தந்தத்தையும், தந்தக் கலைப்பொருட்களையும் ஜப்பான் முற்றிலும் தவிர்த்துவிட்டது.
ஆனால் பெங்களூரு, மும்பை போன்ற மாநகரங்களிலும் தந்த கைவினைப் பொருட்களின் விற்பனை குறையவில்லை. தந்த கலைப்பொருட்கள் ஆர்வலர்கள் இன்னும் பெங்களூருவின் எம்ஜி சாலைக்கும், மும்பையின் கொலபாவுக்கும் விஜயம் செய்கின்றனர்.
பிடரள்ளி கெஞ்சா கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் இயங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவனை இப்படியே விட்டுவிட்டால், அவன் பெரியதோர் அச்சுறுத்தலாக மாறிவிடுவான்
தமிழ்நாட்டிலிருந்தும், கேரளாவிலிருந்தும் தப்பித்து கர்நாடகத்திற்குள் வருவதற்கான பாதை குண்டுலூபேட்டைதான். அதனால்தான் வனயுயிர் வேட்டைக்காரர்கள் இந்தப் பாதை வழியாக கர்நாடகத்திற்குள் நுழைகிறார்கள். ஏனென்றால் பெரும்பாலான திருட்டு விலங்கு வேட்டை தமிழகக் காட்டுப் பகுதிகளில்தான் நடைபெறுகிறது.
பிடரள்ளி கெஞ்சா கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் இயங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவனை இப்படியே விட்டுவிட்டால், அவன் பெரியதோர் அச்சுறுத்தலாக மாறிவிடுவான் என்று எம்எம் மற்றும் பிஆர் குன்றுகளில் செயற்படும் ஒரு இயற்கைவாதி சொன்னார்.
Read in : English