Read in : English

மாமல்லபுரம் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற புலிக்குகை (Tiger cave) என்ற யாழிக்குகை உள்ளது. இந்தக் குடைவரை மேடை, இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.

இந்தக் குடைவரை மேடையை புலிக்குகை என அழைத்தாலும், புலிச் சிற்ப வடிவம் எதுவுமில்லை. இங்குள்ள சிற்பங்கள் யாளி மற்றும் சிங்க தலையை நினைவூட்டும் வகையில் உள்ளன. சிறிய பாறையைக் குடைந்து, இக்குடைவரை உருவாக்கப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக மேடை போன்ற அமைப்பாக உள்ளது. இதன் முகப்பில் முற்றிலும் வித்தியாசமான யாளி போன்ற சிங்கத் தலைகள் அரை வட்ட அமைப்பில், 16 உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

Tsuna

புலிக்குகை (Photo Credit: K Saravana Kumar -Wikimedia Commons)

ஏனைய குடைவரைகளில் இருந்து, இந்த தொல்லியல் சின்னம் வேறுபட்டுள்ளது. இதை கோயில் என்று சிலரும், நிகழ்ச்சி நடத்தும் மேடை அமைப்பு எனவும் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த மேடை முன் ஒரு திடல் அமைந்துள்ளது. மன்னன் அமர்ந்து நிகழ்வை பார்ப்பதற்கான பகுதி அது என்ற கருத்தையும் ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.

இதன் அருகே சிவன் கோவில் ஒன்று உள்ளது. அதில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், ‘இது இறைவன் எழுந்தருளும் இடம்’ எனப் பொருள்படும் வகையில், ‘திருவெழுச்சில்’ என செதுக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கு மான்யம் வழங்கிய கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.

இந்த குகையை ஒட்டி, 200 மீட்டர் துாரத்தில் பல்லவர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட குடைவரை ஒன்று உள்ளது. இது, சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம் என அழைக்கப்படுகிறது. பாறையை குடைந்து, உருவாக்கப்பட்டுள்ள இந்த குடைவரை, வங்கக் கடலை நோக்கியபடி உள்ளது.

இயற்கையாக அமைந்த பஞ்சுருட்டான் சரணாலயத்தை வனத்துறை கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதே நேரம், இந்தத் தொல் சின்னம் குறித்து முறையான ஆய்வுகளை தொடர தொல்லியல் துறை முயற்சி எடுக்க வேண்டும்.

நீள்சதுரத் தள அமைப்பைக் கொண்ட இந்த குடைவரை பின்புறச் சுவரில், சோமாஸ்கந்தர் உருவம் புடைப்புச் சிற்பமாக குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. கருவறை நடுவில் உள்ள குழியில், 16 பட்டையுள்ள லிங்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இது, பிற்காலத்தில் எழுப்பப்பட்டதாக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. குடைவரையின் முகப்பில் இரண்டு பக்கச் சுவருடன் ஒட்டி இரண்டு அரைத்தூண்களும், நடுவில் இரு தூண்களும் அமைந்துள்ளன. மண்டபத்தின் இடது மற்றும் வலதுபுற சுவர்களில், இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. இடது புறம், 16 வரிகளில் 6 செய்யுட்களை கொண்ட, தேவநாகரி எழுத்து வடிவில் அமைந்த கல்வெட்டும், வலப்புறம் 17 வரிகளில், 7 செய்யுளைக் கொண்ட, பல்லவ கிரந்த எழுத்தில் ஒன்றும் உள்ளன.

தமிழகத்தில் பொதுவாக காணப்படும், பஞ்சுருட்டான் (Asian Bee eater) என்ற பறவையினம் வசிப்பிடமாகியுள்ளது. (Photo Credit:J Charles Sharp -Wikimedia Commons)

இந்த குடைவரையை அதிரண சண்ட பல்லவேஸ்வர கிருஹம் என, கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அதிரண சண்டன் என்ற விருதுப் பெயருள்ள ராஜசிம்ம பல்லவன் காலத்தில் இக்குடைவரை வெட்டப் பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். குடைவரைக்கு எதிரே பாறையில், மகிஷாசுரனுடன் கொற்றவை போரிடும் காட்சி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தில் ஆறு கரங்களுடன் காணப்படுகிறாள் கொற்றவை. விஜய நகர அரசு காலத்திலும் இது சிறப்புற்று விளங்கியது.

இவ்வாறு வித்தியாசமாக அமைந்துள்ள இந்த பழங்கால சின்னம் பற்றி, தெளிவான ஆய்வுகள் எதுவும் தொடர்ந்து நடக்கவில்லை. வங்கக் கடற்கரையில், சுனாமி தாக்கம் ஏற்பட்ட போது, இங்கு மணலில் புதைந்திருந்த சங்ககாலக் கட்டடம் ஒன்று வெளிப்பட்டது. அதை திருவெழிச்சில் முருகன் கோவில் என அழைக்கின்றனர்.

தொடர்ந்து, இந்த பழங்கால சின்னம் பற்றி, தொல்லியல் அதிகாரி சத்தியமூர்த்தி சில தகவல்களை வெளியிட்டார். தனிப்பட்ட முறையில், சுதந்திர ஆய்வாளர்கள் சிலரும் இதன் வரலாற்று தொன்மை மற்றும் கட்டட வடிவமைப்பு குறித்து ஆராய்ந்தனர். ஆனால், தொல்லியல் துறை சார்ந்து முறையான ஆய்வுகள் நடத்த நடவடிக்கை ஏதும் எடுத்ததாக தெரியவில்லை.

அந்த இடம் இப்போது, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடல் மாற்றத்தால் கண்டறியப்பட்ட இந்த தொல் கட்டட அமைப்பு மதில் சுவர் எழுப்பி பாதுகாக்கப்படுகிறது. ஆனாலும், வரலாற்று சின்னமான இதன் அருமை தெரியாதவர்கள், இதன் மீது சிதைவுகளை ஏற்படுத்துகின்றனர்.

சுனாமியின் போது, வங்க கடற்கரையில் ஏற்பட்ட மாற்றத்தால் துலங்கிய திருவெழிச்சில் சங்க காலக் கட்டடம் உள்ள பகுதி, குறிப்பிட்ட ஒரு பறவை இனத்தின் சரணாலயமாக மாறியுள்ளது. தமிழகத்தில் பொதுவாக காணப்படும், பஞ்சுருட்டான் (Asian Bee eater) என்ற பறவையினம் வசிப்பிடமாகியுள்ளது. பல நூறு பறவைகள் ஒரே இடத்தில் வசிப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

பஞ்சுருட்டான் பறவையின் பொந்துக்கள்

மண்ணில் பொந்து அமைத்துள்ள பஞ்சுருட்டான் பறவைகள், சுதந்திரமாக இனம் பெருக்கம் செய்யும் பகுதியாகியுள்ளது. கடற்கரையை ஒட்டி, மனித நடமாட்டம் குறைந்த பகுதி என்பதால், பாதுகாப்பை உணர்ந்து இங்கு தங்கியுள்ளன பறவைகள். ஒரே இடத்தில் பல நூறு பறவைகள் சமூகமாக வாழுவது வியப்பை தருகிறது. இயற்கையாக அமைந்த பஞ்சுருட்டான் சரணாலயத்தை வனத்துறை கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதே நேரம், இந்தத் தொல் சின்னம் குறித்து முறையான ஆய்வுகளை தொடர தொல்லியல் துறை முயற்சி எடுக்க வேண்டும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival