Read in : English
திருவையாற்றில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படும் தியாகராஜரின் (1767-1848), ஒரு நூற்றாண்டுக்கு முன் புதர் மண்டிக் கிடந்த சமாதியைச் சீர்படுத்தி, அவருக்கு கோவிலையும் நினைவு மண்டபத்தையும் தனது சொத்துகளை விற்றுக் கட்டியவர் தேவதாசி பாரம்பரியத்தில் வந்த பெங்களூரு நாகரத்தினம்மாள் (1878-1952). அதே வளாகத்தில் உள்ள அவரது சமாதியின் மேல் அமைக்கப்பட்ட நாகரத்தினம்மாளின் சிலை தரையோடு தரையாக பூட்டப்பட்ட அறையில் கிடக்கிறது.
தியாகராஜரின் கீர்த்தனைகள் அவருடைய சிஷ்ய பரம்பரையினரின் வாயிலாக பரவலாகப் பாடப்பட்டாலும், திருவையாற்றில் உள்ள அவரது சமாதியில் குருபூஜை ஆராதனைகள் நடைபெறுவது 1905க்குப் பிறகுதான் தொடங்கியது. 1920களில் திருவையாறு வந்த நாகரத்தினம்மா, தியாகராஜரின் சமாதி இருந்த இடம் புதர்மண்டி கிடந்ததைப் பார்த்து, அதனை சீர்படுத்த விரும்பினார்>. அதற்காக தனது சொத்துகளை விற்று, தனது சொந்தப் பணத்தை வைத்து அந்த இடத்தை சீர்படுத்தி கோவில் கட்டினார். 1925ஆம் ஆண்டில் ஜனவரி 7ஆம் தேதி குடமுழுக்கும் நடத்தினார். தியாகராஜரின் சமாதியைச் சுற்றிலும் மண்டபம் கட்டினார்.
தற்போது நாகரத்தினம்மாளின் சிலை தரையில் இருக்கும்படி வைக்கப்பட்டுள்ளது. வாசல் கதவுகள் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டுள்ளன
இதை நினைவு கொள்ளும் வகையில், இந்தக் கோயிலும் ஆசிரமமும் சிறந்த சங்கீத வித்வானும் மகானுமான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளுக்கு அவருடைய எளிய பக்தையும் மைசூர் புட்ட லட்சுமி அம்மாளின் மகளுமான வித்யாசுந்தரி பெங்•ளூரு நாகரத்தினம்மாவின் காணிக்கை என்ற கல்வெட்டு அங்கே உள்ளது. கும்பாபிஷேகம் 7.1.1925 என்றும் கட்டடம் கட்டி முடிக்கப் பெற்றது நவம்பர், 1938 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது இறுதிக் காலத்தை திருவையாற்றிலேயே கழித்த அவர், தனது சொத்துகளை அறக்கட்டளைக்காக எழுதி வைத்து விட்டார். தான் இறந்த பிறகு தனது சமாதி, தியாகராஜரின் நேர்பார்வையில்படும்படி இருக்க வேண்டும் என்று விரும்பியவர் நாகரத்தினம்மாள்

நாகரத்தினம்மாள் பணியை நினைவுகூரும் கல்வெட்டு
. தியாகராஜர் சமாதி இருந்த வளாகத்தில் அவரது விருப்பப்படியே நாகரத்தினம்மாளின் சமாதியும் உள்ளது. பின்னர் நாகரத்தினம்மாளின் சமாதியின் மேல் சிலை ஒன்றை வைக்க, சன்யாஸி ஒருவர் தீர்மானித்தார். அதைத் தொடர்ந்து, நாகரத்தினம்மாள் உட்கார்ந்த நிலையில் கைகூப்பி தியாகராஜரை வணங்குவது போன்று சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலை சமாதியின் மேல் வைக்கபட்டு, மேற்கூரையும் அமைக்கப்பட்டது.
“ஆனால், தற்போது நாகரத்தினம்மாளின் சிலை தரையில் இருக்கும்படி வைக்கப்பட்டுள்ளது. வாசல் கதவுகள் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டுள்ளன. அதனால் நாகரத்தினம்மா சிலையை பார்க்க வேண்டுமானால் கிட்டேபோய் பார்க்க வேண்டும். அதுவும் இருட்டாக இருக்கிறது” என்கிறார் சமீபத்தில் தியாராஜர் சமாதிக்குச் சென்று நேரில் பார்த்து வந்த எழுத்தாளர் அமரந்த்தா.
“இப்படி இருந்தால், தியாராஜருக்கு நேர் எதிரே அவரை வணங்கியபடி பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற நாகரத்தினம்மாளின் விருப்பம் எப்படி நிறைவேறும். தியாகராஜர் சமாதியைச் சுற்றி மண்டபம் எழுப்பி, ஆராதனை விழாவை நடத்தியத்தில் முக்கியப் பங்குவகித்த நாகரத்தினம்மாளுக்குச் செய்யும் மரியாதையா இது” என்று கேள்வி எழுப்பும் அவர், “நாகரத்தினம்மாள் சிலையை பீடத்தில் வைத்தால் அவரும் தியாகராஜர் சமாதியையும் தியாகராஜர் உருவச் சிலையையும் பார்க்க முடியும். மற்றவர்களும் நாகரத்தினம்மாள் சிலையை நன்றாகப் பார்க்க முடியும். ஆராதனை விழாவை நடத்துவதும் அறக்கட்டளை நிர்வாகிகள் மனது வைத்தால் இதையெல்லாம் முடியாதா என்ன” என்கிறார்.

பெங்களூரு நாகரத்தினம்மா
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக திருவையாறு தியாகராஜர் சுவாமிகளின் 175-வது வருட ஆராதனை விழா தியாகராஜ சுவாமிகள் முக்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான வருகிற 22-ம் தேதி மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அன்றைய தினம் கர்நாடக இசைக் கலைஞர்கள் அவரது நினைவிடத்தில் நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகம் என்னும் ஐந்து வகை ராகங்களைக் கொண்ட பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி, தியாகராஜ சுவாமி•களுக்கு இசை அஞ்சலி செலுத்துவார்கள். அதைப் பற்றி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதுவார்கள். அந்த விழா முடிந்த பிறகு, அந்த இடம் குறித்த கவனிப்பு அடுத்த ஆண்டில்தான் இருக்கும். தனது சொத்துகளையெல்லாம் செலவழித்து தியாகராஜ சுவாமிகள் சமாதியை சீரமைத்து, சுற்றி மண்டபம் எழுப்பிய பெங்களூரு நாகரத்தினம்மாவை நினைவுகொள்ளும் வகையில், தரையில் அமர்ந்த நிலையில் இருக்கும் அவரது சிலையை பீடத்தில் வைக்க முயற்சி செய்வார்களா? தெரியாது.
தனது சொத்துகளையெல்லாம் செலவழித்து தியாகராஜ சுவாமிகள் சமாதியை சீரமைத்து, சுற்றி மண்டபம் எழுப்பிய பெங்களூரு நாகரத்தினம்மாவை நினைவுகொள்ளும் வகையில், தரையில் அமர்ந்த நிலையில் இருக்கும் அவரது சிலையை பீடத்தில் வைக்க முயற்சி செய்வார்களா?
நாகரத்தினம்மாவின் வாழ்க்கை குறித்து, தி தேவதாசி அண்ட் தி செயின்ட் என்ற புத்தகத்தை எழுதிய வெ. ஸ்ரீராம், அந்தப் புத்தகத்தின் கடைசியில் எழுதியிருப்பது இன்றையச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கிறது: “நாகரத்தினம்மாவின் சமாதி தென்படுகிறது. அதன் அருகில் சென்று, பூட்டிய கதவுகளினூடே உள்ளே எட்டிப் பார்க்கிறேன். எழுத்தாளர் மாலன் எழுதியதாக அறி]ஞர் சு•ஜாதா விஜயராகவன் ஒருமுறை இசைத்த வரிகள் மனதில் எழுகின்றன:
அரசர்கள் இவனைப் போற்றினார்கள்.
வித்வான்கள் இவனை விற்றுப் பிழைத்தார்கள்.
ஆனால் ஒரு தாசி அல்லவோ இவனுக்குக் கோயில் கட்டினாள்?
Read in : English