Read in : English
தமிழ் திரையுலகில் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராகக் கொடிகட்டிப் பறக்கும் ரஜினிகாந்த் 72 வயதில் அடியெடுத்து வைக்கிறார். பாலச்சந்தரின் மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் சந்திரகாந்த் மகன்களில் ஒரு மகனின் பெயர் ரஜினிகாந்த்.
பொதுவாக, இன்மதி டாட் காம் ரஜினியின் மீது குறைகளைச் சுட்டிக்காட்டியே எழுதி வந்துள்ளது. அவரது ஒவ்வொரு திரைப்படம் வெளியிடப்படும்போதும் திடீரென்று அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அவர் எடுப்பது குறித்து விமர்சித்து எழுதி இருக்கிறோம். அவரது திரைப்படங்களுக்கான டிக்கெட் வரிச்சலுகைகளுக்காக இதைச் செய்கிறார் என்று முடிவுக்கு வர நேர்ந்தது. ரஜினி, தனது வயதுக்கேற்ற வேடங்களை ஏற்று நடிப்பதில்லை என்று குறைகூறி இருக்கிறோம். ‘அவள் அப்படித்தான்’ இயக்குநர் ருத்ரய்யா சார்பாக அவர் நிற்கவில்லை என்று எழுதியிருக்கிறோம். ஆனால் இன்றைய தினம் ரஜினியை வாழ்த்துகிறோம்
பாலச்சந்தர்தான், சிவாஜிராவ் கெய்க்வாட்டுக்கு, ரஜினிகாந்த் என்ற பெயரைச் சூட்டியவர். அவரது முதல் படம் அபூர்வ ராகங்கள் (1975). அழுக்குப் படிந்த உடை. கோட், கலைந்த தலை, தாடி, கண்களில் சோகம் இதுதான் முதல் படத்தில் ரஜினிகாந்தின் சினிமா தோற்றம். வில்லனாக வர வேண்டும் வாழ்த்துங்கள் சார் என்று பாலசந்தரிடம் காலில் விழுந்து வணங்கிய அவரது, வளர்ச்சி அபாரமானது.
1978இல் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த முள்ளும் மலரும் படத்தில் காளியாக நடித்த ரஜினியின் முரட்டுத்தனமும் பிடிவாதமும் அவரை சிறந்த நடிகராக முன்னிறுத்தியது.
இதேபோல ருத்ரைய்யா இயக்கி கமல் ஹாசனுடன் இணைந்து ரஜினி நடித்த அவள் அப்படித்தான் (1978) ஆறிலிருந்து அறுபது வரை (1979) போன்ற படங்கள் அவரது நடிப்பு ஆற்றலைப் பறைசாற்றியது. தமிழ் திரையுலகில் படிப்படியாக வளர்ந்து வந்த ரஜினிகாந்த் அவர், தனக்கு என தனிபாணி, தனி ஸ்டைல் என்று தனக்கான தனி பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டார்.
அவரது அரசியல் ஆசை நிறைவேறாத கனவாகப் போய்விட்டது. அவர் அரசியலுக்கு வராமலேயே அதற்கு முழுக்குப் போட்டுவிட்டார் 2019ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினி.
1977இல் வெளிவந்த பாரதிராஜாவின் 16 வயதினிலே திரைப்படத்தில் வில்லனாக வந்த ரஜினி பேசிய பஞ்ச் டயலாக்: இது எப்படி இருக்கு? இந்த வசனம் அன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் பாப்புலர்.
ரஜினி திரைப்படங்களில் இடம் பெற்ற பஞ்ச் டயலாக்குகள்:
கெட்டபய சார் இந்த காளி
படம்: முள்ளும் மலரும் (1978)
நல்லவங்களை ஆண்டவன் நெறைய சோதிப்பான். ஆனா கைவிடமாட்டான். கெட்டவர்களுக்கு ஆண்டவன் நெறைய கொடுப்பான். ஆனால் கைவிட்டுவிட்ருவான்.
நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி
படம்: பாட்ஷா (1995)
நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்
நான் எப்பவும் போற ரூட்டை பத்தி கவலைப்படுறதே இல்ல. ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்.
படம்: முத்து (1996)
ஆண்டவன் சொல்றான். அருணாசலம் முடிக்கிறான்.
நான் சொல்றதையும் செய்வேன். சொல்லாததையும் செய்வேன்.
படம்: அண்ணாமலை (1997)
என் வழி தனி வழி
கஷ்டபடாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைக்கிற எதுவும் நிலைக்காது.
படம்: படையப்பா (1999)
நான் யோசிக்காம பேசமாட்டேன். பேசின பிறகு யோசிக்க மாட்டேன்
படம்: பாபா (2002)
கண்ணா! சிங்கம் சிங்கிளாகத்தான் வரும். Ðபன்னிங்கதான் கூட்டமாக வரும்
படம்: சிவாஜி (2007)
நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு
படம்: கபாலி (2016)
Read in : English