Read in : English
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ராவத்துடன் அவரது மனைவி மற்றும் இராணுவ அதிகாரிகளும் பயணம் செய்துள்ளனர். இதுவரை 13 பேர் மரணம் அடைந்ததாகவும் படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த விபத்து ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பானதுதானா என்ற சந்தேகத்தை மீண்டும் உருவாக்குவதாக உள்ளது.
பிரபலமான பலர் ஹெலிகாப்டர் விபத்துகளில் மரணம் அடைந்துள்ளனர். ஆந்திராவின் முதல்வர் ராஜசேகர ரெட்டி 2009ல் நடந்த விபத்தில் மரணமடைந்தார். அருணாச்சல பிரதேச முதல்வர் டொர்ஜீ காண்டு மே 2011ல் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் N V N சோமு 1997ல் நடந்த ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். 2002ம் ஆண்டு பாராளுமன்ற சபாநாயகர் G M C பாலயோகி சென்ற ஹெலிகாப்டர் ஆந்திர மாநிலம் கைகாளுர் அருகே விபத்துக்குள்ளானதில் இறந்தார்.
ஹெலிகாப்டர் பயணம் உண்மையில் பாதுகாப்பானதுதானா என்ற கேள்வியை உலகம் முழுவதுமே எழுப்பியுள்ளது.
கலிபோர்னியாவில் 2020ம் வருடம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பாஸ்கெட்பால் வீரர் பிரையன்ட் கோபேயும் அவரது மகள் மற்றும் ஏழு பேர் இறந்தது, ஹெலிகாப்டர் பயணம் உண்மையில் பாதுகாப்பானதுதானா என்ற கேள்வியை உலகம் முழுவதுமே எழுப்பியுள்ளது.
உண்மையில் ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பானவையா?
ஹெலிகாப்டர் விபத்துகள் பற்றிய தரவுகள் இந்தியாவில் அதிகம் வெளிவருவது இல்லை. ஆனால் அமெரிக்காவில் கிடைக்கும் தரவுகள் தனிப்பட்ட பயணங்களுக்காக உபயோகப்படுத்தும் ஹெலிகாப்டர்கள் அதிகம் விபத்துக்குள்ளாவதாக தெரிவிக்கின்றன. சுற்றுலா அல்லது வணிக முறையில் பயணம் செய்ய பயன்படுத்தும் ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாவது அதிகம் இல்லை எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களை போலன்றி ஹெலிகாப்டர்களும் பல பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துகின்றன. அதில் Safety Management System என்பதும் ஒன்று. விபத்துகளை தடுக்க ஒற்றை என்ஜின்கள் இரட்டை என்ஜின்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. சர்வதேச ஹெலிகாப்டர் பாதுகாப்பு அமைப்பு கூற்றின்படி ஹெலிகாப்டர் கட்டுப்பாடுகள் தானியங்கி கட்டுப்பாட்டு (Automatic Flight Control Systems) முறைக்கு வந்திருக்கிறது. மோசமான வானிலையில் இந்த தானியங்கி கட்டுப்பாட்டு அமைப்பு ஹெலிகாப்டர் பறக்கும் உயரம் மற்றும் தன்மையை பாதுகாப்பானதாக மாற்றுவதோடு விமானியின் மேலுள்ள பணி சுமையை குறைக்கிறது. இந்த அமைப்பின்படி மோசமான வானிலையில் பறக்கும்போது விமானி கருவியின் மூலம் கிடைக்கும் தகவல்களை பயன்படுத்தி பறக்க வேண்டும்.
ஒரு முழுமையான ஆய்வுக்கு பிறகே தலைமை தளபதி பறந்த ஹெலிகாப்டர் எப்படி விபத்துக்குள்ளானது என்று சொல்ல முடியும்.
ஒரு முழுமையான ஆய்வுக்கு பிறகே தலைமை தளபதி பறந்த ஹெலிகாப்டர் எப்படி விபத்துக்குள்ளானது என்று சொல்ல முடியும். அமெரிக்கா அரசாங்கத்தின் தரவுகளின்படி 2018 ல் ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாவது விகிதம் ஒரு இலட்சம் பறக்கும் மணிக்கூறுகளில் 0.72 ஆக உள்ளது. பயணிகள் விமானம் தான் மிக பாதுகாப்பான ஒன்று. விபத்து விகிதம் பூஜ்யம். இராணுவ ஹெலிகாப்டர்கள் கதை வேறு. ஆபத்தான பயணம் மேற்கொள்ளவே உண்டாக்கப்பட்டவை அவை.
இருப்பதிலே ஆபத்தான விமான பயணங்கள், பொழுதுபோக்குக்காக உபயோகப்படுத்தும் சிறுவிமானங்களிலே தான் நிகழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு இலட்சம் பறக்கும் மணி கூறுகளில் முழுதாக ஒரு சதவீதம்.
ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் வகை எது?
முப்படை தலைமை தளபதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான M-17 V-5 எனும் ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளார். அவற்றை உற்பத்தி செய்யும் ருஷ்ய நிறுவனமான ரொசோபாரோன் எக்ஸ்போர்ட் அவை எந்தவிதமான நிலப்பகுதிக்கும் காலநிலைக்கும் பொருத்தமானவை என்று தெரிவிக்கிறது. இந்த வகை ஹெலிகாப்டரை இரவிலும் பகலிலும், ஆபத்தான வானிலைகளிலும், தீவிர குளிர் நிலவும் மலைப்பகுதிகளிலும் அதிக வெப்பநிலை காணப்படும் பகுதிகளிலும் பயன்படுத்த உகந்தது என்றும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
ஹெலிகாப்டரை எல்லா நேரங்களிலும் கட்டுப்படுத்த கூடிய அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்ட மாடல் தான் விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி ருஷ்ய நிறுவனமான ரொசோபாரோன் எக்ஸ்போர்ட் தன்னுடைய கசன் ஹெலிகாப்டர் தொழிற்சாலையில் உருவாக்கிய 150 ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்திருக்கிறது. கடைசி தொகுப்பு 2016ம் ஆண்டு வந்து சேர்ந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து இந்திய விமானப்படை 2019ம் ஆண்டு இந்த ஹெலிகாப்டர்களை பழுதுபார்க்கும் பணிமனை ஒன்றை சண்டிகரில் அமைத்தது.
எவ்வளவு நவீன தொழில்நுட்பம் அமைந்த போதும் விமானிகளுக்கு போதுமான பயிற்சி அளிக்கும் பட்சத்திலும், ஹெலிகாப்டர் விபத்துகளை ஒரு இலட்சம் பறக்கும் மணிக்கூறுகளுக்கு 0.55 விபத்து விகிதம் என்று 2025 வருடத்துக்குள் குறைப்பதுதான் இலக்கு என்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஹெலிகாப்டர் பாதுகாப்பு குழு கூறுகிறது.
நிலைமை மோசமாகும் பட்சத்தில் விமானிகள் உடனடியாக தரையிறக்கும் வழிகளை தேட வேண்டும் என்று சர்வதேச ஹெலிகாப்டர் பாதுகாப்பு அமைப்பு கூறுகிறது.
ஹெலிகாப்டர் விமானிகளுக்கு தங்க விதிகள் என்று சில விதிகளை வரையறுக்கும் சர்வதேச ஹெலிகாப்டர் பாதுகாப்பு அமைப்பு, மோசமான வானிலை மட்டுமல்ல அவர்கள் மாற்று பாதைகளையும் கணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. நிலைமை மோசமாகும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக தரையிறக்கும் வழிகளை தேட வேண்டும் என்றும் கூறுகிறது. பறக்கும் பாதையை மாற்றும் படியும், புறப்பட்ட இடத்துக்கே திரும்பும்படியும் அல்லது கிடைக்கும் இடத்தில் தரையிறக்க வேண்டும் என விமானிகளுக்கு அந்த அமைப்பு அறிவுரை கூறுகிறது.
முப்படை தலைமை தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் எல்லா பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி இருக்கும் என்பதில் சந்தேகம் வர வாய்ப்பில்லை. ஆனால் இவ்வாறான மோசமான விபத்தில் எல்லாவகை சந்தேகங்களும் எழுப்பப்படுவது இயல்புதான். எல்லா பாதுகாப்பு நெறிமுறைகளும் மேற்கொண்டிருக்கும் பட்சத்தில் எதிர்பாராத மின்னல் தாக்குதலோ அல்லது பருவநிலை மாற்றங்களினால் ஏற்படும் வானிலை மாற்றங்களோ விபத்துக்கு காரணமாகி இருக்குமோ என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
Read in : English