Read in : English
தீபாவளி என்றாலே புதிய துணிமணிகளும் பலகாரங்களும்தான். அந்தக் காலத்தில் சாமானியக் குடும்பங்களில் இட்லி அவிப்பது முக்கியமானது. வடையும், பஜ்ஜியும் அத்துடன் இருக்கும்.
நடுத்தரக் குடும்பங்களில்தான் தீபாவளிக்கு சில தினங்கள் முந்தியே அதிரசம், முறுக்கு போன்ற பலகாரங்கள் தயாராகிவிடும். தலை தீபாவளிக்கு வீட்டு மாப்பிளை வருகிறார் என்றால் குடும்பமே கலகலப்பாகி விருந்தோம்பல் களைகட்டிவிடும்.
அந்தக் காலத்தில் கிராமங்களில் தீபாவளி என்றால் நெல்லு சோறு என்று குடும்பமே குதூகலமாகிவிடும். எப்படியும் பணியாரம் போன்று ஏதாவது ஒரு பலகாரம் இருக்கும். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் வீடுகளில் ஆட்டுக்கறி உணவு நிச்சயம் இருக்கும். தற்போது கறிக் குழம்பு, சோறு இருந்த இடத்துக்கு பெரும்பாலும் பிரியாணி வந்துவிட்டது.
பலகாரங்களால் வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக சில நடுத்தரக் குடும்பங்களில் தீபாவளி லேகியம் தயாரித்து வைத்திருப்பார்கள். தற்போது கடைகளில் கிடைக்கிறது. ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் எந்த பலகாரமும் வீட்டுக்கே வந்து விடுகிறது. இதனால், பெருநகரங்களில் உள்ள பலர் வீட்டில் செய்வதற்குப் பதிலாக கடைகளில் ஆர்டர் செய்து விடுகின்றனர். சிறிய ஊர்களில் கடைகளுக்கு நேரில் சென்று வாங்குகிறார்கள்.
இதனால், பெருநகரங்களில் உள்ள பலர் வீட்டில் செய்வதற்குப் பதிலாக கடைகளில் ஆர்டர் செய்து விடுகின்றனர். சிறிய ஊர்களில் கடைகளுக்கு நேரில் சென்று வாங்குகிறார்கள்.
சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்குப் பிடித்த உணவை வீட்டில் செய்து சாப்பிடுகிறார்கள் அல்லது கடைகளில் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். எப்படியோ பண்டிகையையும் சுவாரசியமான உணவையும் பிரித்துப் பார்க்க முடியாது.
சமையல் செய்ய பழகுபவர்களில் பலர் மற்றவர்களிடம் கேட்டும், புத்தகங்ளைப் பார்த்தும் புதிய வகை உணவு வகைகளைச் செய்யக் கற்றுக் கொள்கிறார்கள். இதனாலேயே, வாசகிகளைக் கவரும் வகையில் பெண்கள் பத்திரிகைகளில் சமையல் குறிப்புகளுக்குத் தனி இடம் உண்டு. மீனாட்சி அம்மாளின் சமையல் புத்தகம் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக விற்றுக் கொண்டிருக்கிறது. கு.ப. ராஜகோபாலனின் மகள் கு.ப. சேது அம்மாளின் சமைத்துப் பார்! என்ற புத்தகம் அந்த நாளில் பிரபலம். செட்டிநாட்டு சமையல் உள்பட பெரும்பாலான பதிப்பகங்களில் ஏதாவது சமையல் புத்தகம் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.
சமைப்பது பெண்களின் வேலை மட்டுமில்லை, ஆண்களும் சமைக்கலாம் என்பதை விளக்குகிறது எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் ஆண்களும் சமைப்பது அதனினும் இனிது புத்தகம்.
ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள் என்ற புத்தகத்தையும் அவர் எழுதியிருக்கிறார். நாஞ்சில் நாட்டு உணவுகள் பற்றி சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதி இருக்கிறார். சமையலும் சாப்பாடும் பல கதைகளிலும் நாவல்களிலும் ஆங்காங்கே காணக் கிடைக்கும்.
வறட்டு கௌரவத்துக்காகவும் வாய் ருசிக்காகவும் வசீகர உணவுகளைச் சாப்பிடும் ஜங்புட் பழக்கத்¬தை எதிர்த்து எஸ். ராமகிருஷ்ணன எழுதிய உணவு யுத்தம், சமஸ் எழுதிய சாப்பாட்டு புராணம் போல அண்மைக் காலங்களில் பல சமையல் புத்தகங்கள் வந்துள்ளன.
சாப்பாடு பற்றி அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். எந்த ஹோட்டலில் தனக்குப் பிடித்த உணவு கிடைக்கும் என்பதில் ஆர்வமாக இருப்பார் இலக்கிய விமர்சகர் எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியம்.
சாப்பாடு பற்றி அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். எந்த ஹோட்டலில் தனக்குப் பிடித்த உணவு கிடைக்கும் என்பதில் ஆர்வமாக இருப்பார் இலக்கிய விமர்சகர் எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியம். அந்தக் காலத்தில் காப்பி இல்லை என்பது ஆ.இரா. வேங்கடாசலபதி காபி பற்றி எழுதிய ஆய்வுக்கட்டுரை.
சுற்றுப்புறச் சூழலில் அக்கறை செலுத்திவரும் சென்டர் பார் சயின்ஸ் அண்ட் என்விரான்மெண்ட் அமைப்பு, பிசினஸ் ஆஃப் டேஸ்ட், ஃபர்ஸ்ட்புட் போன்ற உணவு குறித்த புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
உணவு பற்றிய விஷயம் என்றால் மக்கள் ஆர்வத்துடன் கவனிக்கிறார்கள். எழுத்தாளர் தஞ்சாவூர் ப்ரகாஷ், தஞ்சாவூரில் கொ]ஞ்ச காலம் மெஸ் நடத்தி இருக்கிறார்.
உணவு வகைகளை வகை வகையாகச் சமைப்பதற்காக புத்தகங்களில் சமையல் குறிப்பு பார்க்கும் வழக்கம் குறைந்து விட்டது. சமையல் குறித்தும் சமைப்பது குறித்தும் யூ டியூப்களில் ஏராளமான வழிகாட்டும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
மொபைல் போனில் பார்த்துக் கொண்டே நாம் விரும்பும் சமையலைச் செய்து முடித்து விடலாம். இது மிகவும் பிரபலமாகி வருகிறது. Êசமைப்பதில் ஆர்வமிக்க சில பெண்கள், தாங்கள் சமைப்பதை படம் பிடித்து யூடியூப்பில் போட்டு விடுகிறார்கள்.
விஜய் டி.வியில் குக்வித் கோமாளி மிகவும் பிரபலம். அதைத் தொடர்ந்து சன் டிவியில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் செப் என்ற சமையல் போட்டி தொடர் வெளிவரத் தொடங்கியிருக்கிறது.
எங்கோ ஒரு கிராமத்தில் பாரம்பரிய அசைவ சமையல் செய்தவரின் சாப்பாட்டை தமிழகம் வந்த ராகுல் காந்தி கிராமத்தில் சாப்பிட்டார். அது யூடியூப்பிலும் வெளியாகி வைரலாகிவிட்டது.
தற்போது காலம் மாறிவிட்டது. புதிய வகை உணவுகள் வந்து விட்டன. ஹோட்டல்களில், காபி ஷாப்களிலும் தெருவோரக் கடைகளிலும் கூட்டம் இருக்கிறது. சாப்பிடுவதற்காகத்தானே உழைக்கிறோம். உழைப்பதற்காகச் சாப்பிடுகிறோம்.
தீபாவளி போன்ற பண்டிகைகள் என்றால் வீட்டிலும் உணவுக் கொண்டாட்டம்தான்; அவரவர் பொருளாதார வசதிப்படி.
Read in : English