Read in : English

Share the Article

மெட்ராஸ் என்று அறியப்பட்ட மாநகரத்திற்கு சென்னை என்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் முடிவடைகிறது. 2,000 ஆண்டுகளுக்கு மேல் இந்த பகுதியில் வாழ்ந்த, பழமையுள்ள தமிழர்களின் பண்பாட்டை மொழியை இலக்கியத்தை இசையை பாதுகாத்து வளர்த்த நகரத்திற்கு 1996 ம் ஆண்டு சென்னை என பெயர் சூட்டி இன்றைய தினத்தை வரலாற்று சிறப்பு மிக்க நாளாக முன்னாள் முதல்வர் மு கருணாநிதி மாற்றினார்.

செப்டம்பர் 30 — அன்றுதான் தமிழ அரசின்  அரசாணையின் மூலமாக சென்னை என்ற பெயர் மாற்றம்  செய்யப்பட்டது. இந்த மாற்றத்தை கொண்டுவந்தவர் அன்றைய முதல்வர் திரு மு கருணாநிதி.

பழைய சென்னையின் வரலாற்றை, கிட்டத்தட்ட 50 இடங்களின் வரலாற்றை பற்றியும், கல்வெட்டுகளை பற்றியும் , இலக்கியம்,  இசை வடிவங்களை பற்றியும், வாழ்க்கை முறையைப்பற்றியும் , அக்டோபர் மாதம் முழுவதும் தினமும் ஒரு செய்தி , ஒரு நிகழ்வை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை.  தினமும் ஒரு செய்தியை  நம் அறக்கட்டளை வழங்குகிறது. குறைந்த பட்சம் அதை பிரசுரம் செய்யலாம் , தொலைக்காட்சிகளில்  வெளியிடலாம்.  தமிழ் கலாச்சாரத்தைப் பற்றிய ,   புராதன சென்னை பெருநகரின் வரலாற்றுச் செய்திகளை வெளியிட ஊடகத்துறை தயாரா? அதை படிக்க மக்கள் தயாரா? ஒரு மாதத்திற்கு பிறகு நம் தீர்ப்பை வழங்குவோம்!!!    

நிகழ்வுகளை முகநூல் மூலமாகவும் யூடூபிலும், ஊடகத்துறை மூலமாகவும்,  காணலாம். வாருங்கள் அனைவரும் சென்னைக்கு நம் வாழ்த்துகளை தெரிவிக்கலாம் !!!

தொடர்புக்கு – சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை தலைவர், ஆர்.  ரங்கராஜ் rangaraaj2021@gmail.com 9841010821

 
 
 

Share the Article

Read in : English

Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles Green path to health: Have a different keerai every day