Read in : English
ஜனவரி 31ஆம்தேதி ஒவ்வொருவரும் திருவாரூர் இடைத்தேர்தல் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள்.ஆனால், பல்வேறு காரணங்களால் வெளிவரவுள்ள முடிவுகள் பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை பிரதிபலிப்பதாக இருக்காது. நீண்ட காலமாக இடைத்தேர்தல்கள் அரசு இயந்திரத்தின் அதிகார துஷ்பிரயோகத்தாலும் பகிரங்கமாக கொடுக்கப்படும் பணத்தாலும் நடத்தப்படும் சூழலில் இவற்றை அமைதியாக வேடிக்கை பார்ப்பதாக உள்ளது தேர்தல் கமிஷன். நடக்கும் அத்துமீறல்களில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில், ஆளும் அதிமுக 89 கோடி ரூபாய் பணம் விநியோகிக்கப்பட்டதற்கான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றதால் அங்கு இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் மாநில அரசை இதற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரியது. தலைமை தேர்தல் அதிகாரி, பணமதிப்பிழப்பு, தேர்தல் நேர கருப்பு பண ஒழிப்பில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என கூறினார்.
திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி தன் இறுதிகாலம் வரை தனது சொந்த ஊரான திருவாருரிலேயே போட்டியிட்டார். அவரது மறைவையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் சூழல் திமுக அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என நம்புகிறது.
ஆளும் அதிமுக அரசு திமுகவைத் தோற்கடித்து மாநிலத்தில் அதிமுக தான் ‘நம்பர் ஒன்’ கட்சி என்பதை நிரூபிக்க சபதம் எடுத்துள்ளது. அதன் காரணமாக அமைச்சர்கள் தங்கள் கட்சியின் பலத்தை நிரூபிக்க திருவாரூர் தொகுதியில் முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்ற்னர். அதேவேளையில் அமமுகவின் டிடிவி தினகரனும் ஆர்கே நகரில் வெற்றி பெற்றதையடுத்து தாங்களும் பெரிய கட்சிதான் என்பதை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கிறது. தினகரன் தஞ்சை டெல்டா பகுதி தன் வசம் உள்ளது என்பதை நிரூபிக்க விரும்பிகிறார். தகுதி நீக்க வழக்கில் கிடைத்த தீர்ப்பாலும் செந்தில் பாலாஜியின் கட்சித்தாவலாலும் சோர்ந்துபோயிருக்கும் கட்சிக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி ஊக்கமாக இருக்கும் என நம்புகிறார் தினகரன்.
ஏற்கனவே பல கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று முடிவெடுத்துவிட்டன. அக்கட்சிகள் சில ஆண்டுகளாக திமுகவுடன் சேர்ந்து பல போராட்டங்களையும் நடத்தி வருகிறது. மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விசிக ஆகிய கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளன. இந்த கூட்டணி ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் 2016 சட்டசபை தேர்தலிலிருந்து கூட்டணியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஆனால், பாஜக, தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. பெரிய கட்சிகள் பெறுகிற வெற்றி, அளவுக்குகதிகமான தொண்டர்களை தொகுதிக்குள் நுழைப்பதும் அதீத பண பலம் மற்றும் ஆட்பலத்தால் பெறுகிற வெற்றிற். ஆகையால் களத்தில் நடக்கும் உண்மையை வெளிக்காட்ட மாட்டார்கள். இம்மாதிரி சூழ்நிலையில் திமுகவுக்கு வெற்ரி கிடைத்தால் அது குறிப்பிடத்தக்க ஒன்றாக அமையும். காரணம், அவ்வெற்றி மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளுக்கு எதிரானதாக இருக்கும். இந்த ரீதியில், திமுக அவ்வெற்றியை துருப்புசீட்டாகப் பயன்படுத்து பாரளுமன்ற தேர்தலில் அதிமுகவைத் தோற்கடித்து பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற முயற்சிக்கும்.
இன்னொருபுறம், ஆளும் அதிமுக வெற்றி பெற்றால், அக்கட்சியினரை ஒற்றுமையுடன் வைத்திருக்க அவ்வெற்றி உதவலாம். மேலும், சில கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம். அதிமுகவை விட சிறப்பான வெற்றியை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் தினகரனுக்கு உள்ளது.
ஆளும் கட்சியாக எக்கட்சி உள்ளதோ, அக்கட்சிதான் இடைத்தேர்தல்களில் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ஆளும் கட்சியாக அதிமுக இருந்தாலும் திமுக இருந்தாலும் அதுதான் நடக்கும். ஆனால், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டு சுயேச்சை வேட்பாளரான தினகரன் வெற்றி பெற்றார். திருவாரூர் தொகுதியிலும் நிறைய கதைகள் காத்திருக்கின்றன.
Read in : English