Read in : English

புயல்  சூறைக்காற்று  கடல்  அலை  மற்றும்  மனிதர்களால்  ஏற்படுத்தப்படும்  கட்டுமான  பணிகள்  காரணமாக  கடந்த  26  ஆண்டுகளில்  இந்தியாவின்  கிழக்கு மற்றும் மேற்கு  கடலோரங்களில்  உள்ள  7517 கிலோ  மீட்டர்  கடற்கறையில்  6031 கிலோ  மீட்டர்  தூர  கடற்  பகுதி ஆய்வுக்கு  உட்படுத்திய  போது  அதில் 33 சதவீத  கடலோரம்  கடல் அரிப்புக்கு உள்ளாகியது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பெரும் பகுதி   கடலரிப்பு  கிழக்கு  கடற்கரையில்  நிகழ்ந்துள்ளது  33%  கடலரிப்புக்கு  பதிலாக  29% கடலோர பகுதிகளில்  புதியதாக மணல்  குவிக்கப்பட்டிருப்பதும்  இந்த ஆய்வின்  போது  தெரியவந்துள்ளது.

கடந்த  1990ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரையிலான  26 ஆண்டுகளில்  நிகழ்ந்த  மணல் இடமாற்றங்கள்  புதிய மணல் படிவங்கள்  ஏற்பட்டுள்ளது  மற்றும் கடற்கரை  மணல் அரிப்பு  குறித்து  நடத்தப்பட்ட  ஆய்வு  குறித்து  இந்திய புவி அறிவியல் அமைச்சக  செயலாளர்  டாக்டர்  M. ராஜீவன்  தேசிய  கடல்  அறிவியல் ஆய்வு  நிறுவன  இயக்குனர்  டாக்டர்  எம்.வி  ரமணமூர்த்தி  ஆகியோர்  ஆய்வு அறிக்கை  ஒன்றை  தயாரித்துள்ளனர்.

இயற்கையாகவும், இயற்கை  சீற்றங்களாலும்   இயற்கை  பேரிடர்களாலும்  கடற்கரைகளில் நிகழும் அலைகளின்  தாக்கங்களினாலும்,  மனிதர்களால் ஏற்படும்  கட்டுமான  தாக்கங்களினாலும்,  ஒரு பகுதியில்  உள்ள மணல்  இன்னொரு  பகுதிக்கு இடம்  மாறுவதும்,  மற்றொரு  பகுதி  மணல்  எதிர் திசைக்கு  இடம் மாறுவதும்  நிகழ்கிறது.

மணல் அரிப்பு  ஒரு  புறமும்,   மணல்  படிமம்  மற்றொரு  புறமும்  நிகழும்  இச்செயல்  இயற்கையின் ஒரு விதமான பாராட்டுக்குரிய  செயல்பாடாகவே  கருத  வேண்டியுள்ளது  என்று கடலியல் அறிஞர்கள்  கருத்து  தெரிவிக்கின்றனர்.

கடந்த  26 ஆண்டு  கால  ஆய்வின்  போது  2156.43 கிலோமீட்டர்  கடற்கரை மணல் பகுதி  கடல் அரிப்பை சந்தித்து  இருப்பதும்  1941.24 கிலோமீட்டர்  கடல் மணல் பரப்பு  புதியதாக உருவாகியிருப்பதும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  அந்த அறிக்கையில்  தெரிவித்து உள்ளனர்.

இந்த  கடல்  அரிப்பு  மற்றும் புதிய  மணல் படிமம்  குறித்து  நீண்ட  காலமாக  அறிந்து இருந்தாலும்  அதைக்குறித்து  வரைபடம் தயாரித்து  ஆவணப்படுத்த  வேண்டியுள்ளது  என்றும் அப்பொழுது தான் அரசின் பல்வேறு துறைகள், நிறுவனங்கள்  மற்றும்  அமைப்புகள்  மூலம் சீர் செய்யும் நடவடிக்கைகளில்  ஈடுபட ஏதுவாக இருக்கும்  என்று புவி அறிவியல் அமைச்சக  செயலாளர்  எம். ராஜீவன்  கருத்து தெரிவித்துள்ளார் .

இத்தகைய  கடல் அரிப்புகளால்  கடற்கரையை     ஒட்டி வாழும் மீனவர்கள் மற்றும்  கடலோரம்  வாழும்  மக்களின் குடியிருப்புகளில்  கடல் நீர் புகுந்து அவர்கள் வீடுகளை  இழக்க வேண்டியுள்ளது.

கடந்த  26 ஆண்டு  கால  ஆய்வின்  போது  2156.43 கிலோமீட்டர்  கடற்கரை மணல் பகுதி  கடல் அரிப்பை சந்தித்து  இருப்பதும்  1941.24 கிலோமீட்டர்  கடல் மணல் பரப்பு  புதியதாக உருவாகியிருப்பதும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  அந்த அறிக்கையில்  தெரிவித்து உள்ளனர்.

கடற்கரை  மணல்  பரப்பில்  தங்கள்  மீன்பிடி  கட்டுமரங்கள், சிறு  படகுகள்  ஆகியவற்றை நிறுத்தி வைத்து  கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்  பாரம்பரிய ஏழை எளிய  மீனவர்களின்  சிறு மீன்பிடி  கலங்களை   நிறுத்தமுடியாமல்  பாதிக்கப்படுகிறார்கள் . கடற்கரையை  ஒட்டி  விவசாயம் செய்யும்  விளை  நிலங்கள் பாழாகி  விடுகின்றன.

புதியதாக மணல் பரப்பு  உருவானால்  அந்த பகுதி  பயனுள்ளது  என்றாலும்  ஆற்று  முகத்துவாரங்கள்  மற்றும் வளைகுடா பகுதி  சிற்றோடைகளில்  மணல் படிமங்கள்  ஏற்படுவதால்  இயற்கையான சுற்றுசூழல்  பெருமளவில்  பாதிக்கப்படுகிறது.

ஆற்று  முகத்துவாரங்கள் , கழிமுக பகுதிகள், சிற்றோடைகள்  கடற்கரை  முகப்பு  நீர் தேக்கங்கள்தான்   கடலில் இருந்து  அப்பகுதிக்குள்   வருகை தரும்  கடல்  வாழ்   உயிரினங்களின்  இனவிருத்தி தளங்களாகவும், குஞ்சு பொறிப்பகங்களாகவும்  உள்ள  பல்லுயிர்  பேணும்  சூழலியல்  பெரும் பாதிப்புள்ளாகியுள்ளது  என்று  புவி அறிவியல்  அமைச்சகத்தின்  தேசிய  கடலியல்  நிறுவனத்தின் (NIOT) இயக்குனரும்  விஞ்ஞானியுமான  எம். வி. ரமணமூர்த்தி  கருத்து  தெரிவித்துள்ளார்.

வங்காள  விரிகுடா  கடல் பகுதிகளான  கிழக்கு  கடற்கரை  மாநிலங்களில்  மிக அதிகமான  கடற்கரை  அரிப்புக்கு  உள்ளதாவது  மேற்கு  வங்காள  மாநிலம்  தான் . கடந்த  26 ஆண்டுகளில்  99  சதுர  கிலோ மீட்டர்  கடற்கரை  அதாவது மேற்கு  வங்க  மாநிலத்தின் 63% கடற்கரை  கடல்  அரிப்புக்குள்ளாகியுள்ளது.

கடல் அரிப்புக்குள்ளாகியுள்ளதில்  இரண்டாவது இடத்தில் இருப்பது   புதுச்சேரி மாநிலம்.   57% கடற்கரை  கடல் அரிப்பு க்குள்ளாகியுள்ளது.

புதிய  மணல் படிவம்  ஒடிசா  (51%) ஆந்திரா  (42%) என்ற  அளவில்  அதிக  மணல்  குவிந்துள்ள  மாநிலங்களாகும் என்பது தான்  அவர்களுடைய  அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ள  அம்சமாகும்.

மேற்கு  வங்கம்  (24%) குஜராத்  டையூ, டாமன்    (31%) மகாராஷ்ட்ரா (12%)  கோவா  (20%)  கர்நாடக  (30%)  கேரளா  (21%)  தமிழ்நாடு (23%) என்ற  அளவில்  மணல் படிவம் புதியதாக  ஏற்பட்டுள்ளதாக  கணக்கிடப்பட்டுள்ளது.

நாசா  விண்வெளி ஆய்வு  நிலையம்,   இந்திய விண்வெளி  ஆய்வு நிலையம்  (ISRO)  ஆகியவைகள்  மூலம் திரட்டப்பட்ட  தகவல்கள்  அடிப்படையில்  10 மாநிலங்கள்,   யூனியன்  பிரதேசங்களில்  66 மாவட்டங்களில்  6031 கிலோமீட்டர்  கடற்கரைகளைப்  பற்றிய  526  வரைபடங்களை  ஆய்வு செய்து கடல் அரிப்பு மற்றும் கடற்கரை மணல் படிமம் பற்றிய  தகவல்களை திரட்டியதாக  தெரிவித்துள்ளனர்.

கடல்  அரிப்புக்கான  காரணங்கள்  மாநிலத்திற்கு மாநிலம்  வேறுபடுவதாகவும்,  தற்போது இரண்டாம் கட்ட ஆய்வு  அறிக்கைக்கான  பணிகளை தொடங்கி  இருப்பதாகவும் அதில்  மாநிலம்   வாரியாக  கடல் அரிப்புக்கு  உரிய  காரணிகளை  பகுப்பாய்வு  செய்ய  இருப்பதாகவும்  டாக்டர்  எம்.வி. ரமணமூர்த்தி   கூறியுள்ளார்.

கடல் அலைகளின்  தன்மையில்  ஏற்படும் மாற்றங்கள்,  கடல்  அலைகளின்  தீவிரம்,  புயல்,   காற்றழுத்த  தாழ்வு மண்டலம்  ஆகியவற்றால்   ஏற்படும் பலத்த மழை ,  மழையோடு  இணைந்த  கடல்  நீரோட்டம் ,  நீரோட்டத்தோடு இணைந்த  மணல் நகர்வு,   ஆறுகள்  மூலம்  கடலில்  கொண்டுவந்து  சேர்க்கப்படும்  மணல்,  கடல் நீர்மட்டம் உயர்வு ,  துறைமுகங்களை ஆழப்படுத்தும் பணி,  துறைமுக  முகத்துவாரங்களில்  தூர்வாரும்  பணி,  மனிதர்களால்  ஏற்படுத்தப்படும்  கட்டுமான  பணிகள்  ஆகியவற்றின்  தன்மைக்கேற்ப  மணல் பரிமாற்றங்கள்  நிகழ்வது குறித்தும்  தீவிரமாக  ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் விஞ்ஞானிகள்  தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில்  மேற்கு  கடற்கரையை  ஒட்டிய  அரேபியன்  கடல் பகுதிகளை  விட  வங்காள   விரிகுடா கடல் பகுதியில்  கடல்  அதிகம் சீற்றம்  கொண்டதாக  உள்ளதால்  கிழக்கு  கடற்கரையில்  அதிக அளவில்  கடல்  அரிப்பு  ஏற்படுகிறது  என்றும்  அவர்கள்  தெரிவிக்கின்றனர்.

மேற்கு  கடற்கரை  பகுதியில்  கேரளா  கடற்கரை  பகுதியில்  மட்டும்  அதிக அளவிலான  கடல் அரிப்பு  ஏற்படுவது பற்றி  கருத்து  தெரிவித்த  திரு . ராஜீவன்,  அரேபிய  கடலில்  தெற்கு பகுதி  கடல் அலைகள்  ஆக்ரோஷமானதாகவும்    அதிதீவிரமானதாகவும் உள்ளதாக  அறியப்பட்டுள்ளது என்றார்

ஜூன்  முதல்  செப்டம்பர்  மாதம் வரையிலான  தென் மேற்கு  பருவக்காற்று  காலத்திலும், அக்டோபர் முதல்  டிசம்பர் வரையிலான  வடகிழக்கு  பருவக்காற்று  காலத்திலும்  மழை  காரணமாக  தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம்  ஆகிய  கிழக்கு கடற்கரை மாநிலங்களில்  ஆண்டின் பெரும் பகுதி   மாதங்களில்  கடல் சீற்றம் கொண்டதாகவே உள்ளது.    கிழக்கு கடற்கரை பகுதிகள் அதிக அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் தாக்குதலுக்கு  உள்ளாகிறது.

கடல்  சீற்றம்  ஆண்டுக்கு ஆண்டு  கிழக்கு கடல் பகுதிகளில் கூடுதல் ஆகி வருவதாக  கணக்கிடப்பட்டுள்ளது.   இவைகள்  தான்  கிழக்கு  கடற்கரை பகுதியில்  அதிக அளவிலான  கடல்  அரிப்புக்கு  காரணமாக  அமைவதாக  டாக்டர்  எம்.வி. ரமணமூர்த்தி  தெரிவித்தார்.

நாட்டின்  பல  பகுதிகளில்  மனிதர்களால்  ஏற்படுத்தப்படும்  கட்டுமான  பணிகள் தான்  கடல்  அரிப்புக்கு ஒரு  காரணமாக  அமைகிறது.  அதிலும்  துறைமுகங்களை  தூர்  வாரி  அங்கிருந்து அகற்றப்படும்   படிமங்கள்  பெரும்பாலும்  கடலில்  கொட்டப்படுகிறது .   இவ்வாறு  கொட்டப்படுவது  தவிர்க்கப்படவேண்டும்   என்றும் அந்த படிமங்கள்  அருகாமையில்  கடற்கரை  பகுதிகளிலேயே   கொட்டப்பட வேண்டும்  என்று  வல்லுனர்கள்  அறிவுறுத்தினாலும்  பெரும்பாலானோர்  அதை  நடைமுறைப்படுத்துவதில்லை.

துறைமுகங்களுக்கு  அனுமதி  வழங்கப்படுவதற்கான  சுற்றுசூழல்  தாக்க  மதிப்பீட்டு  அறிக்கையில்  தூர்வாரும்  மண்படிமங்களை  எங்கு  எவ்வாறு  கொட்டவேண்டும் என்று  குறிப்பிடப்பட்டிருந்தாலும்  அவைகளை  யாரும்  பொருட்படுத்துவதில்லை  என்பதும்  நாடு  முழுவதும்  புதிய  துறைமுகங்கள்,  சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும்  தொழிற்சாலைகளுக்கு  அனுமதி  போன்ற  வற்றால்  தான்  இத்தகைய  கடல்  அரிப்புகள்  ஏற்பட்டு   அதனால்  ஆயிரக்கணக்கான  மீனவ  கிராமங்களில்  மீனவர்களின்  வீடுகள், கட்டுமரங்கள் ,  படகுகள்,  விளைநிலங்கள்  கடல் அரிப்பால்  அழிக்கப்படுவதாக  மீனவர்  சமுதாய  தலைவர்  ஒருவர்  தெரிவித்தார்.

இதனால்  லட்சக்கணக்கான  பாரம்பரிய  மீனவர்கள்  வாழ்விடம், வாழ்வாதாரம்  பாதிக்கப்படுவதாகவும்  பல  நேரங்களில்  அவர்கள்  வீடற்றவர்களாக, தொழிலற்றவர்களாக  சொந்த  கிராமத்திலேயே  அகதிகளாக  வேண்டிய  அவல நிலை ஏற்படுவதாகவும்  அந்த மீனவ சமுதாய  முன்னணித் தலைவர்  தெரிவித்தார்.

மா.இளங்கோ

(கட்டுரையாளர் தேசிய மீனவர் பேரவை தலைவர் மற்றும் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival