Read in : English
லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றின் அறையை அதிகாரிகள் உடைத்து திறந்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சோபா ஒன்றின் மீது, எலும்புக்கூடாக 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பிணமாகக் கிடந்தார். இது நடந்தது 2006ஆம் ஆண்டில். அவர் இறந்த போது அவருக்கு வயது 38. மூன்று ஆண்டுகளாக அண்டை வீட்டார், அவரின் குடும்பத்தினர் (4 சகோதரிகள்), முன்னாள் சக பணியாளர்கள் ஆகியோருக்குக்கூட அவர் என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்தனர்.

ஜாய்ஸ் கரோல்
விடுமுறை நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் அவரின் பற்களைச் சரிபார்த்த பிறகுதான், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனது ஜாய்ஸ் கரோல் வின்சென்ட் என்பது தெரிய வந்தது. 2003ஆம் ஆண்டு டிசம்பரில் இறந்து இருக்கலாம் என்றும் எதனால் இறந்து போனார் என்பது குறித்து உறுதியாகத் தெரியாத நிலையில், நுரையீரல் தொற்று , தூக்கமின்மை அல்லது கடுமையான ஆஸ்துமா பாதிப்பு போன்றவற்றால் அவர் இறந்து இருக்கலாம். அதுபற்றி யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இளமைக் காலத்தில் அவர் கலகலப்பானவர். புகை பிடிக்கும் பழக்கம் இல்லை. மதுப் பழக்கத்துக்கோ அல்லது போதைப் பழக்கத்துக்கோ அடிமையானவரும் இல்லை. ஆனால், நெல்சன் மண்டேலாவுடன் கைக் குலுக்கிய ஒருவர் (1990இல் சுதந்திர தென் ஆப்ரிக்காவுக்காக லண்டனில் நடைபெற்ற சர்வதேச நிகழ்ச்சியில் மண்டலேவுடன் அவர் கை குலுக்கிய போது வயது 26) அந்த 3 ஆண்டுகள் எங்கிருந்தார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது.
பேஸ் புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் இல்லாத காலம் அது. இருப்பினும், லண்டன் போன்ற பெருநகரத்தில் இது எப்படி மறக்கப்பட்டு விட்டது என்ற முக்கியக் கேள்வியை எழுப்புகிறது. சில நேரங்களில் நமக்கு உண்மையான நண்பர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது.
நமது நாட்டிலும் இதேபோல. 2017இல் மும்பையில் இறந்து போன வயதான பெண் ஒருவர், ஓராண்டுக்குப் பிறகு எலும்புக்கூடாக இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், முதுமையில் இறந்து போனவர் என்ற அடிப்படையில் சாவு எப்படி என்ற விடை தெரியாமலேயே அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தோ கரீபியன் வம்சாவளியை சேர்ந்த ஜாய்ஸ் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், (அவர் இறப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் நல்ல வருமானத்தை தந்து கொண்டிருந்த எர்னஸ் அண்ட் யங் நிறுவன வேலையை விட்டுவிட்டார்) ஏன் வேலைக்கு வரவில்லை என்று யாராவது கேட்டால் யாரும் ஆச்சரியப்படுவார்கள். வாழ்க்கையில் ஸ்திரமாக இல்லாத நிலையில் அவரை குறை கூறி, அந்த நாய் பரிதாபமாகச் செத்து விட்டது என்று திட்டி வலைதளங்களில் பதிந்து அரட்டை அடித்துவிட்டு அதை மறந்தும் விடுவார்கள். .
பெங்களுரை சேர்ந்த பத்திரிக்கையாளரும் ஒரு குழந்தையின் தாயாகத் தனித்து இருப்பவருமான ஆர். சித்ரா, “நான் குழந்தையுடன் இருந்தேன். சில நேரங்களில் குழந்தை இருந்தும் தனிமையை உணர்ந்ததோடு சூழ்நிலையால் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டியதாக இருந்தது. இந்த பத்திரிக்கையாளர் பணி எப்போதும் உற்சாகம் ஏற்படுத்துவதாகவும், சுவாரசியமானதாகவும் இருக்கிறது. பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மனிதர்களை சந்திப்பது, புதிய வாழ்க்கைக்கு ஆதரவாக இருக்கிறது. மேலும், பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு அதில் வெற்றி கண்ட சாதனையாளர்களையும் சந்திக்க முடியும்” என்கிறார்.
“நவீன தனிமையைப் போக்குவதற்கு வேலை உதவியாக இருக்கிறது “- ஆர்பிதா சமால்
ஒரு பெண், அதுவும் 30 வயதுடைய பெண், விவாகரத்து ஆன பிறகு திருமணம் செய்து கொள்ளாத ஒரு பெண் இந்த சமூகத்தின் பார்வைக்கு ஆளாக வேண்டியுள்ளது. “நான் தனித்த பெண்ணாக இருப்பதால் எந்தவித களங்கத்தையும் பாரபட்சத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கவில்லை. ஆனால், நான் 20 வயதில் உள்ளவர்களோடு அவ்வளவாகப் பழக முடிவதில்லை. அதேசமயம் நாற்பது, ஐம்பது வயதில் உள்ளவர்களோடு இணைந்து செயல்பட முடிகிறது” என்கிறார் அவர்.
மத்தியப்பிரதேசத்தில் இந்தூரில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்பு பிரிவில் பணிபுரியும் ஆர்பிதா சமால் 30 வயதானவர். விவாகரத்து செய்தவர். ‘‘30 வயது என்பது மிகவும் சவாலான வயது. நீங்கள் 20 வயதே நிரம்பிய கல்லூரியில் படித்து வெளியே வரும் தோழிகளுடன் சஜகமான பழக முடியாது. 30 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்களுக்கு பதின்பருவ வயதுக் குழந்தைகள் இருப்பார்கள். எனவே யாருடனும் ஒட்ட முடியாமல் போகிறது” என்கிறார் அவர்.
நவீன தனிமையைப் போக்குவதற்கு வேலை உதவியாக இருக்கிறது என்று கூறும் அவர், ‘வருவாய் ஈட்டுவது சுதந்திரமாக இருக்க பெரிதும் உதவுகிறது. மேலும் புதியவர்களை புதிய நண்பர்களை நீங்கள் சந்திக்க வேலை வழி அமைத்துத் தருகிறது’’ என்கிறார்.
ஜாய்ஸுக்கு ஒரு குழந்தை இருந்திருந்தால், அவரது சாவு மேலும் கவனிக்கப்பட்டிருக்கும். அந்தத் தாயில்லாத குழந்தையின் அழுகுரல், எங்கே அந்த இளம் பெண் என்ற கேள்வியை எழுப்பி மக்களின் மனசாட்சியை உலுக்கியிருக்கும். ஓர் இளம் பெண், இறந்து பல ஆண்டுகளாகியும் அவர் என்ன ஆனார் என்று கவலைப்படாமல் எப்படி இருந்திருக்க முடியும் என்ற கரிசனத்தில், இளம் திரைப்பட இயக்குநர் கரோல் மார்லே 2011இல் `டீரீம்ஸ் ஆப் ஏ லைப்’ என்ற ஆவணப் படத்தைத் தயாரிக்க ஜாய்ஸ் கதை ஊக்கமாக இருந்தது.
‘‘என்னை எடுத்துக் கொண்டால், குடும்பத்தில் ஒரு குழந்தை இருப்பது உதவிகரமானது.” என்பதை இந்திராவின் தாய் சித்ரா இதை ஒப்புக் கொள்கிறார். “எனக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு எனது சமூக வட்டத்தை எனது மகள் இந்திரா உருவாக்கிக் கொடுத்துள்ளாள். அனைவரையும் கவரும் தன்மையும் ஆளுமையும் அவளுக்கு எளிதாக நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்தித் தந்தது. இந்திராவுக்காக சிலரைச் சந்தித்திருப்பேன். அவளைக் கருத்தில் கொண்டு, அடிக்கடி வெளியே செல்வதில்லை” என்கிறார் அவர்.
திருமணம் அல்லது தோழமை உறவு என்று பாரம்பரியம் குறித்து ஒருவர் பேசாமல் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு சிலர் தேவை என்பதை ஜாய்ஸுன் கதை அல்லது இங்குள்ள பெண்களின் கதைகள் உறுதிப் படுத்துகின்றன. நீண்ட நண்பர்கள் பட்டியல் அல்லது மறந்து போன உறவினர்களுக்குத் தொலைபேசியில் பேச வேண்டியிருந்தால், அவ்வாறு செய்வதற்கு இதுதான் சரியான நேரம்.
Read in : English