Read in : English
கன்னியாகுமரி வரலாற்றில் ஒக்கிபுயல் எப்போதும் அச்சுறுத்தலை உண்டாக்கக்கூடியதுதான். தமிழக மீனவர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒருபங்கினர் கன்னியாகுமரியில் வாழ்கின்றனர். இவர்கள் இயற்கையின் கருணையால் தான் தங்கள் அன்றாடத்தை கழிக்கின்றனர்.
ஒக்கிபுயலின் போது கடலுக்கு சென்று இன்றுவரை திரும்பி வராத நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்கள் இறந்திருக்கக்கூடும் என்றே அவர்களின் உறவுகள் எண்ணுகின்றனர். மேலும் அதிகாரிகள் அவர்களை மீட்டெட்டுக்கும் எந்த சாத்தியங்களும் இதுவரை நிகழவில்லை. குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவ சமூக ஆர்வலர் ஆன்டோ லெனின் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தரக் கோரி கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஓகி புயல் கோரதாண்டவமாடி 9 மாதங்களுக்கு பிறகு ஆண்டோ லெனின் சார்ந்த ‘மீனவர் ஒருங்கிணைப்பு சங்கம்’ கடல் ஆம்புலன்ஸ் சேவையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆபத்து காலத்தில் இந்த சேவை மீனவர்களுக்கு உதவியாக இருக்கும்.
கன்னியாகுமரி மீனவர்களுக்கு போதிய தொழில்முறை நிபுணத்துவம் இல்லை. மீனவச் சமூகம் வியாபாரத்துக்காக இயங்கும் கடலோடிகளுக்கெனத் தனிச்சிறப்பான அறிவைக் கொடுத்துள்ளது. அதனை அதிகப்படுத்தும் விதத்தில் இந்த கடல் ஆம்புலன்ஸ் திட்டம் இருக்கும். ‘’எங்களுடைய உடனடி நோக்கம் கடலுக்கு மீன்பிடிக்க சிறு படகுகளிலும் ஃபைபர் படகுகளிலும் செல்லும் மீனவர்களை ஆபத்து காலத்தில் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்’’என்கிறார் கேப்டன் சார்லஸ் ஜான்சன் என்கிற கடலோடி.
முன்பு கட்டுமரங்களில் சென்ற மீனவர்கள் புயலில் சிக்கிக்கொண்டால், அதிலிருந்து மீண்டு திரும்புவது எளிதாக இருந்தது. கட்டுமரங்கள் கவிழ நேர்ந்தால் சரி செய்ய வாய்ப்பு இருக்கிரது. ஆனால் இப்போது ஃபைபர்படகுகளில் செல்லும் மீனவர்களால் புயலில் மாட்டிக்கொண்டால் உடனே மீண்டுவர இயலவில்லை. அதனால் பலர் உயிரிழக்கின்றனர் என்கிறார் ஜான்சன். “அவர்களின் இறப்பு அடிக்கடி நிகழ்ந்து கொண்டும் உள்ளது’’ என்கிறார்.
கடல் ஆம்புலன்ஸ் மூலம் மீனவர்களைக் காப்பாற்றுவது ஒன்றும் புதிதல்ல. இந்தியாவில் இல்லாவிட்டாலும், அது இன்றும் பல நாடுகளில் நடைமுறையிலுள்ளது. ஒரு கடல் ஆம்புலன்ஸில் மொத்தம் 10 நபர்கள் இருப்பார்கள். அவர்களில் இருவர் ஆண் நர்ஸ்;அவர்களோடு முதலுதவி உபகரணங்களும் வசதிகளும் இருக்கும். இது ஆபத்து நிலையில் இருக்கும் 15 மீனவர்களை ஏற்றும் வசதிகொண்டது. இதுகுறித்து மகிழ்ச்சிகொண்டாலும் இதன் விலைதான் மீனவர்கள் மத்தியில் கவலைகொள்ள வைக்கிறது. இதுகுறித்து விளக்கிய ஜான்சன், முரையே அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும் பெற்ற ஸீ ஆம்புலன்ஸ் படகு வாங்க 15 கோடி தேவைப்படும். அதற்கு மேற்கொண்டு ஆகும் செலவுகள் தனி.
’’இதை வாங்குவதற்காக பல்வேறு யோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். பயன்படுத்தப்பட்ட கடல் ஆம்புலன்ஸை வாங்கமுயற்சிக்கிறோம். கொச்சினில் உள்ள ‘நேவி பேட்ரல் கிராப்ட்’ பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள ஒன்றை வாங்குவதற்கு யோசித்து வருகிறோம். அதில் புதிய என்ஜின்களை பொருத்தி சீரமைத்து பயன்படுத்தலாம். அது செலவைக் குறைக்கும் என்கிறார் ஜான்சன். கடல் ஆம்புலன்ஸ் என்பது மீனவர்களுக்காக எப்போதும் தயார் நிலையில் இருக்கும் சேவை. தமிழக மீனவர்கள் உள்ளரசியல் காரணமாக பிளவுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றிணைந்து கடல் ஆம்புலன்ஸ் சேவை குறித்து யோசிக்க வேண்டும் என்கிறார் ஆண்டோ லெனின்.
Read in : English