Read in : English
தமிழ் நாட்டில் கடந்த ஆண்டில் மொத்தம் 587 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. அது இந்த ஆண்டு 567 பொறியியல் கல்லூரிகளாக குறைந்துள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்வி நிறுவனங்களின் தரக் கட்டமைப்பு இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை தரப்படுத்தி வருகிறது. இந்த தர வரிசைப்பட்டியலானது மாணவர்களுக்கு கல்லூரிகள் மற்றும் பொறியியல் படிப்பினை தேர்வு செய்ய எளிதாக அமைந்துள்ளது.
ஒரு கல்வி நிறுவனமானது பின்வரும் செயல்பாடுகளின் அடிப்படையில் தரப்படுத்தப்படுகிறது : கற்பித்தல், கற்றல் மற்றும் அதற்கான வளங்கள், ஆய்வு மற்றும் தொழில்முறை பயிற்சிகள், முடித்து வெளிவரும் பட்டதாரிகள், வெளித்தொடர்பு மற்றும் உள்ளடக்கம், கண்ணோட்டம்
முதல் 100 இடங்களுக்குள் வரும் பொறியியல் கல்லூரிகள்/ நிகர்நிலை பல்கலைகழகங்கள் இங்கே காணலாம்.
ஒவ்வொரு கல்லூரிகளிலும் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தையும் , மாணவர்கள் வேலை கிடைத்த பின் பெறும் சம்பளத்தையும் ஆய்வு செய்யும் போது,கல்லூரிக்கு செலுத்திய கல்வி கட்டணத்தை எத்தனை மாதங்களில் திரும்பப் பெற முடியும் என்ற விபரங்களை இங்கே காணலாம்.
மாணவிகளும், பேராசிரியைகளும் எந்த கல்லூரிகளில் அதிகம் பேர் உள்ளனர் என்பதை கீழே உள்ள விபரங்கள் மூலம் புதிதாக சேர விரும்பும் மாணவிகள்அறிந்து கொள்ளலாம்.
பொருத்தமான படிப்பினை தேர்வு செய்வது குறித்து கடந்த ஆண்டு முதலிடத்தில் வந்த மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?
சாய்ராம்
கடந்த ஆண்டு நான் கம்பியூட்டர் சயின்ஸை தேர்வு செய்தேன். தற்போது, பொறியியலில் எல்லா பாடப் பிரிவுகளிலும் வேலைவாய்ப்புகள் இருக்கிறது.கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம், மெக்கானிக்கல், மரைன் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அதிக அளவில்வேலைவாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறு.
பொறியியல் படிக்கும் மாணவர்கள் பாடப்பிரிவை மட்டும் படித்தால் போதாது, படிக்கும் பாடப்பிரிவுக்கு ஏற்றவாறு அது தொடர்பான புது, புது தகவல்களை இணையதளங்கள் வாயிலாக அவ்வபோது கற்றுக்கொள்ள வேண்டும் அப்போதுதான் உலக அளவிலான போட்டியை எதிர்கொள்ள முடியும். புதிய மாணவர்கள் இதனை செய்வார்களாயின் அவர்களால் எந்தவித பாடப்பிரிவையும் தேர்வு செய்து படித்து, நல்ல வேலையும் பெற முடியும்.
கீர்த்தனா
பொறியியல் படிப்பில் சில பாடப்பிரிவுகளை மட்டுமே அதிகமான மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பது உண்மைதான். அதேநேரத்தில் மற்ற பாடப்பிரிவுகளுக்கும் வெளிநாடுகளில் நல்ல வேலைவாய்ப்பு இருக்குகிறது. மாணவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த பாடப்பிரிவில் நாளுக்கு நாள் ஏற்படும்புதிய மாற்றங்கள் குறித்த அறிவோடு இருக்க வேண்டும்.
கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
ரெயிமண்ட் உதயராஜ் , செயலாளர், மாணவர் சேர்க்கை -2018 , அண்ணா பல்கலைகழகம்.
ஆண்டுதோறும் சில பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. உதாரணத்துக்கு மெக்கானிக்கல், கம்பியூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரானிக் போன்ற பாட பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதே நிலைதான் இந்தாண்டும் இருக்கும் என்று கருதுகிறோம்.
முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள், எட்டாவது செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்லூரிகளை நாங்கள் தர வரிசைப்படுத்துவதுவழக்கம். ஆனால், அதனைக் கொண்டு முதல் 10 கல்லூரிகள் என எவற்றையும் நாங்கள் அறிவிப்பது கிடையாது.
ஜெயப்பிரகாஷ் காந்தி , கல்வி ஆலோசகர்.
பொறியில் படிப்பிற்கு இப்போதும் மதிப்பு இருந்து வருகிறது. பொறியல் படிப்பை பொறுத்தவரை எல்லா பாடப் பிரிவுக்கும் வேலை வாய்ப்பு என்பது இருக்கிறது. ஆனால், மாணவர்கள் இந்த வேலைவாய்ப்புகளை பெற பாடத்தை மட்டும் படித்து அதிக மதிப்பெண் பெற்றால் மட்டும் போதாது, அதற்கு அப்பாற்பட்டும் படிக்கும் பாடப்பிரிவுக்கு தொடர்புடைய புதிய புதிய தகவல்களை கற்க வேண்டும். மாணவர்களுக்கு தகுதி இல்லாமல் போவதற்கு அவர்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. கல்வி முறை, அரசாங்கம், சம்மந்தப்பட்ட கல்லூரி, பேராசிரியர்கள் என இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். சில தனியார் கல்லூரிகள் பாடத்திட்டத்தோடு நிற்காமல், அந்த துறை சார்பில் புதிதாக என்ன சொல்லித் தரமுடியுமோ அதையும் சொல்லி தருகிறார்கள். வேலை வாய்ப்பு வழங்க கூடிய நிறுவனங்கள் என்ன எதிர்பார்கிறது என்பதை புரிந்துக்கொண்டு அதனையும் கற்றுத்தருகிறது அந்த தனியார் கல்லூரிகள். அதனால் அந்த மாணவனுக்கு வேலை என்பது எளிமையாக கிடைக்கிறது.
Read in : English