Read in : English
மதி மீம்ஸ் : டோலோ- கொரோனா தொற்று காலத்தில் பிரபலமாகும் மாத்திரை
பொதுவாக காய்ச்சல், உடல்வலி ஏற்படும்போது மருத்துவர்களால் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் வலி நிவாரணி டோலோ 650. கொரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து இதன் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.
நியாயவிலைக் கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை விவசாயிகளுக்கு எந்த அளவுக்குப் பயன் கிடைக்கும்?
சிறுதானியங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து, சென்னை, கோவை போன்ற நகரங்களில் ரேஷன் கடை மூலம் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு வேளாண்மைத் துறை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்கள் கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேன் இனிமை தெரியும், நச்சுத்தன்மையுடைய தேனும் இருக்கிறது தெரியுமா?
நம்மில் பெரும்பாலானோர் வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை சாறு, பச்சைத் தேநீர், எலுமிச்சை கலந்த தேநீர் அல்லது இலவங்கப்பட்டை தேநீர் ஆகியவற்றில் தேன் கலந்து குடித்து நாளைத் தொடங்குகிறோம். தேன்கூட்டிலிருந்து பிரிக்கப்படும் தேன் நமது மனித வாழ்வில் பிரிக்க முடியாத பங்கு வகிக்கிறது.
அறிவு நேர்மை குறைந்தால் முதுகெலும்புடன் நிற்க முடியாது: கலை விமர்சகர் இந்திரன் நேர்காணல்
கவிஞர் இந்திரன், தமிழகத்தில் வசிக்கும் மிக முக்கிய கலை விமர்சகர்; மொழிபெயர்ப்பாளர், ஓவியர், ஆவணப்பட இயக்குநர் என பன்முகங்கள் கொண்டவர். தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதிவருகிறார். புதுச்சேரியைச் சேர்ந்தவர். சென்னையில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் துவங்கினால் விரிவாக்கத்துக்கு இடமிருக்குமா?
ஸ்டெர்லைட் ஆலை திரும்ப துவங்கிவிடுமோ என்ற பேச்சும் அதை குறித்த அச்சமும் திரும்ப தூத்துக்குடியில் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. தாமிர உருக்காலை இரண்டாம் கட்ட விரிவாக்கம் என்ற தகவல் பரவிய பின்பு வேதாந்தா குழுமத்தால் நடத்தப்படும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்து போனார்கள். அதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
அன்று கட்டட வேலை செய்த குழந்தைத் தொழிலாளி, இன்று கட்டுமான நிறுவன எம்.டி.!
பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டுவிட்டு கட்டடம் கட்டும் பணிகளில் குழந்தைத் தொழிலாளியாக வேலை பார்த்த கிராமத்து விளிம்பு நிலை குடும்பத்தைச் சேர்ந்த சி. செல்வம் (33), மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்ந்து தன்னம்பிக்கையுடன் படித்து, பிளஸ் டூ தேர்ச்சி பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தின் குரோம்பேட்டை எம்ஐடியில் பிஇ படித்து என்ஜினியராகி, சொந்தமாகக் கட்டுமான நிறுவனத்தை உருவாக்கி, அதன் மேனேஜிங் டைரக்டராக உயர்ந்துள்ளார். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த அவர், அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி.
ஜெய் பீம் ஆஸ்கரை வெல்லுமா?
ஒரு தமிழ்ப் படத்தின் காட்சிகள் ஆஸ்கர் இணையதளத்தில் வெளிவருவது இதுவே முதன்முறை. அடித்துப் பிடித்து, பொருள் செலவில் ஆஸ்கருக்குச் சென்றிருக்கும் ஜெய் பீம் ஆஸ்கர் விருதை வெல்லும் வாய்ப்பு இருக்கிறதா?
மின்வாகன உற்பத்தி: டெஸ்லாவுக்குத் தமிழ்நாட்டின் கதவுகள் திறந்தே இருக்கின்றன!
போர்டு இந்தியா சென்னையின் புறநகர்ப்பகுதியில் இருந்த தனது ஆலையை மூடிவிட்டு இந்தியச் சந்தையை விட்டு வெளியேறிய பின்பு தமிழ்நாடு மின்வாகன (எலெக்ட்ரிக் வீஹிக்கிள் - ஈவி) உற்பத்தியில் நிறைய முதலீடுகளை கொண்டுவர முயன்றுக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு ஈவி உற்பத்தியாளர்கள் தமிழ்நாட்டில் வரிசையாக முதலீடு செய்கிறார்கள் என்று கடந்தவருடம் அக்டோபரில், தொழில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.
மலைத்தேன் விற்பனையில் சாதிக்கும் சென்னைப் பெண்மணி!
தனது குழந்தைக்காக சுத்தமான தேனைத் தேடி அலைந்த பெண் ஒருவர், கலப்படமில்லாத மலைத்தேன் விற்கும் தொழில் முனைவோராக வளர்ச்சி அடைந்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வரும் ஸ்ரீதேவி ”ஈக்கோமாம் (Ecomam) நேச்சுரல் அண்ட் ஹெர்பல் டிரேடர்ஸ்” என்ற பெயரில் சுத்தமான மலைத்தேனை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாடிக்கையாளர்கள் உள்ளனர். கனடா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கும் இவரது நிறுவனம் மலைத் தேனை ஏற்றுமதி செய்யும் பணியிலும் தீவிரமாக இறங்கியுள்ளார்
எம்பிபிஎஸ்: கடந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதப் பயந்த மாணவர், இந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம்!
எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கு, அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதி தகுதி பெற்ற மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஐ.சிவா.
Read in : English