இசை இணையர்: செளந்தரராஜனும்-சந்தானலஷ்மியும்.
பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் ஆறாவது தம்பதியினர் செட்டிக்குளத்தைச் சேர்ந்த செளந்தரராஜனும், சந்தானலஷ்மியும். மூன்றாவது தலைமுறை நாகஸ்வர விதுஷி சந்தானலஷ்மி, தனது பன்னிரெண்டாம் வயதில், தன் தந்தையார் தம்மப்பட்டி...