Read in : English
செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கடிதத்தில் முன்வைத்த முக்கிய வாதம் என்னவென்றால், செந்தில் பாலாஜி ஒரு செல்வாக்கு மிக்க நபர் என்பதால் அவரால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுவதைத் தவிர்க்க முடிந்தது என்று 2022இல் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது என்பதுதான்.
நீதிமன்றமே அப்படிச் சொல்லிவிட்டதால் செந்தில் பாலாஜியை அமைச்சராக தொடர அனுமதிப்பது சட்டப்படியான நடைமுறைக்கு இடையூறாகவும், நீதியை சீர்குலைக்கும் வகையிலும் அமையும் என்று ஆளுநர் வாதிட்டிருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் இன்மதிக்கு அளித்த நேர்காணலில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் தண்டனை பெற்றவுடன் அவரைத் தகுதி நீக்கம் செய்வதை விட, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடனே அவரைத் தகுதி நீக்கம் செய்யும் வகையில் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்குக் குடிமைச் சமூகமும் ஆதரவு தெரிவித்துள்ளது. அப்படிச் சட்டம் திருத்தப்பட்டிருந்தால், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஜெயலலிதாவால் முதல்வராகத் தொடர்ந்திருக்க முடியாது. ஆனால் அப்படியொரு சட்டத் திருத்தத்தை எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
தமிழக ஆளுநரின் கருத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்தினால் பாஜக உட்பட எல்லாக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தங்கள் பதவியை இழக்க நேரிடும். அதனால்தான் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆளுநரைக் கண்டித்துள்ளார்
ஆனால் இப்போதைய கேள்வி அதுவல்ல. குற்றம் நிரூபிக்கப்பட்டு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர்கள் மட்டுமே தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதவியை இழக்க நேரிடும் என்று சட்டம் தெளிவாகவே கூறுகிறது. ஆதலால் அமைச்சரை நீக்கும் உரிமை ஆளுநருக்கு இல்லை. குஜராத் அமைச்சராக அமித்ஷா இருந்தபோதுதான் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
தமிழக ஆளுநரின் கருத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்தினால் பாஜக உட்பட எல்லாக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தங்கள் பதவியை இழக்க நேரிடும். அதனால்தான் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆளுநரைக் கண்டித்துள்ளார்.
எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் என்று ஏராளமானவர்கள் ஊழல், கொலை, கற்பழிப்பு போன்ற குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் அமைச்சர்களாக அல்லது எம்எல்ஏக்களாக, எம்பிக்களாக பதவி வகிக்கின்றனர். இலாகா இல்லாமல் யாரும் அமைச்சராக இருக்கக் கூடாது. ஆனால் நேரு, சாஸ்திரி காலந்தொட்டு பலர் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முரசொலி மாறன் இலாகா இல்லாத அமைச்சராக இருந்திருக்கிறார் என்றார் அரி பரந்தாமன்.
மேலும் படிக்க: அதிகார வரம்பை மீறி அரசியல் செய்கிறாரா ஆளுநர் ரவி?
தமிழக ஆளுநர் ரவி செய்ததைப் போல வேறு எந்த ஆளுநரும் செய்யவில்லை என்று கூறிய அவர், மாநில அரசின் சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத பல நிகழ்வுகளையும், அவருடைய சட்ட விரோதச் செயற்பாடுகளையும் சுட்டிக் காட்டினார். அவசரநிலைக் காலத்தில் கருணாநிதி அரசு கலைக்கப்படும் வரைக்கும் அவரோடு அன்றைய ஆளுநர் சுமுகமான உறவோடுதான் இருந்தார். 1980-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி எம்ஜிஆர் அரசைக் கலைத்த போதும் அதே நிலைமைதான்.
இன்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள அனைத்து ஆளுநர்களும் ’சூப்பர் முதல்வர்கள்’ என்று அரி பரந்தாமன் கூறினார். நியமன பதவிகளுக்கு எப்படி அதிகாரம் இருக்க முடியும்? இது ஆளுநர் ரவியா அல்லது முதல்வர் மு.க.ஸ்டாலினா என்ற பிரச்சினை அல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கும், நியமிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையிலான பிரச்சினை.
ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு இருந்தது, அமித் ஷாவுக்கும் செல்வாக்கு இருந்தது. ஆனால் அவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டபோது அவர்கள் ஒன்றும் பதவி இழக்கவில்லை. Ñகுற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவர பாஜக விரும்பினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்கிறார் அரி பரந்தாமன்
செந்தில் பாலாஜி செல்வாக்கு மிக்கவர்; செல்வாக்கான நபராக இருந்தாலும் விசாரணை அதிகாரி தனது கடமையைச் செய்ய வேண்டும் என்று மட்டுமே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்காக செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது என்று அர்த்தமில்லை. ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு இருந்தது, அமித் ஷாவுக்கும் செல்வாக்கு இருந்தது. ஆனால் அவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டபோது அவர்கள் ஒன்றும் பதவி இழக்கவில்லை. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவர பாஜக விரும்பினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்கிறார் அரி பரந்தாமன்.
ஆளுநர் மேற்கோள் காட்டிய அரசமைப்புச் சட்டம் 163-வது பிரிவின் துணைப்பிரிவு– 2 ஆளுநரின் விருப்புரிமை அதிகாரங்களைப் பற்றி விவாதிக்கிறது. தனது விருப்புரிமை அதிகாரத்தின் கீழ் எடுக்கப்பட்ட அவரது நடவடிக்கை அமைச்சரவை வழங்கிய ஆலோசனையின்படி எடுக்கப்பட்டதா என்பதை மறுஆய்வு செய்யக்கூடாது என்று துணைப்பிரிவு 3 கூறுகிறது.
ஆனால் இந்த இரண்டு துணைப்பிரிவுகளையும் 1-வது துணைப்பிரிவுடன் சேர்த்து வாசிக்க வேண்டும். அரசமைப்புச் சட்டம் சொல்லும் சில விதிவிலக்கான சூழல்களைத் தவிர்த்து, பொதுவாக முதல்வர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று கூறுகிறது அந்த 1–வது துணைப்பிரிவு. ஆளுநருக்கு இருக்கும் ஒரே விருப்புரிமை என்பது முதல்வர் தலைமையிலான அமைச்சரவையின் விருப்புரிமை மட்டுமே.
மேலும் படிக்க: மருத்துவமனையில் செந்தில் பாலாஜி: அமலாக்கத் துறை விசாரணை எப்போது?
ஆளுநர் என்பது குடியரசுத் தலைவரைப் போலவே ஒரு சம்பிரதாய பதவிதான்; அமைச்சரவைக்கு வெளியே அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. துணைப்பிரிவு 3-இன் படி, அமைச்சர்கள் ஆளுநருக்கு ஆலோசனை வழங்கினார்களா, அப்படியானால் என்ன அந்த ஆலோசனை என்ற கேள்விகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியாது.
அதனால்தான் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் கருணை மனுவை மாநில அரசின் ஆலோசனை பெறாமல் அப்போதைய ஆளுநர் தள்ளுபடி செய்தார். ஆனால் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனையை ஆளுநர் பெற வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் கருணை மனுவை ஆளுநர் ஏற்க வேண்டும் என்று கருணாநிதி அமைச்சரவை பரிந்துரைத்தது என்பதை நினைவுகூர்ந்தார் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன்.
Read in : English