Read in : English
ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குவதற்காக காவேரி மருத்துவமனையில் இதய அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்’கில் வழங்கப்படும் தீர்ப்பைப் பொருத்தே, அவரிடம் அமலாக்’கத் துறை விசாரணை நடத்துவது எப்போது என்று தெரியவரும்.
2014-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டதால், அவர் மீது விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விசாரணையை மேற்கொண்டது. ஜூன் 13ஆம் தேதி காலை 7 மணியளவில் தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகம், வீடு என செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 17 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனைக்கு பிறகு, ஜூன் 14ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர்.
அப்போது, நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் உடனடியாக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு உடனடியாக ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தின் ரத்த குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குவதற்காக காவேரி மருத்துவமனையில் இதய அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்’கில் வழங்கப்படும் தீர்ப்பைப் பொருத்தே, அவரிடம் அமலாக்’கத் துறை விசாரணை நடத்துவது எப்போது என்று தெரியவரும்
இதற்கிடையே, செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரிக்கத் தீவிரம் காட்டினர். அவர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரடியாக சென்ற சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி விசாரணை மேற்கொண்டார். பின்னர், ஜூன் 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அத்துடன், செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தனியாக ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிராக, செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க: செந்தில் பாலாஜி கைது: அறப்போர் இயக்கம் என்ன சொல்கிறது?
நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை மாற்ற அனுமதி அளித்தனர். பின்னர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று (ஜூன் 21) இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிகாலை 5.15 மணியளவில் தொடங்கிய அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.
இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி 3 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பார் என்றும், அடுத்த 7 நாட்களுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
“இதயத்தில் ரத்த ஓட்டத்தை கடத்தும் தமனிகளில் கொழுப்பு படிவு என்ற பொருள் உருவாவதால் இதய அடைப்பு ஏற்படும். தமனிகளில் ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் கடத்தப்படுவதால், அங்கு உருவாக்கும் கொழுப்பு பொருள் தமனிகளைச் சுருங்க செய்யும் அல்லது அடைப்பை ஏற்படுத்தும். இதனால், மூச்சுத் திணறால் பாதிக்கப்படுவதுடன் கடுமையான நெஞ்சு வலி ஏற்படும். ஆரம்பத்தில், லேசான உடற்பயிற்சியோ அல்லது ஓய்வு எடுத்தாலோ தமனியின் தசையில் இரத்தம் குறையும். சில நேரங்களில் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
ஆனால், கடுமையான அடைப்பு ஏற்படும் போது, இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடுமையான அடைப்பு இருப்பதால் தான் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது” என்று அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட பைபாஸ் அறுவை சிகிச்சை குறித்து மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அறுவை சிகிச்சை முடிந்து 3 மாதங்கள் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிகிச்சைக்கு பிறகு மன அழுத்தம் ஏற்படாதவாறு இருக்க வேண்டும் என்ற மருத்துவ நிபுணர்கள், அதீத கவலையோ அல்லது அச்சமோ நோயாளின் உடலுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்
“இதயத்தின் ரத்த குழாய் அடைப்பு யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற மருத்துவர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்னதாக அடைப்பு இருந்ததாக கூறமுடியாது, திடீரென ஏற்பட்ட அடைப்பால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர், நோயாளி 4 நாட்கள் வரை தீவிர சிகிச்சை பிரிவில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்றும், அதன்பின்னர் ஒரு வாரத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவரின் இதய செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அறுவை சிகிச்சை முடிந்து 3 மாதங்கள் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எப்படி சுவாசிக்க வேண்டும் என்பது குறித்து பிசியோதெரபி அளிக்கப்படுவதுடன், அடுத்த 2 மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும். சிகிச்சைக்கு பிறகு மன அழுத்தம் ஏற்படாதவாறு இருக்க வேண்டும் என்ற மருத்துவ நிபுணர்கள், அதீத கவலையோ அல்லது அச்சமோ நோயாளின் உடலுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்” என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: அதிகார வரம்பை மீறி அரசியல் செய்கிறாரா ஆளுநர் ரவி?
இதற்கிடையே, செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து , தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை எப்படி காவலில் எடுத்து விசாரிக்க முடியும் என அமலாக்கத்துறையை நோக்கி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சந்தேகிக்க முடியாது என்றனர்.
மேலும், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்வது அதிருப்தி அளிப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக சுட்டிக்காட்டினர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Read in : English