Read in : English

வெளியில் வேலைக்குப் போனாலும் வீட்டு வேலை என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. வீட்டு வேலைகளில் பெண்கள் ஈடுபடும் அளவும் தன்மையும், வேலையில் அவர்கள் செய்யும் பங்களிப்பின் அளவையும் தன்மையையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாகும். இந்தியாவில் வீட்டு வேலைக்காக பெண்கள் நாள்தோறும் 243 நிமிடங்கள் செலவழிக்கின்றனர். ஆண்கள் வீட்டு வேலைக்காக செலவழிப்பது 25 நிமிடங்கள்தான்.

தமிழ்நாட்டில், பெண்கள் வாரத்திற்கு 28.68 மணி நேரத்தை சமையல், குழந்தை பராமரிப்பு, கடைகண்ணிக்குச் செல்லுதல் மற்றும் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வீட்டுப்பணிகளுக்குச் செலவிடுகிறார்கள். அதே நேரத்தில் ஆண்கள் வெறும் 2.04 மணி நேரம் மட்டுமே செலவிடுகிறார்கள் என்பது மத்திய புள்ளிவிவர அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வேலையையும், வீட்டையும் சமநிலைப்படுத்துவதில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த விஷயங்கள் குறித்த விவாதிக்கவும் தெளிவுபெறவும் தமிழகப் பள்ளிக் கல்வித்துறையால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டப் பயிற்சியில் பங்கேற்ற பெண்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. தமிழகத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களை, வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையிலான எல்லைகள் என்றால் என்ன தொற்றுநோய்க் காலம் அந்த எல்லைகளை மாற்றியதா என்றெல்லாம் இந்தப் பயிற்சி யோசிக்க வைத்தது.

தொற்றுநோய்க் காலத்தில் சமையல்காரி, இல்லத்தரசி, பராமரிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆகிய பாத்திரங்களை மாறிமாறிக் கையாண்ட பின்னர், அவர்களுக்கு இந்தப் பயிற்சி முகாம் சற்றே நிம்மதியையும் உற்சாகத்தையும் அளித்தது.

இந்தியாவில் வீட்டு வேலைக்காக பெண்கள் நாள்தோறும் 243 நிமிடங்கள் செலவழிக்கின்றனர். ஆண்கள் வீட்டு வேலைக்காக செலவழிப்பது 25 நிமிடங்கள்தான். தமிழ்நாட்டில், பெண்கள் வாரத்திற்கு 28.68 மணி நேரத்தை சமையல், குழந்தை பராமரிப்பு, கடைகண்ணிக்குச் செல்லுதல் மற்றும் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வீட்டுப்பணிகளுக்குச் செலவிடுகிறார்கள். அதே நேரத்தில் ஆண்கள் வெறும் 2.04 மணி நேரம் மட்டுமே செலவிடுகிறார்கள்

உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய தர அளவுகோல்கள்படி தமிழகத்தில் சிறப்பாக உள்ளது. (தேசிய சராசரி 27%, தமிழ்நாட்டு சராசரி 51%). மாநிலத்தில் 17-24 வயதுக்குட்பட்ட பெண்களில் 49% பேர் கல்லூரிக்குச் செல்கின்றனர். உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை மேம்படுத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த இலக்கை கொண்ட ஒரு திட்டம்தான் புதுமைப் பெண் திட்டம்.

அதன்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ பயிற்சி அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் திறமையான பெண் உழைப்பாளர்களின் சக்தி இனிவரும் ஆண்டுகளில் வளரப்போகிறது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன, இருப்பினும், இந்தப் பயிற்சிகள் உழைப்பாளர் சக்தியில் இருக்கும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு வழிவகுப்பதில்லை.

மேலும் படிக்க: முற்போக்கான தமிழகம் பாலின விசயத்தில் பின்தங்கி இருக்கிறது: தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வு

ஊதிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 2018-19 நிலவரப்படி மாநிலத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 35.1% (கிராமப்புறம்) மற்றும் 23.6% (நகர்ப்புறம்) ஆகும். இது தேசிய சராசரியை விட கணிசமான அளவுக்கு அதிகம்தான். இருப்பினும், தமிழ்நாட்டில் நகர்ப்புற பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 1990- களின் பிற்பகுதியில் இருந்து சுமார் 21% ஆக தேக்கமடைந்துள்ளது.

கடந்த சில தசாப்தங்களில் கிராமப்புற பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் சரிவைக் கண்டுள்ளது. இதற்கு பாதுகாப்பான போக்குவரத்து இல்லாமை, திறன்கள் தேவை, குழந்தைப் பராமரிப்புக் கடமைகள், கலாச்சாரத் தடைகள் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. பெண்களின் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியால் அளவிட முடியாத அபரிமிதமான ஆற்றல் வீணாகப் போகிறது.

கோவிட் -19 தொற்றுநோய்க் காலத்தில் பெண்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். வீட்டிற்கும் வேலைக்கும் இடையிலான அரூப எல்லைகளைக் கண்டுபிடித்து உருவாக்க வேண்டிய சுமைகள் அவர்களுக்கு இருந்தன. குவிந்த பொறுப்புகளால் அவர்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். கொரோனாவுக்குப் பிந்தைய கற்றல் மீட்புத் திட்டமான இல்லம் தேடிக் கல்விக் என்ற முன்னோடித் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியபோது, பெண்கள் அதிக எண்ணிக்கையில் (67,691, அதாவது 75%) தன்னார்வலர்களாக இணைந்தனர். பெண்கள் தங்கள் வீடுகளின் எல்லைகளைத் தாண்டிப் பங்களிப்பதில் தங்கள் ஆர்வத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

தொற்றுநோய்க் காலம், நோக்கம் இல்லாத ஓர் உணர்வை உருவாக்கியது. தொற்றுநோய் காலத்திற்குப் பிறகு புதிய நபர்களைச் சந்தித்து பணியாற்றுவதற்கான உந்துதல் குறித்து பலர் பேசினர். புதிய நோக்கத்துடனும், எல்லைகளை விரிவாக்கம் செய்யும் சிந்தனைகளுடனும் வேலைக்குத் திரும்பும் இந்தப் பெண்கள் இன்னும் தங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் நிர்வகிக்கும் பொறுப்பைத் தோளில் சுமந்து கொண்டிருந்தனர்.

தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டத்தின் பயிற்சி முகாமில் வீடு என்று சொல்லக்கூடிய அளவுக்கு எந்த பெளதீக இடமும் இல்லை. மேலும் பயிற்சியாளர்கள் 15 நாட்களுக்கு மேல் சாப்பிடவும், தூங்கவும், அடிப்படையில் வசிக்கவும் இருக்கும் இடங்களைப் பகிர்ந்து கொண்டனர். சக ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுடன் காணொளிகளில் உரையாடும் சத்தம்கேட்டு மற்றவர்கள் அடிக்கடி விழித்துக் கொள்வார்கள். இருவேறு உலகங்களின் சங்கமம் இங்கே நிகழ்கிறது. அத்தோடு இல்லம் சார்ந்த சுயம் மற்றும் பணியிடத்து சுயம் ஆகிய இரண்டு சுயங்களும் ஒன்றிணைகின்றன.

தினசரி நடைமுறை முதன்மையாக உணவு நேரங்களால் கட்டமைக்கப்பட்டது. தினமும் காலை 6:30 மணிக்கு தேநீர் வழங்கப்பட்டது. தேநீருக்குப் பிறகு, ஒவ்வொரு பங்கேற்பாளரும் காலை 8:30 மணிக்கு காலை உணவுக்காக ஒரு கிமீ தொலைவில் உள்ள சிற்றுண்டிச் சாலைக்குச் செல்வார்கள். காலை 10:00 மணிக்கு தொடங்கும் பயிற்சி அமர்வு. மீண்டும் தேநீர் 11:30 மணிக்கு நொறுக்குத் தீனியுடன் வருகிறது. மதியம் 1:30 மணிக்கு மதிய உணவு; மாலை, 4:30 மணிக்கு தேநீர்; இரவு 8:30 மணிக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு உணவும் ஒரே இடத்தில் மற்றும் ஒரே நேரத்தில் ஒரே மெனுவோடு தொடர்ந்து வழங்கப்பட்டது. அமர்வுகளுக்கு இடையிலான இடைவெளிகள், உணவு, வேலைக்குப் பிந்தியவை, மேலாளர்களுடன் தனிப்பட்ட அரட்டைகள், அணி உறுப்பினர்களுடன் பிணைப்பு மற்றும் ஒரு கலாச்சார நிகழ்வுக்கு தயாராவது ஆகியவற்றில் செலவிடப்பட்டன. இவற்றின் நடுவில் தொலைதூரமிருக்கும் வீட்டுக்கும் நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது

கொரோனாவுக்குப் பிந்தைய கற்றல் மீட்புத் திட்டமான இல்லம் தேடிக் கல்வி என்ற முன்னோடித் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியபோது, பெண்கள் அதிக எண்ணிக்கையில் (67,691, அதாவது 75%) தன்னார்வலர்களாக இணைந்தனர்

வேலைக்கும், வீட்டுக்கும் இடைப்பட்ட ஒரு தெளிவான எல்லையை நிறுவ முயல்பவர்களுக்கு, தங்களின் வீடுசார்ந்த சுயத்தை வேலை சார்ந்த சுயத்துடன் கலக்காமல் தனியாக மீட்டெடுப்பதற்கான நேரமும் வெளியும் கிடைப்பதில்லை. வீட்டிலிருந்து ஏதாவது ஒரு ஞாபகப் பொருளை அல்லது குழந்தையின் புகைப்படத்துடன் கூடிய தொலைபேசியை எடுத்துச் செல்வது ஊழியர்கள் அல்லது அறைத்தோழர்களுடனான உரையாடல்களைத் தூண்டக்கூடும்.

அப்போது வேலைக்கும் வீட்டிற்கும் இடையிலான எல்லை மங்கலாகி விடலாம். இரவு உணவின் போது அல்லது அமர்வுகளுக்கு இடையில் தொலைபேசியில் குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவது மேசையில் உள்ள மற்றவர்களையும் உரையாடலில் சிறிய பங்களிப்பைச் செய்ய வைக்கும்.

அப்போது இரண்டு உலகங்களுக்கிடையிலான கோடுகள் மேலும் சிதையும். அத்தகைய சூழ்நிலையில், நமது தனிப்பட்ட எல்லை வேலை ஒரு வழக்கமான பணி சூழ்நிலையை விட மிகவும் சுவாரஸ்யமான தேர்வுகளுக்கு வழிவகுக்கிறது.

மேலும் படிக்க: திருவண்ணாமலையில் கொத்தடிமை நிலையில் வெளி மாநில பழங்குடிகள்

இருப்பினும், தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 15 நாள் உறைவிடப் பயிற்சி அனுபவம் ஒரு குறுங்கால குடியிருப்புத் திட்டமாக இருந்ததால் அது மூன்றாவது வெளியாகச் செயல்பட்டது. அது ஒரு பணியிடமோ அல்லது வீடோ அல்ல. ஒரு முறையான பணியிடத்தில் வேலை-வீட்டு எல்லைகளை நிர்வகிப்பதற்கான சவால்கள் வித்தியாசமாக வெளிப்படலாம். ஆனால் பெண்கள் தவறாமல் செய்யும் வீட்டு மற்றும் பராமரிப்புச் சேவைகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால் அந்தச் சவால்களில் பெண்களுக்கு முக்கியமான பாடங்கள் இருக்கின்றன.

ஒரு வங்கி அல்லது கால் சென்டரில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் வீட்டையும் வேலையையும் சமநிலைப்படுத்தச் சிரமப்படலாம், ஏனெனில் அவர்களின் வேலைகளில் அவர்கள் எல்லா நேரங்களிலும் இருக்க வேண்டியிருக்கும். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் பெரும்பாலும் தங்கள் வேலையை வீட்டிற்கும் எடுத்துச் செல்ல வேண்டும். அல்லது பாடத் திட்டங்களால், நிர்வாகப் பணிகளால் மற்றும் பெற்றோர்களுக்கான அழைப்புகளால் பல மணி நேரம் பள்ளியில் தங்க வேண்டியிருக்கலாம்.

உணவு முறைகள், பெளதீக எல்லைகள், தேவையான சீருடைகள் மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் வேலையின் தன்மைக்கு ஏற்ப மாறுகின்றன. பலவீனமான எல்லைக்குட்பட்ட பகுதியாக வீடு அமைந்திருப்பவர்களுக்கும், வீடு, வேலை என்ற இரண்டு பகுதிகளையும் தனித்தனியாக வைத்திருக்க முயற்சிப்பவர்களுக்கும் சமநிலை என்பது மிகவும் சவாலானது. ஆண்களை விட வீட்டுப் பொறுப்புகள் மற்றும் குடும்ப பொறுப்புகளின் சுமையை அதிகம் சுமக்கும் பெண்களைப் பற்றி சிந்திக்கும்போது இது முக்கியமானதாகிறது.

அவர்களில் பலருக்கு, வேலை மற்றும் வீட்டு எல்லைகளை உண்மையிலேயே தனித்தனியாக வைத்திருப்பது அவர்களால் அனுபவிக்க முடியாத ஓர் ஆடம்பரமாகக்கூட இருக்கலாம்.

எனவே வேலை எல்லை என்ற கருத்தாக்கம் சிக்கலானது மற்றும் பன்முகத்தன்மை கொண்டது. வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடைப்பட்ட எல்லைகளைக் கடந்து செல்ல தனிநபர்கள் பயன்படுத்தும் பலவிதமான உத்திகள் மற்றும் தந்திரோபாயங்களை உள்ளடக்கிய கருத்தாக்கம் இது. இந்த நிகழ்வின் நுணுக்கங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளக் கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. அதே நேரம் வெவ்வேறு பணிச் சூழல்களில் இந்த சிக்கல்களையும், பல்வேறு தொழில்களின் மீது வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரம் ஏற்படுத்திய தாக்கத்தையும், அத்தகைய ஏற்பாட்டிலிருந்து தமிழகப் பெண்கள் எவ்வாறு பயனடையலாம் என்பதையும் ஆராய்வது முக்கியம்.

பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிவதற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்பின் மூலம் தமிழ்நாட்டில் பெண்களுக்கான ஓர் எதிர்காலத்தை உருவாக்க முடியும். அப்போது தங்கள் பன்முக அடையாளங்களை மதிக்கும் பணியிட அனுபவத்தைப் பெண்கள் பெறுவார்கள்; தொழில் ரீதியாக வளரவும் அவர்கள் அதிகாரம் பெறுவார்கள்; தங்களுக்குள் ஊறிக்கிடக்கும் திறமைகளின் செல்வத்தைப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பையும் பெறுவார்கள்.

(பூர்விகா பாலசுப்பிரமணியன், ஒரு கல்வியாளர், கலைஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்து ஆர்வலர். இவர் தற்போது மதி பவுண்டேஷனின் திட்டக் குழுவில் பணிபுரிகிறார். இக்கட்டுரை மதி பவுண்டேஷனின் இந்திய கல்வி ஆராய்ச்சி மையத்தின் (சிஇஆர்ஐ) ஏற்பாட்டில் எழுதப்பட்டது.)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival