Read in : English
திரௌபதி முர்மு, பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், இவர் ஒடிசா மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பிஜு ஜனதா தளம் ஆத்ரவு அளித்துள்ளது. இதன் மூலம் 50 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வாய்ப்பாக அமைந்துள்ளது.
பாரம்பரியமாக பல்வேறு பழங்குடியினரைக் கொண்ட மாநிலம் ஒடிசா. இந்தியாவில் மனித இனம் இருந்த காலத்தில் இருந்தவர்கள் என்பதற்கு வாழும் உதாரணம் பழங்குடியினர். டோனி ஜோசப் எழுதிய “ஆரம்பகால இந்தியர்கள்” என்ற புத்தகத்தில்: “நாம் எங்கிருந்து வந்தோம், மற்றும் நம் முன்னோர்களின் கதை” என்ற பகுதியில்; “எங்களில் சிறந்த இந்தியரை நீங்கள் அடையாளம் காண வேண்டுமென்றால், அவர் யாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கண்டிப்பாக, அவர் ஒரு பழங்குடிப் பெண்ணாகவே இருக்க வேண்டும், ஏனென்றால் இந்திய பாரம்பரிய வம்சாவளி மற்றும் மரபணுவை அவர்தான் சுமந்து செல்கிறார் என்கிறார் அவர்.
ஒடிசாவில் 80 வகையான பழங்குடியினர் வாழ்கின்றனர். ஆஸ்ட்ரோ-ஆசிய பழங்குடியினர், திராவிட பழங்குடியினர் மற்றும் இந்தோ-ஆரிய பழங்குடியினர் என்று மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இந்த பழங்குடியினர் பெரும்பாலும் மயூர்பஞ்ச், ஜாஜ்பூர், பத்ரக், தியோகார், சுந்தர்கர், கந்தமால் போன்ற பல மாவட்டங்களில் பரவியுள்ளனர். இந்தப் பழங்குடியினரில் பெரும்பாலானவர்கள் மீன்பிடித்தல், விவசாயம், வேட்டையாடுதல் போன்ற தொழில்களை செய்து வாழ்ந்து வருகின்றனர்.
திராவிடர்கள் இந்தியாவின் பூர்வக் குடிமக்களாக அறியப்பட்டுள்ளனர், ஆனால் சமீப காலங்களில், இந்த கருத்தின் ஒரு மாற்றியமைக்கப்பட்ட பதிப்பு முன்வைக்கப்பட்டுள்ளது. திராவிடத்திற்கு முந்தைய பழங்குடியினர், அதாவது தற்போதைய பட்டியல் இன மக்களின் மூதாதையர்களே பூர்வப் பழங்குடியினர் என்று தற்போது நம்பப்படுகிறது. இந்திய மக்களில் ஆஸ்ட்ரோ-ஆசியக் குழுக்களின் நிலை குறித்த விக்ராந்த் குமார் மற்றும் எழுத்தாளர் பி மோகன் ரெட்டி ஆகியோர் இந்திய மக்களில் ஆஸ்ட்ரோ-ஆசியக் குழுக்களின் நிலை குறித்த ஆய்வில், “ஆஸ்ட்ரோ-ஆசிய மொழியியல் குடும்பத்துடன் இணைந்த சமூகங்கள் இந்தியாவில் குடியேறியிருக்கலாம்” என்கிறார்கள்.
ஒடிசாவின் சில ஆஸ்ட்ரோ-ஆசிய பழங்குடியினரைப் பற்றிப் பார்க்கலாம். சந்தால் பழங்குடியினர், ஒடிசாவின் பழங்குடி மக்கள்தொகையில் முக்கியமானவர்கள். அத்துடன், ஜார்கண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய பழங்குடியினரும்கூட.
அசாம், திரிபுரா, சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களின் பழங்குடி மக்கள்தொகையில் சந்தால்களும் கணிசமானவர்கள். சந்தாலிகள் அதிகம் பேசும் மொழி `முண்டா’. சந்தால் மொழிக்கு எழுத்து வரிவடிவம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
ஜமீன்தார்களும் ஆங்கிலேயர்களும் பழங்குடி மக்களை அடக்குவதற்கு முயற்சி செய்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து 1855இல் சந்தால் கிளர்ச்சி ஏற்பட்டது. சித்து, கானு முர்மு ஆகியோர் தலைமையில் 30 ஆயிரம் சந்தால்கள் கிளர்ச்சியில் இறங்கினார். 1857இல் நடைபெற்ற விடுதலைப் போராட்ட கிளர்ச்சியில் சந்தால்களின் கிளர்ச்சி மறைக்கப்பட்டுவிட்டது. சந்தால்கள் கிளர்ச்சியின் விளைவாக, பழங்குடியினரின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆங்கிலேயேர்கள், அவர்களையும் வரி செலுத்தும் குழுவாக அங்கீகரித்து, பழங்குடியினரின் கோரிக்கைகளை நிறைவேற்றினர்.
ஜமீன்தார்களும் ஆங்கிலேயர்களும் பழங்குடி மக்களை அடக்குவதற்கு முயற்சி செய்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து 1855இல் சந்தால் கிளர்ச்சி ஏற்பட்டது.
மேலும் படிக்க:
ஆனைமலை புலிகள் வன காப்பகம்: பழங்குடியினர் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வர முதன் முறையாக வாகன வசதி!
பிஎச்டி படிக்கும் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் பெண்!
ஹோடோகோ மற்றும் ஹோரோ பழங்குடியினர் என்றும் அழைக்கப்படும் ஹோ மக்கள் ஆஸ்ட்ரோ-ஆசிய முண்டா குழுவை சேர்ந்தவர்கள். ஜார்க்கண்டில் சந்தால்கள், குருக்கள் மற்றும் முண்டாஸ் ஆகியோருக்குப் பிறகு ஹோ மக்கள் நான்காவது பரவலான பழங்குடியினர். ஹோ மக்கள் தங்களது பூர்வீக மொழியான ஆஸ்ட்ரோசியாட்டிக் மொழியைத் தவிர்த்து, இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டையும் பயன்படுத்துகின்றனர்.
ஹோ பழங்குடிப் பெண்கள், திருமணத்திற்குப் பிறகு, தங்களது துணைவரின் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்வர். மொத்தத்தில், பழங்குடி இனத்தில் பெண்கள் எண்ணிக்கையிலும், எண்ணத்திலும் ஆண்களை விட உயர்ந்தவர்களாக போற்றப்படுகின்றனர். ஹெச்.ஹெராஸ் எழுதிய “The Dravidian Tribes of Northern India” என்ற புத்தகத்தில் “உரான் மொழி, வங்காளத்தின் மேற்கு எல்லைக்கு அருகில் உள்ள சோட்டா நாக்பூர் மற்றும் மால்டோவில் பேசப்படுகிறது. மேற்கு கட்டாகில் “குய்” மொழியும், மத்திய இந்தியாவின் கோண்டு பகுதிகளில் “கோண்டி” மொழியும் பேசப்படுகிறது. இவ்விரண்டு மொழியே திராவிட மொழியாக இருக்க வேண்டும்” என்றுகூறுகிறார்.
ஒடிசாவின் திராவிட மொழிக் குடும்பத்தில் பெங்கோ, கிசான், கோண்டா, கோயா, பார்ஜி, குவி என ஒன்பது மொழிகள் உள்ளன. கோண்டி அல்லது கோய்தூர் என்று அழைக்கப்படும் கோண்டுகள், ஒடிசா மாநிலத்தின் திராவிட இன-மொழிக் குழுவாகும்.
இதை தவிர, ஒடிசாவின் திராவிட மொழிக் குடும்பத்தில் பெங்கோ, கிசான், கோண்டா, கோயா, பார்ஜி, குவி என ஒன்பது மொழிகள் உள்ளன. ஒடிசாவில் சில திராவிட பழங்குடியினர் உள்ளனர். கோண்டி அல்லது கோய்தூர் என்று அழைக்கப்படும் கோண்டுகள், ஒடிசா மாநிலத்தின் திராவிட இன-மொழிக் குழுவாகும். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் பரவியுள்ள கோண்டுகள் இந்தியாவின் மிகப் பெரிய பழங்குடியினக் குழுக்களில் ஒன்றாகும். அவர்கள் தெலுங்கை தழுவிய திராவிட மொழியை பேசுகின்றனர்.சுமார் 30 லட்சம் பேர் இந்த மொழியை பின்பற்றுகின்றனர்.
கோண்டு இன மக்கள் கலைத்திறன்மிக்கவர்களாகவும் அறியப்படுகின்றனர், மேலும் கோண்டு ஓவியங்கள் நாட்டில் மிகவும் பிரபலமானவை. சமீப ஆண்டுகளில், பழங்குடியின பெண்கள் தங்கள் கிராமங்களின் விவசாயப் பணிகளையும் நீர்ப்பாசன வேலைகளையம் செய்கிறார்கள்.
மாநிலத்தின் மிகப்பெரிய பழங்குடியினரில் ஒன்றான கோண்டு இன மக்கள் மலைகள், நீரோடைகள் மற்றும் ஒட்டுமொத்த இயற்கையை வணங்குபவர்கள். அவர்கள் பாரம்பரியமாக வேட்டையாடுபவர்கள், மலைகள் மற்றும் சமவெளிகளில் வாழ்கின்றனர். இவர்கள் “குய்” மற்றும் “குவி” மொழிகளைப் பேசுபவர்கள். இந்த மொழிகளை எழுத ஒடியா எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர். ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற பிற மாநிலங்களிள் இந்த பழங்குடியினர் பட்டியல் இன மக்கள்களாக பாவிக்கபடுகின்றனர்.
இந்தோ-ஆரிய மக்கள் ஏராளமான இந்தோ-ஐரோப்பிய இன மொழியியல் குழுக்களைச் சேர்ந்தவர்கள். பொதுவாக இவர்கள் இந்தோ-ஆரிய மொழிகளில் இந்தி-உருது, பெங்காலி, ஒடியா, பஞ்சாபி, குஜராத்தி மற்றும் பல மொழிகளில் உரையாடுவார்கள். எல்லையற்ற மேற்கோள்களால் எழுதப்பட்ட, எல்லையற்ற உலக வரலாறு, ” இந்தோ-ஈரானியர்களின் ஒரு கிளையே இந்தோ-ஆரியர்கள், அவர்கள் இன்றைய வடக்கு ஆப்கானிஸ்தானில் தோன்றியவர்கள். கிமு 1500 வாக்கில், வட இந்தியா முழுவதும் கால்நடை மற்றும் விவசாய சமூகங்களை இந்தோ-ஆரியர்கள் உருவாக்கினர். வட இந்தியா என்று கூறப்படும் பகுதியில் ஒரிசா மாநிலமும் ஒன்று.
இந்தோ-ஆரிய இனக்குழுக்களில் ஒன்றான சௌண்டிகள், பெரும்பாலும் ஒடிசா மாநிலத்தில் கெந்துஜர் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். சௌண்டி இனம், 17ஆம் நூற்றாண்டில் பூரியைச் சேர்ந்த ஜாய்கோபிந்தா தாஸ் என்பவரால் உருவானது. அவர் சௌண்டி இனத்தை உருவாக்குவதற்காக, தனது பிறந்த சாதியைத் துறந்தார். சௌண்டிகள் மற்ற சாதிகளில் இருந்து புறக்கணிக்கப்பட்ட ஒரு பகுதியினர். அவர்களுக்கு கெண்டுஜர் ஆட்சியாளர்கள், மானாட்டா பகுதியில் குடியேற அனுமதி வழங்கினர்.
இந்த சமூகத்தில் 1000 ஆண்களுக்கு 1001 பெண்கள் என்ற பாலின விகிதம் இருக்கிறது. பரஸ்பர ஒப்புதலுடன் திருமணங்கள் நடைபெறுகின்றன, இது பழங்குடியினத்திலும் திருமண விருப்பம் முக்கியம் என்பதைக் குறிக்கிறது.
Read in : English