Read in : English

இந்த ஜூன் 18ஆம் தேதி அன்று 5.75 லட்ச ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்களைச் சேர்த்துக் கொடுத்து மாருதி கார் வாங்கியுள்ளார் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த டாக்டர் வெற்றிவேல். இந்த 10 ரூபாய் நாணயங்களின் மொத்த எடை 450 கிலோ.

கார் வாங்க வருபவர்கள் வங்கிக் கடன் வாங்கி கார் வாங்குவார்கள். அல்லது சொந்தப் பணத்தில் செக் போட்டுக் கொடுத்து கார் வாங்குவார்கள். ஆனால், மாருதி சுசுகி கார் விற்பனை நிறுவனத்துக்கு வந்து ரூ.5.75 லட்சத்துக்கு 10 ரூபாய் நாணயங்களைக் கொடுத்து மாருதி காரை வாங்கி இருக்கிறார் டாக்டர் வெற்றிவேல்.

திருவேணி கார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நாணயங்களை எண்ணுகிறார்கள்

ஆயுர்வேத மருத்துவரான வெற்றிவேல், குழந்தைகளுக்கான பிளே ஸ்கூலையும் நடத்தி வருகிறார். 10 ரூபாய் நாணயங்களாகக் கொடுத்து மாருதி கார் வாங்கினால் என்ன என்று நினைத்த அவர், அதற்காக பத்து ரூபாய் நாணயங்களைச் சேர்க்கத் தொடங்கினார். பள்ளிக் கட்டணம் செலுத்த வரும் பெற்றோரை 10 ரூபாய் நாணயமாகக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.

அதையடுத்து வங்கிகளில் தன்னிடம் இருந்த பணத்தைக் கொடுத்து 10 ரூபாய் நாணயமாகப் பெற்றுக் கொண்டார். இப்படி பல்வேறு வழிகளில் 10 ரூபாய் நாணயங்களைச் சேர்த்து, கார் வாங்குவதற்கான ரூ.5.75 லட்சம் பணத்தை திரட்டினார்.

மாருதி சுசுகி கார் விற்பனை நிறுவனத்துக்கு வந்து ரூ.5.75 லட்சத்துக்கு 10 ரூபாய் நாணயங்களைக் கொடுத்து மாருதி காரை வாங்கி இருக்கிறார் டாக்டர் வெற்றிவேல்

மேலும் படிக்க:
அம்பாசடர் மீண்டு(ம்) வருகிறது, மின்சாரக் கனவோட
ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் ஒன்றுபோல நன்மைதரும் ஓர் அமைப்பு உருவாகுமா?

இதனையடுத்து, சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள திரிவேணி கார் நிறுவனத்திற்கு நேரில் சென்று மாருதி eco ரக காரைப் பெறுவதற்கு புக் செய்துள்ளார். பின்னர் அந்தக் காருக்கான மொத்த தொகையையும் பத்து ரூபாய் நாணயமாகத் தான் கொடுப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இதை ஆச்சரியத்தோடு கேட்ட கார் நிறுவனம், வங்கிகளுடன் தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்டது. அதன்பிறகே, 10 ரூபாய் நாணயமாக பெற்றுக் கொள்ள அந்த நிறுவனம் சம்மதித்தது.

இதையடுத்து, தனது நாணய சேகரிப்பை தனியே மினி டோர் வாகனத்தில் மூட்டை மூட்டைகளாகக் கட்டிக் கொண்டு வந்து கார் விற்பனை நிறுவனத்திடம் அதை ஒப்படைத்தார். திருவேணி கார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அவர் கொண்டுவந்து கொடுத்த 10 ரூபாய் நாணய மூட்டை 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை எண்ணத் தொடங்கினார்கள் சுமார் 20 ஊழியர்கள்,3 மணிநேரம் நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

கார் நிறுவனத்தின் ஊழியர்கள் நாணய மூட்டைகளை எடுத்துச் செல்கின்றனர்

இதனால் அந்தக் கார் நிறுவனமே பரபரப்பாக காணப்பட்டது. ஒரு வழியாக 10 ரூபாய் நாணயங்•களை எண்ணி முடித்தார்கள். பின்னர், அவருக்கு மாருதி காரை கொடுத்திருக்கின்றனர்.

“பஸ்களிலும், பலசரக்கு, காய்கறிக்கடைகளிலும், ஹோட்டல்களிலும் 10 ரூபாய் நாணயம் இன்றும் புழக்கத்தில் உள்ளது. ஒன்றிரண்டு நாணயங்களைக் கொடுத்தால் யாரும் மறுப்பதில்லை.

பத்து ரூபாய் நாணயம் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள போதிலும்கூட, சில கடைகளிலும் வங்கிகளிலும் நிறைய பத்து ரூபாய் நாணயங்களைச் சேர்த்துக் கொடுத்தால் வாங்க மறுக்கிறார்கள்

கொத்தாக நாணயங்களைச் சேர்த்துக் கொடுத்தால் அதை வாங்க மறுக்கும் போக்கு நிலவுகிறது. அதேபோல பெரும்பாலான நேரங்களில் வாடிக்கையாளர்களும் இதுபோன்று வாங்க மறுக்கிறார்கள்

பத்து ரூபாய் நாணயங்களைத்தான் வாங்க மறுக்கிறார்களே தவிர, பத்து ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதில்லை.

பத்து ரூபாய் நாணயம் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள போதிலும்கூட, சில கடைகளிலும் வங்கிகளிலும் நிறைய பத்து ரூபாய் நாணயங்களைச் சேர்த்துக் கொடுத்தால் வாங்க மறுக்கிறார்கள். இதுகுறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டேன்.

ரிசர்வ் வங்கி செல்லாது என்று அறிவிக்காமலேயே 10 ரூபாய் நாணயத்தை செல்லாது என்று முடிவு செய்வது சரியா” என்ற கேள்வியை எழுப்புகிறார் டாக்டர் வெற்றிவேல்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival