Read in : English
விமானஓட்டி தற்கொலை என்பது திடீரென நிகழ்வது; ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருவது. ஆனால் அதுவோர் அபூர்வமான நிகழ்வு; வானில் திடீரென நடக்கும் அமானுஷ்யமான ஒருசில விமான விபத்துக்கள் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன.
மார்ச்சில் சீனா ஈஸ்டர்ன் விமானம் தரையில் இறங்கி மோதியதில் பயணம் செய்த132 விமானிகளும் எல்லா ஊழியர்களும் இறந்துபோனார்கள். இது விமானஓட்டி அறையில் (காக்பிட்) இருந்த யாரோ ஒருவர் வேண்டுமென்றே நிகழ்த்திய விபத்து என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சமீபத்தில் சொன்னது. விமான உலகில் இருக்கும் பலர் இதை விமானஓட்டி தற்கொலை வழக்கு என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
2014-ல் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்குப் போவதற்குப் பதில் பாதையை மாற்றி ஓடி எரிபொருள் தீர்ந்துபோக இந்தியப் பெருங்கடலில் விழுந்து காணாமல் போனது. விமானஓட்டி தற்கொலை ஏற்படுத்திய விமான விபத்துகளில் மிகவும் தெரிந்த ஒன்று இது.
டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷனுக்கு விமான நிறுவனங்களுக்கு உதவுவதில் மட்டுமே ஆர்வம். விமானஓட்டி தற்கொலை பிரச்சினையை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.
விமானஓட்டி தற்கொலை அவ்வப்போது சீராகவே நிகழ்கிறது. விமான நிறுவனங்கள் வைத்திருக்கும் நாடுகள் இந்தப் பிரச்சினையைக் கண்டுகொள்ள அல்லது ஒத்துக்கொள்ளத் தயங்குகின்றன. உதாரணமாக, போயிங் என்னும் அமெரிக்க நிறுவனத்தின் விமானம் சம்பந்தப்பட்ட விபத்தை ஆராய்ந்த அமெரிக்க அதிகாரிகள் சொன்ன கருத்தோடு சீனாவின் புலன்விசாரணை அதிகாரிகள் பொதுவெளியில் ஒத்துப்போக மறுத்தார்கள். இந்த விமானஓட்டி தற்கொலை கருத்தாக்கத்தோடு மலேசியா அதிகாரிகளும் உடன்படவில்லை.

விமானஓட்டி தற்கொலை நிஜத்தில் தீர்வு காண வேண்டிய ஒரு பிரச்சினைதான் என்று கூறுகிறார் பணிஓய்வு பெற்ற கேப்டன் ரங்கநாதன்.
இந்திய அதிகாரிகளும் விமானச்சேவை நிறுவனங்களும் கூட இந்தப் பிரச்சினையைக் கண்டுகொள்ளவே இல்லை என்று சொல்கிறார் பணிஓய்வு பெற்ற கேப்டன் ரங்கநாதன். விமானஓட்டி தற்கொலை நிஜத்தில் தீர்வு காண வேண்டிய ஒரு பிரச்சினைதான் என்று கூறுகிறார் அவர்.
அவருடன் கொண்ட நேர்காணல் பின்வருமாறு:
விமானஓட்டி தற்கொலை பிரச்சினையைப் பற்றிய பிரக்ஞை இந்திய அதிகாரிகளுக்கும், விமானச்சேவை நிறுவனங்களுக்கும் இருக்கிறதா?
அவர்களுக்கு நிஜத்தில் பிரக்ஞையே இல்லை. அப்படியொரு நிகழ்வு நிகழவில்லை என்ற எண்ணத்திலே அவர்கள் இருக்கிறார்கள். ஒன்றும் செய்வதற்கில்லை என்பது அவர்களின் மனப்போக்கு.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, எடுக்க முடியும்?
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விமான ஊழியர்களின் நிதிப்பிரச்சினைகள் மற்றும் மனிதவாழ்வுப் பிரச்சினைகள் ஆகியவை ஆராயப்பட வேண்டும். டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷனுக்கு விமான நிறுவனங்களுக்கு உதவுவதில் மட்டுமே ஆர்வம். விமானஓட்டி தற்கொலைப் பிரச்சினையை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.
விமானஓட்டி தற்கொலையால் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் விமான விபத்துகளின் வரிசையில் சமீபத்திய வரவு சீன விமான விபத்து. நீங்கள் பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிவருகிறீர்கள். விமான ஓட்டிகள் உலகத்தில் என்ன தவறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது?
விமான ஊழியர்களின் நிதிப்பிரச்சினைகள் மற்றும் மனிதவாழ்வுப் பிரச்சினைகள் ஆகியவற்றை விமான நிறுவனங்களின் மனிதவளத்துறை புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் போக்கை ஆய்வுசெய்யும் நிபுணர்களை பணியில் அமர்த்திக் கொள்ளவேண்டும். விமானஓட்டியின் நடத்தையிலும் போக்கிலும் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால் அவற்றை ஆரம்பத்திலே இனங்காண வேண்டும். அப்போது விமான விபத்துகளைத் தவிர்க்கலாம்.
அவமானம் என்பது ஆகப்பெரிய பிரச்சினை. ஒரு மூத்த விமான ஓட்டி அவமானப் படுத்தப்படும்போது விபத்து போன்ற எதிர்வினைகளை அது தூண்டிவிடலாம்
விமானஓட்டி தற்கொலை சில தேசிய இனங்களில் அல்லது கலாச்சாரங்களில் மட்டுமே நிகழக்கூடியதா? ஏன் இப்படி நடக்கிறது?
தேசிய இனங்களை அடிப்படையாகக் கொண்டு மட்டும் இந்தப் பிரச்சினயைப் பொதுவாக அணுகமுடியாது. அவமானம் என்பது ஆகப்பெரிய பிரச்சினை. ஒரு மூத்த விமானஓட்டி அவமானப் படுத்தப்படும்போது விபத்து போன்ற எதிர்வினைகளை அது தூண்டிவிடலாம்.
நடத்தை மாற்றத்தின் அறிகுறிகளை ஒரு விமானஓட்டியிடம் காணமுடியுமா? நாம் விழிப்போடு கவனத்துடன் இருக்க முடியுமா?
சகபணியாளர்களோடு இயல்பாக பேசும்போது இந்தப் போக்கை லேசாகப் புரிந்துகொள்ள முடியும். துரதிர்ஷ்டவசமாக, ஒரு விமானஓட்டி தன் சகபணியாளர்களின் உள்ளார்ந்த மனப்பிரச்சினைகளை வெளியே சொல்வதில்லை.
எந்த நாட்டிலும் அல்லது எந்தக் கலாச்சாரத்திலும் நிகழும் பிரச்சினைதான் இது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?எங்கேயும் நிகழக்கூடியதுதான்.
விமானஓட்டியின் தற்கொலைதான் விபத்துக்குக் காரணம் என்று புலன்விசாரணை அதிகாரிகள் எப்படி அனுமானிக்கிறார்கள்?
தேசங்கள் தங்களின் பேர்கெட்டுப் போவதை விரும்புவதில்லை. தங்கள் பேரைக் காப்பாற்றவே அவை முயல்கின்றன. அதனால் விமான விபத்துக்களுக்கான காரணம் விமானஓட்டியின் தற்கொலைதான் என்று அவர்கள் ஒத்துக்கொள்வதில்லை; வேறு காரணங்களை அந்த நாடுகள் சொல்லிவிடுகின்றன.
Read in : English