Read in : English
நேர்த்தியானது, கம்பீரமானது, தற்போதும் நாகரிகமானது. பாரம்பரியமானது மட்டும் அல்ல. நடிகரும், அரசியல்வாதியுமான கமல் ஹாசனால், இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சமீபத்தில் தொடங்கப்பட்ட காதி பிராண்ட் ஆன்லைன் விற்பனைக்கான நோக்கம் இதுதான். நிச்சயமாக, கேஎச் ஹவுஸ் ஆஃப் கதர் என்ற இந்திய ஆடை முயற்சியானது, ஒரு மெல்லிய துணிக்கான நாகரிகத்தை உயர்த்துகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, நேர்த்தியாக வெட்டப்பட்ட, பிரகாசமான வண்ணங்களில் இறுக்கமாகத் தைக்கப்பட்ட ஆடைகளுடன் மாடல்கள் இருக்கின்றனர். இங்கு பாரம்பரியம் மேலே துருத்திக் கொண்டு தெரிவதில்லை.
காதி அல்லது கதர் என்பது அண்ணல் காந்தியடிகளின் ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான சத்தியாக்கிரகப் போராட்டத்தின் ஓர் அங்கம். ஒவ்வொரு வீட்டிலும் பருத்தி நூலை உற்பத்தி செய்து, அதை துணியாக நெசவு செய்து, மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே காந்தியின் நோக்கம். அந்நியத் துணிகளை பகிஷ்கரிப்பதே அவரது விருப்பமாக இருந்தது. அது வெறுமனே பொருளாதார நடவடிக்கையின் ஒரு பகுதியாக மட்டும் இல்லாமல், ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையாகவும் இருந்தது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில், சுதந்திரம் மற்றும் தன்னம்பிக்கையின் சின்னமான காதி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது சில காரணங்களால் தவிர்க்கப்பட்டது. நவீனமயமாதல், தொழில்மயமாதல் மற்றும் புதிய இந்தியாவை தற்கால உற்பத்தி மற்றும் நுகர்வு கலாச்சாரத்தை நோக்கிச் செலுத்துதல் ஆகியவையே இதற்குக் காரணம் என்று பலர் கூறுகின்றனர்.
இருப்பினும், பல தசாப்தங்களாக, காதியானது தனிப்பட்ட சிறிய வீட்டுத் தறியாளர்கள் மற்றும் நெசவாளர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை. ஆனால் பெரிய அளவிலான துணி உற்பத்தியாளர்கள் பெருமளவில் பாலியஸ்டர் கலந்த ஆடைகளையே உற்பத்தி செய்கிறார்கள். நாட்டில் பயன்படுத்தப்படாத சர்க்காக்கள் மற்றும் சிறிய தறிகள் ஏராளமாக இருக்கலாம். ஆனால் அவை எப்போதும் சுயராஜ்ய துணிக்கான நோக்கத்தை உயர்த்திப் பிடிப்பதில்லை.
2021ஆம் ஆண்டு டிசம்பரில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 2016ஆம் ஆண்டு முதல் காதியின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியைக் கேட்டார், அதற்கு காதி உற்பத்தி அதிகரித்து வருவதாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் பதிலளித்தார். கொரோனா தொற்று பாதிப்புக்கு முன், 2019-20ஆம் ஆண்டில் நாட்டில், ரூ.4,211.26 கோடி மதிப்புள்ள காதி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் நாராயண் ரானே பேசியதில் பாலிவஸ்திரமும் அடங்கும். இது 67 சதவீத பாலியஸ்டர் நூல், மீதமுள்ளது பருத்தி (இது இன்னும் சிறப்பு காதி தள்ளுபடியின் பலனைத் தருகிறது). கோவிட்-19 காதியின் உற்பத்தியைக் குறைத்தது என்பது சிறிய வீட்டுத் தறி மற்றும் சமூகம் சார்ந்த உற்பத்தியாளர்களிடமிருந்து தொழில் பெரு நிறுவனங்களுக்குக் கைமாறியதன் வெளிப்படையான சாட்சியமாகும். அதனால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அதிகாரப்பூர்வமாக, காதி துறையில் 4.97 லட்சம் கைவினைஞர்கள் இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது, இதில் முக்கியமாக பெரிய அல்லது சிறிய நெசவாளர்கள் உள்ளனர்.
காதியுடனான சுதந்திரத்தின் தொடர்பை மறந்து நீண்டகாலமாகிவிட்டது. கமலின் கேஎச் ஹவுஸ் ஆஃப் கதர் முயற்சி கருத்துருவாக்கம் செய்ய முயற்சிக்கிறது.
காதியுடனான சுதந்திரத்தின் தொடர்பை மறந்து நீண்டகாலமாகிவிட்டது. கமலின் KH ஹவுஸ் ஆஃப் கதர் முயற்சி (https://khhk.in/pages/brand-story) காதியைப் புதிதாகக் கருத்துருவாக்கம் செய்ய முயற்சிக்கிறது.
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) KVIO வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தைத் கொண்டு www.ekhadiindia.com என்ற இணையதளத்தில் காதிப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து வருவதாக மத்திய அமைச்சர் ரானே மாநிலங்களவையில் தெரிவித்தார். உயர்தர பனாரஸ் பட்டுப்புடவை ரூ.76,499.15க்கு விற்கப்படுகிறது. இதற்கு மாறாக, அமிர்தா ராம் வடிவமைத்துள்ள கமல் ஹாசனின் ‘ஃப்ரூட் டோவ்’ நிறத்திலான பேன்ட், ஜாக்கெட் ரூ.8,000க்கு கிடைக்கிறது..
இந்திய சுதந்திரத்தின் துணியான காதி, உயர் நாகரிகமாக, அதன் பாரம்பரிய அடையாளத்தை விரும்புவோரை ஈர்க்காது. இருப்பினும் அது பல ஆண்டுகளாக மங்கிப் போய்விட்டது.
இப்போது விற்கப்படும் துணியை காதி என்று அழைப்பது ஏமாற்றுவதற்கு சமம். உண்மையில், இன்று இந்தியாவில் சுத்தமான காதியை எளிதில் வாங்க முடியாது.
“இப்போது விற்கப்படும் துணியை காதி என்று அழைப்பது ஏமாற்றுவதற்கு சமம். உண்மையில், இன்று இந்தியாவில் சுத்தமான காதியை எளிதில் வாங்க முடியாது. சேவா கிராமத்தில் உள்ளவர்களிடம் சில பாரம்பரிய காதி ஆடைகளை தருமாறு நான் கேட்க வேண்டியிருந்தது,” என்கிறார் சென்னை காந்தி அமைதி அறக்கட்டளையின் செயலாளரான டாக்டர் எஸ். குழந்தைசாமி (https://gandhipeace.foundation/). ஏகாதிபத்திய எதிர்ப்பின் ஒரு வடிவமாக, நூல் நூற்பு மற்றும் நெசவு ஆகியவற்றில் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் ஈடுபடுத்துவதாகவே கதர் தத்துவம் எப்போதும் இருந்து வருகிறது.
“சர்க்காவைப் பயன்படுத்தி பருத்தியிலிருந்து நூல் நூற்று, நேர்த்தியான, மென்மையான மற்றும் காலநிலைக்கு ஏற்ற துணியை நெசவு செய்வதற்கான பொருட்களை உருவாக்கும் மிக அடிப்படையான திறன் இப்போது கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது வருத்தமளிக்கிறது,” என்கிறார் காந்தி அமைதி அறக்கட்டளையின் டாக்டர் குழந்தைசாமி. இதன் அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் உள்ள அம்புஜம்மாள் சாலையில் சுதந்திர காலச் சூழலுடன், சென்னையில் டி.டி.கே. சாலையில் உள்ள KH ஹவுஸ் ஆஃப் கதரின் அருகில் உள்ளது. நாடு முழுவதும் கதர்த்துணியை பெருமளவில் உற்பத்தி செய்வதற்காக, காந்தி காலத்திய சர்க்காவின் மேம்பட்ட பதிப்பான அம்பர் சர்க்காவை பரவலாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். இது உள்நாட்டு பருத்தி சாகுபடிக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும். அம்பர் சர்க்கா குறித்து மத்திய அரசு உருவாக்கிய இந்தப் படம், அதன் வேர்கள் மற்றும் பலத்தை அறிந்து கொள்ள உதவுகிறது. https://www.youtube.com/watch?v=fSs0_i3BFho.
KH House of Khaddar’s இணையதளத்தில், கமல் ஹாசன் ஒரு மூத்த பாரம்பரிய நெசவாளருடன் காணப்படுகிறார், மேலும் பிராண்ட் ஸ்டோரி பிரிவு, காதி பிராண்டின் நம்பகத்தன்மையை இவ்வாறு விளக்குகிறது: “நாங்கள் நெசவாளர்கள் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கைவினை சமூகங்களுடன் நேரடியாக வேலை செய்வோம். மேற்கத்திய வடிவங்களை இந்திய நுட்பங்களுடன் கலப்பதுதான் எங்களை வேறுபடுத்துகிறது.“
காதியை உயர் நாகரிகமாக்கும் இந்த போக்கு, வெகுஜன வேலைவாய்ப்புக்கான புதிய முன்னுதாரணத்தை முன்வைக்கிறதா?
சுதந்திரம் நெருங்கிவிட்டதாகத் தோன்றியதால், இந்தியர்கள் காதியை மட்டுமே ஆதரித்தால், அனைவரும் தங்கள் அனைத்துத் தேவைகளுக்கும் போதுமான அளவு காதியை உருவாக்கி, பெருமளவிலான வேலைவாய்ப்பையும், தன்னம்பிக்கையையும் உருவாக்க முடியும் என்பதில் காந்தி மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். (“மகாத்மா”, டி.ஜி. டெண்டுல்கர், தொகுதி 8, பக்கங்கள் 177-78).
காந்தியை ஒரு சின்னமாக தீவிரமாகப் பயன்படுத்தும் நமது ஆட்சியாளர்களால் விரும்பப்படும் தீவிர வளர்ச்சி பொருளாதார மாதிரிகளுடன் இந்தப் பார்வை எவ்வாறு பொருந்துகிறது? நிச்சயமாக, KH ஹவுஸ் ஆஃப் கதர் இந்த மறுபரிசீலனையைத் தூண்டும்: KVIC காதி பந்தர்கள் மற்றும் பிற விற்பனை நிலையங்கள் – மில் துணியுடன் ஒப்பிடும்போது மிகவும் விலை உயர்ந்தவை – உண்மையான கையால் நெய்யப்பட்ட பொதுமக்களுக்கான துணிக்கடைகளாக மாற்றப்பட முடியுமா? இதில் கிராமப் பொருளாதாரம் பெருமளவில் பங்கேற்று பலன்களைப் பெற முடியுமா? பருத்தியை அதிக அளவில் பயிரிட்டு, சுதந்திர இந்தியாவில் காந்தி கற்பனை செய்ததைப் போல கிட்டத்தட்ட அனைவராலும் நூல் நூற்கப்பட்டால், உண்மையான காதி அனைவருக்கும் கட்டுப்படியாகக்கூடியதாக மாறும். அப்போது, சிறு உற்பத்தியாளர்களுக்கு வெகுமதி அளிக்கவும், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பளிக்கவும் முடியும்.
ஒரு மாற்றுப் பார்வையில், இது போன்ற காதி பிராண்ட் ஃபேஷன் கடைகள் வெகுஜன சந்தை வடிவமைப்புகளை உருவாக்கி, சிறிய, கிராமப்புற நூற்பாலைகள் மற்றும் நெசவாளர்கள் தங்கள் வளத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை வழங்க முடியுமா?
Read in : English