Read in : English
ஒரு காலத்தில் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளான தமிழ்நாட்டு மஞ்சப்பை இப்போது மீண்டும் பெருங்கவனம் பெறுகிறது. உபயம்: முதல்வர் மு.க. ஸ்டாலின். மஞ்சப்பையின் மீள்வருகைக்கு, மீண்டும் ‘மஞ்சப்பை’ என்று பெயரிட்ட திட்டத்தின்கீழ் சமீபத்தில் பச்சைக்கொடி காட்டி வரவேற்று உள்ளார். நடப்புகாலத்துச் சுற்றுச்சூழலியலின் முக்கிய அம்சமாகவும், நெகிழிக்கு (பிளாஸ்டிக்) மரபுவழி மாற்றாகவும் திமுக தலைவர் மஞ்சப்பையைப் பார்க்கிறார்.
தாராளமயமாக்கல் காலக்கட்டத்திற்கு முன்பு அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் பரவிக் கிடந்தது இந்த மஞ்சப்பை. அப்போதெல்லாம் கடைகளில் மஞ்சள் சாயம் அடித்த துணிப்பைகள் தருவார்கள். கண்ணுக்குப் புலனாகும் நடமாடும் விளம்பரமாக, மஞ்சப்பைகளில் சம்பந்தப்பட்ட கடைகளின் வணிகச்சேதிகள் வெளிச்சமாக இடம்பெறும். ஆனால் காலம் செல்லச் செல்ல மஞ்சப்பை அழுக்காகி, மங்கி, பேணிப் பாதுகாக்கத் தவறியதால் கசங்கிப் போய் வழக்கொழிந்து போனது. ஒருகட்டத்தில் அவை கஞ்சத்தனம், செல்வ வளமின்மை, பட்டிக்காட்டுத்தனம் ஆகியவற்றின் குறியீடாகவும் மாறியது. பளபளப்பான, சல்லிசான நெகிழிப் பைகள், சணல் பைகள் ஆகியன வந்து மஞ்சப்பையின் மரணத்திற்கு மணியடித்தன.
”மீண்டும் மஞ்சப்பை” திட்டம் பசுமைக் கலாச்சாரத்தின் விரும்பத்தக்கப் பொருட்களாக மஞ்சப்பைகளை மீட்டெடுக்க விழைகிறது. இதன்மூலம் அதன் ஆதரவாளர்களுக்குச் சுற்றுச்சூழலியல் பெருமையைப் பெற்றுத்தருகிறது. அக்கறை கொண்ட குடிமக்கள் இனி ஒருபோதும் வீட்டைவிட்டு மஞ்சப்பை இல்லாமல் வெளியே போகப்போவதில்லை. மஞ்சப்பையின் வடிவத்தை அழகியல் மற்றும் பயன்பாட்டுக் கோணங்களில் நடப்புக்காலத்திற்கு ஏற்றவாறு மீளுருவாக்கம் செய்ய வேண்டும். வடிவப் புதுமை ஆட்சிசெய்யும் இன்றைய யுகத்தில் நிறைய போட்டியை உருவாக்கும் இது.
மங்களகரமான ஆரம்பங்களின் குறியீடாக நிற்கும் அசல் மஞ்சப்பையின் பழமை மிகவும் சுவாரசியமானது. 2014-ஆம் ஆண்டில் மதுரையில் உருவான தி எல்லோ பேக்கின் சகநிறுவனர் கிருஷ்ணன் சுப்ரமணியன் சொன்னது இது: இயற்கையான மஞ்சளில் பைக்குச் சாயமடிக்கும் தத்துவம்தான் வழிபாட்டுக்குரிய இந்தத் துணிப்பைகளின் ஆதிமூலம். ஆனாலும் வணிகமயமான உற்பத்தியில் பசுமைக் கொள்கைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத வகையில் இந்தப் பைகளுக்குச் செயற்கைச் சாயம் பூசப்படுகிறது. திருமண வேட்டி போன்ற புது துணிகளுக்கு நல்லதிர்ஷ்டத்தின் குறியீடாக மஞ்சள்சாயம் பூசப்படுவது ஒரு சடங்காக இருக்கிறது.
மறுபயன்பாட்டுப் பைகளை நெகிழிப் பைகளுக்கு மாற்றாகக் கொண்டுவரலாம் என்ற சமீபத்திய பேச்சுக்கள் பல சமயங்களில் தேறாது என்கிறார் சுப்ரமணியன். மறுபயன்பாட்டுப் பைகள் சூரத்திலிருந்து வருவிக்கப்படும் விலைகுறைந்த செயற்கை நார்களால் தயாரிக்கப்படுவன; மறுபயன்பாடு, சுற்றுச்சூழலில் தாக்குப்பிடிக்கும் தன்மை, இறுதியாக நீக்குதல் ஆகிய தரவிதிகளுக்கு பொருந்தும் பருத்தித்துணியால் அவை உற்பத்தி செய்யப்படுவதில்லை. பருத்தி உற்பத்தி குறைந்து போனதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுவிட்டது என்கிறார் அவர்.
செயற்கைத்துணிப் பைகளின் வரத்தைத் தடுத்து நிறுத்துவதுதான் தமிழ்நாடு உருப்படுவதற்கான ஒரேவழி என்பது தெளிவாகிறது. பைகளின் உற்பத்தியில் இயற்கைக்கு மாறான எந்த நாரிழையையும், குறிப்பாக செயற்கை நார்களை, தடை செய்வது நல்லது.
தற்போதைய சூழலில் மஞ்சப்பையை வடிவமைத்தல்
டிசம்பர் 23 அன்று தமிழக அரசு தொடங்கிய ‘மீண்டும் மஞ்சப்பை’ பரப்புரையில், செய்தி ஏடுகளின் முதல்பக்க விளம்பரம் ஸ்டாலின் பலருடன் சேர்ந்து மஞ்சப்பை ஏந்தியபடி வீரநடை போடுவதுபோலக் காட்டியது. எல்லோரும் ‘மரபான’ மஞ்சப்பைப் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த விளம்பரத்தில்.
மஞ்சப்பையின் வடிவத்தை அழகியல் மற்றும் பயன்பாட்டுக் கோணங்களில் நடப்புக்காலத்திற்கு ஏற்றவாறு மீளுருவாக்கம் செய்ய வேண்டும். வடிவப் புதுமை ஆட்சிசெய்யும் இன்றைய யுகத்தில் நிறைய போட்டியை உருவாக்கும் இது.
வினோதமாகவும், செய்தி சொல்வதில் வேர்கொண்டும் இருக்கும் மஞ்சப்பையின் வடிவம் பயன்பாட்டோடு ஒன்றிணையாமல் இருந்த காலக்கட்டத்தை ஞாபகப்படுத்துகிறது. நீண்ட, பலமான கைப்பிடிகள் நன்றாக உதவக்கூடியவை. ஸ்வீடன் கோதென்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோகன் ஹாக்பெர்க் “ஏஜென்சிங் பழக்கங்கள்: கடைப்பைகள், நுகர்வோர் சந்தைகள், கலாச்சாரம் ஆகியவற்றின் சரித்திர ஆய்வு” என்னும் தலைப்பிலான தனது கட்டுரையில் இப்படிச் சொல்கிறார்: “பலமான காகிதத்தில் உருவாக்கப்பட்ட பைகள் உட்பட எல்லாப் பைகளின் சுமக்கும் திறனையும், வலிமையையும் மேம்படுத்த இந்த அனுசரணைகள் 1960-களிலே மையக்கவனம் பெற்றன.”
மதுரையிலும், தெற்காசியாவிலும் எங்கோ ஓர் இடத்திலும் தயாரிக்கப்பட்ட துணிப்பைகள் இன்று ஐரோப்பாவில் காணப்படுகின்றன. நீண்ட பிடிகள் கொண்டதால் கைகளால் அந்தப் பைகளைச் சுமக்கும் அவசியம் இல்லை.
தமிழ்நாடு சுற்றுப்புறச்சூழல் துறை முதுகில் சுமக்கும் மஞ்சள் பைகளுக்கு நவீனமான, இளமையான வடிவத்தைக் கொடுத்திருக்கிறது. பைத்திறப்புக் கம்பிகள் இணையயுகத் தலைமுறையின் வடிவச் சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகக் கூடியவை. இவை ட்விட்டரில், பகிரப்பட்டுள்ளன.
செயற்கைத்துணிப் பைகளின் வரத்தைத் தடுத்து நிறுத்துவதுதான் தமிழ்நாடு உருப்படுவதற்கான ஒரேவழி என்பது தெளிவாகிறது. பைகளின் உற்பத்தியில் இயற்கைக்கு மாறான எந்த நாரிழையையும், குறிப்பாக செயற்கை நார்களை, தடை செய்வது நல்லது
.
பல்வேறு வலிமைகள் கொண்ட பொருட்களையும் வடிவங்களையும் ஒன்றிணைத்துக் கனமானாலும் தூக்கக்கூடிய வகையில் இன்னும் நிறைய பைகளைத் தயாரிக்கலாம். டி- சர்ட்டுகள் போன்ற நல்ல பிளெயினான துணிகள் கொண்ட பளபளப்பான பைகள், கரடுமுரடான நுகர்வோர் சேதிகளைத் தாண்டி, சமூகத் தகவல் தொடர்புக்கான அசையும் திரைச்சீலையாகச் செயல்படும்.
மஞ்சப்பையைத் தாண்டி
மஞ்சப்பையை ஒரு வட்டப் பொருளாதாரத்தை நோக்கி எடுத்துவைக்கும் ஓர் அடியாகப் பார்க்கும் சில சுற்றுச்சூழல்வாதிகள் தாக்குப்பிடிக்கும் தன்மையில் நிறைய விஷயங்களைப் பார்க்கிறார்கள். மஞ்சப்பையின் பிரயோஜனமான ஆயுள் முடிந்தபின்பு, அதை இன்னொரு பொருளாக மறுசுழற்சி செய்யவேண்டும் என்று சொல்கிறார் ஜே. குகானந்தம். காந்தி, மற்றும் சர்வோதய இயக்கத்தால் எழுச்சிப் பெற்ற தொழில்முனைவோர் அவர். ஜியோ கேர் பபுராடக்ட்ஸ் என்பது சென்னையில் இயங்கும் அவரது நிறுவனம். அது பாழாகிப்போன காகிதம், மரக்கட்டை ஆகிய கழிவுப்பொருட்களைப் புதிய பொருட்களாக மாற்றுகிறது. அவருக்குப் பெரிய நிறுவனங்கள், அரசுகள் என்று நிறைய வாடிக்கையாளர்கள் உண்டு.
“சணல் கழிவு, மற்றும் பண்ணைக் கழிவுகளைப் புதிய பொருட்களாக மாற்ற முடியும்,” என்கிறார் அவர். அரசு உதவியுடன் பல்கலைக்கழகங்கள் தொழில் முனைவோர்களுக்காக திறந்தநிலை மூல மறுசுழற்சித் தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்க வேண்டும். அவை கட்டணமில்லாமல் பயன்பாட்டுக்கு வர வேண்டும். அப்போது சுயஉதவிக் குழுக்களுக்கு அது ஓர் ஊக்கமருந்தாகச் செயல்படும். ஜியோ கேர் தனது பொருளாதாரப் பரப்புரையை 2022-இல் விரிவுபடுத்தும் என்று சொல்கிறார் குகானந்தம்.
மறுபயன்பாட்டுப் பைகளைத் தயாரிப்பதில் நடந்திருக்கும் ஒரு நல்ல விஷயம் பைகள் உற்பத்திக்கென்று ஆலைகள் துணிகளைத் தயாரிக்கின்றன என்பதுதான். நெகிழிகள் மீது தடை விதிக்கப்படும்வரை இது நிகழவே இல்லை. இன்று கிடைக்கும் சல்லிசான பருத்தித் துணியில் பைகள் தயாரித்தால் சின்ன நகரங்களில் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும் என்கிறார் சுப்ரமணியன். அவரது தி எல்லோ பேக் இன்ஸ்டாகிராமிலும் (https://www.instagram.com/theyellowbag_org) இணையத்திலும் இருக்கிறது https://theyellowbag.org/.
தி எல்லோ பேக் கட்டமைப்பில் இப்போது 250 பெண்கள் இருக்கிறார்கள். பைகளுக்கான தேவை உயரும்போது அவர்களின் எதிர்காலம் இன்னும் பிரகாசமாக இருக்கும். படிப்படியான விரிவாக்கத்தின்போது, அந்த நிறுவனம் ஒவ்வொன்றாக வாங்கிய இயந்திரங்கள் மொத்தம் 12. அவை மதுரையில் இயங்கும் அதன் மைய வளாகத்தில் இருக்கின்றன. மற்றவை வீட்டில் உறுப்பினர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாடு சுற்றுப்புறச்சூழல் துறை முதுகில் சுமக்கும் மஞ்சள் பைகளுக்கு நவீனமான, இளமையான வடிவத்தைக் கொடுத்திருக்கிறது. பல்வேறு வலிமைகள் கொண்ட பொருட்களையும் வடிவங்களையும் ஒன்றிணைத்துக் கனமானாலும் தூக்கக்கூடிய வகையில் இன்னும் நிறைய பைகளைத் தயாரிக்கலாம்
வெறும் மஞ்சள் நிறத்துக்கான ஆணை என்பதைவிட மஞ்சப்பை ஒரு தத்துவமாக இருக்கவேண்டும் என்கிறார் அவர். வெளுக்கப்படாத பருத்திதான் ஆகச்சிறந்த வஸ்து; அதில் மேற்கொண்டு விலையேதும் இல்லை. தூக்கி எறியும்போது சுற்றுப்புறச்சூழல் மாசை ஏற்படுத்தும், தாக்குப்பிடிக்காத சாயங்களைப் பயன்படுத்துவதை அது தவிர்த்துவிடுகிறது.
மஞ்சப்பையின் முந்தைய அவதாரத்தில், அதைப் பலர் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள். தேய்மான அறிகுறிகள் தென்படும்போது அல்லது பிடி விட்டுப் போகும்போது, வீட்டிலே அவற்றைச் சரிசெய்தார்கள். இன்றுகூட, நன்றாகத் தயாரிக்கப்பட்ட பைகள் நன்றாகவே உழைக்கின்றன; இதனால் தரமான பொருளின், தரமான தயாரிப்பின் தேவை உணரப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் முன்இருக்கும் பெரும்சவால் போதுமான பைகளை சந்தைக்குள் கொண்டுவருவது. அவர்க்கு முன் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியைத் தவிர்க்க 2018-இல் ஒரு திட்டத்தைத் தொடங்கினார். சூர்யா, ஜோதிகா போன்ற நடிகர்களை ‘பிராண்ட் அம்பாசடர்களாக’ நியமித்து ஓர் இணையத்தளத்தை உருவாக்கி அரசுத்துறைகளில் காகிதக்கோப்புகளை வாங்குவதற்கு ஆணையிட்டு நெகிழிக்கு எதிரான போரைத் தொடங்கினார். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் சென்னையில் பூக்கடைகள் மட்டத்திலே தோற்றுப்போயின. வாழையிலைத் துண்டுகளைப் பயன்படுத்தவில்லை.
நெகிழிப்பைகளைப் பயன்படுத்தினால் அபராதம் என்ற விதியைப் பரவலாக நடைமுறைப்படுத்த தவறிவிட்டார் அப்போதைய சுற்றுப்புறச்சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ்.புத்தாயிரம் ஆண்டுக்காக வடிவமைக்கப்பட்ட மஞ்சப்பையைத் தமிழ்நாடு கொண்டுவர முடியும், நல்ல வடிவழகும், நியாயவிலையும், பரவலாக கிடைக்கும் நிலையும் இருந்தால்.
மஞ்சப்பைகளின் சில்லறை விற்பனைக்காக சமூக ஊடகங்கள், உலகச்சந்தைக்காக இல்லாவிட்டாலும், தேசிய சந்தைக்கான கதவுகளைத் திறந்துள்ளது. மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார். அப்போதைய திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வெற்றிபெற்றன. இப்போது இந்தப் புதிய மஞ்சப்பையினால் மகளிர் சுய உதவிக்குழுக்களின் புதிய யுகம் ஒன்று ஆரம்பமாகலாம். அது இந்த அரசுக்குக் கிடைக்கும் வெகுமதி தானே?
Read in : English