Read in : English

“அறிவிருக்கா?” சமந்தாவிடமிருந்து இப்படி ஒரு பதிலை அந்த நிருபர் எதிர்பார்த்திருக்க மாட்டார். செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் திருப்பதி கோவிலுக்கு வந்திருந்த சமந்தாவிடம் நாக சைதன்யாவுடனான அவருடைய மணமுறிவு வதந்திகள் உண்மைதானா என கேட்ட நிருபருக்கு கிடைத்த காட்டமான பதில்தான் மேலே நாம் படித்தது.

ஆனால் சமந்தாவை அறிந்த செய்தியாளர்கள் அவர் மிகவும் பணிவானவர், நிருபர்களின் கேள்விகளுக்கு புன்முறுவலுடன் பதிலளிக்க கூடியவர் என்றுதான் கூறுகிறார்கள்.

நிறுவனங்களை வைத்து செய்தியாளர்களை எடைபோடும் பழக்கம் சமந்தாவுக்கு கிடையாது என்றும் எல்லாரையும் ஒன்று போல நடத்துபவர் என்றுதான் அவரை பற்றி செய்தியாளர்களுடைய எண்ணம்.

அவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது அனைத்து செய்தியாளர்களுடனும் படமெடுத்துக்கொண்டதை நினைவு கூறும் செய்தியாளர்களும் உண்டு.

பழகுவதற்கு இனிமையானவர் என்று பெயரெடுத்த சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை கடந்த சில மாதங்களாக உவப்பாக இல்லை என்பதே நிதர்சனம்.

நாக சைதன்யாவுடனான நான்கு வருட திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிந்ததும், ஜீவனாம்சமாக RS 200 கோடி அவருக்கு சைதன்யாவின் குடும்பம் தர முன்வந்ததாகவும் ஆனால் சமந்தா அதை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. இதில் எவ்வளவு உண்மை என்பது தெரியாவிட்டாலும் சமந்தாவை அறிந்தவர்கள் அவர் மறுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறுகிறார்கள்.

சமந்தா கேமராவுக்கு முன்னால் ஒரு திறமையான கலைஞர்.(Source: Twitter.com)

யார் இந்த சமந்தா?
எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் வெள்ளித்திரைக்கு வந்து சாதித்தவர்களில் சமந்தாவும் ஒருவர்.
சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர். 1987-இல் பிறந்தார். படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்தவர். தோற்றத்தில் கவர்ச்சி, அழகு, நல்ல நிறம் ஒருங்கே அமைந்ததால், இவருக்கு சமூகத்தில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் வரவேற்பு பெண்ணாக பூங்கொத்து கொடுத்து உபசரித்து தனது பயணத்தை தொடங்கினார். இவருக்கு அது நல்ல விதமாக கை கொடுத்தது. கூடவே மாடலிங் துறையில் கவனம் செல்ல, மெல்ல மெல்ல முன்னேற தொடங்கினர்.

சமந்தாவின் சினிமா பயணம்
மாடலிங் போட்டோக்களை பார்த்து ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தனது முதல் படமான மாஸ்கோவின் காவேரியில் அறிமுகப்படுத்தினார். படம் திரைக்கு வராமல் பல ஆண்டுகள் கிடப்பில் கிடந்தது. அடுத்து பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக பாணா காத்தாடி படத்தில் நடித்தார். படம் பெரியளவில் பேசப்பட்டது.

தொடர்ந்து சமந்தா சினிமாவை சமத்தாக பிடித்து கொண்டார். முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய், விஷால், விஜய் சேதுபதி, சித்தார்த் என பல நடிகர்களுடன் கைக் கோர்த்து வெற்றி கொடி நாட்டினார். வித விதமான கதாபாத்திரங்கள் இவரை தேடி வந்தது. பணமும், புகழும் குவியத் தொடங்கின. அனைத்து நடிகர்களுடனும் நடிகைகளுடனும் நட்பு வட்டம் பெருகியது. படங்களும் பெரிய வெற்றியைப் பெற்றதால், சென்டிமெண்ட் நிறைந்த தமிழ் சினிமாவில் ராசியான நடிகையாக வலம் வந்தார் சமந்தா.

தெலுங்கில் சிகரம் தொட்ட சமந்தா
இயக்குநர் கெளதம் வாசுதேவ்மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயாவின் தெலுங்கு பதிப்பில் சமந்தா நடித்தார்.

தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கோலோச்ச தொடங்கினர். கமர்ஷியல் அம்சங்கள் அதிகம் நிறைந்த தெலுங்கு சினிமா அவரை வாரி அணைத்துக்கொண்டது

இதனால் இளைஞர்களின் மனதில் குடி புகுந்தார். ‘சாம்’ என்று விதவிதமாக பச்சை குத்திக்கொள்ளும் வெறித்தனமான தெலுங்கு ரசிகர்கள் சமந்தாவுக்கு உண்டு.

திறமையான நடிகை சமந்தா
எந்த மாதிரியான கேரக்டர்கள் வந்தாலும், அதை சிறப்பாக அதிக டேக் எடுக்காமல் நடிக்கும் வல்லமை படைத்தவர் சமந்தா. அது போல் மற்ற நடிகைகள் போல பந்தா இல்லாமல் எளிமையாக படப்பிடிப்பு குழுவினருடன் பழக கூடியவர். திட்டமிட்ட நேரத்தை கடந்து படப்பிடிப்பு நீடித்தால், அதற்கு மறுப்பு சொல்லாமல் காட்சிகளை நடித்துக் கொடுக்கும் பழக்கம் உடையவர்.

இவர் நடிப்புக்கு ஒரு உதாரணமாக, சமீபத்தில் வெளியான தி பேமிலி மேன் வெப் சீரிஸில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கம்பீரத்துடன் நடித்திருப்பார். இந்த படம் வெளியான போது கடுமையான விமர்சனமும், எதிர்ப்புகளும் கிளம்பின. இதனால் தனக்கு எதாவது ஆபத்து நேரிடும் என்று பயந்து மூன்று நாள்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். அதே நேரத்தில் ஈழ மக்களின் துயரத்தை இந்தப் படத்தில் நடித்த போது, என்னால் உணர முடிந்தது என வெளிப்படையாக பேசினார்.

சமந்தாவின் காதல்
கோலிவுட்டில் பல கிசுகிசுக்கள் அவரை சுற்றி வந்தாலும், சமந்தா தன் வாழ்க்கை துணையை டோலிவுட் எனும் தெலுங்கு சினிமா உலகத்தில் தேர்ந்தெடுத்தார். சமந்தா இளம் வயதில் ஒரு சமயம் மிகவும் நோய்வாய்ப்பட்டு குணமான பின்பு, ஏழை மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையில் தொடங்கியதுதான் பிரதியூஷா எனும் அமைப்பு. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இயங்கும் தொண்டு நிறுவனம்.

இந்த தொண்டு செய்யும் இயல்புதான் நாக சைதன்யாவை இவர்பால் ஈர்த்ததாக கூறப்படுகிறது. நாக சைதன்யா சமந்தாவுடன் காதல் கொண்டார். 2017 ல் திருமணம் கிறிஸ்தவ மற்றும் ஹிந்து முறைப்படி கோவாவில் நிகழ்ந்தது. மற்ற நடிகைகள் போல் அல்லாமல் திருமணத்துக்கு பின்பு நாக சைதன்யாவின் அனுமதியுடன் சினிமாவில் நடித்து வந்தார்.
திருமணத்திற்கு பிறகு வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து, முக்கியமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில், நடிக்க ஆரம்பித்தார்.

2018 பிறகு வந்த யூ டர்ன், மஜிலி மற்றும் பேபி போன்ற படங்களில் நடித்தார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவி வேடத்தில் நடித்திருப்பார்.

நான்கு வருடங்களில் கசந்த திருமண வாழ்க்கை
ஆனால், அன்னியோன்னியமாக தொடங்கிய திருமண வாழ்க்கை சமந்தாவுக்கு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. நாகா சைதன்யா உடனான நெருக்கம் குறைவது படிப்படியாக தெரிந்தது. இந்த வருட தொடக்கத்தில் இருந்தே இருவரும் பிரிய போவதாக வதந்திகள் வர தொடங்கின.

ஜூலை மாதத்தில் தனது சமூக வலை பக்கங்களில், சைதன்யாவின் குடும்ப பெயரான ‘அக்கினேனி’ என்பதை நீக்கியது, தம்பதிகள் மத்தியில் எல்லாம் சரியாக இல்லை என்பதை காண்பித்தது.

அக்கினேனி குடும்ப விழாக்களில் காணப்படுவதை விட தனது நண்பர்கள் மத்தியில் அதிகம் தென்பட தொடங்கினார். கடைசியாக அக்டோபர் 2 அன்று, தாங்கள் பிரிய போவதாக நாகா சைதன்யாவும் சமந்தாவும் சமூக ஊடகங்களில் அறிவித்தனர்.

இரசிகர்கள் மத்தியில் இந்த முடிவு இரண்டு விதமாக இருந்தது. சமந்தாவின் மனது புண்படும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவுகள் இருந்தன என்பதை அவரது அக்டோபர் 8 ட்விட்டர் பதிவு தெரிவிக்கிறது.

மணமுறிவு என்பது மிக வேதனையான ஒன்று எனவும் அதன் வலி குறையும் முன்பே தன்னை பற்றிய அவதூறுகளுக்கு குறைவே இல்லாமல் இருப்பதை சமந்தா சுட்டிக்காட்டி இருந்தார். ஆனால், இதுவும் சரி எதுவும் சரி தன்னை உடைக்க முடியாது என்று அந்த பதிவை அவர் முடித்திருந்தார்.

தான் ஒரு புகழ் பெற்ற நடிகை என்று எந்த பந்தாவும் இல்லாமல் மிக இயல்பாக இருக்கும் பழகும் சமந்தாவின் திருமண வாழ்க்கை இப்படி சோகத்தில் முடிந்தது ஒரு மர்மமாகவே இருப்பதாக கோலிவுட்டில் அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

முன்னாள் நடிகை ஜமுனா பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival