Read in : English
செஸ் விளையாட்டில் இந்தியாவின் சிறந்த பரிசாக விஸ்வநாதன் ஆனந்த் திகழ்கிறார். ஐந்து முறை உலக செஸ் அசாம்பியன் பட்டம் வென்று, கடந்த 30 ஆண்டுகளாக செஸ் விளையாட்டில் சாதனை புரிந்து வரும் விஸ்வநாதன் ஆனந்த, இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர். பல சாதனைகளுக்குஅப்பாலும் அவர் ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார். விஸ்வநாதன் ஆனந்தை விட வேறு எந்த விளையாட்டு வீரரும் உத்வேகத்தை ஏற்படுத்தும்முன்மாதிரியாக திகழவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.காரணம் அவர் 50 கிராண்ட் மாஸ்டர்களையும் 100 சர்வதேச விளையாட்டு வீரர்களையும்தாண்டி அவர் முன்னிலை வகிக்கிறார் என்பதுதான் கோடிட்டுக் காட்ட வேண்டிய விஷயம்.
செஸ் விளையாட்டில் ரஷ்யா, சீனா, அமெரிக்கா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு பிறகு இந்தியா 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ‘ஆனந்த் விளைவு’ ஜூனியர் லெவலில் 10 வயதுக்கும் குறைவானவர்களை உருவாக்கியுள்ளது. சிறுவர்களும் சிறுமிகளும் அடுத்த ஆனந்தாகவே ஆசைப்படுகிறார்கள். 12 வயதேயான ஆர்.பிரக்ஞானந்தா செஸ் விளையாட்டில் இரண்டாவது கிராண்ட் மாஸ்டராக செஸ் வரலாற்றில் உருவாகியுள்ளார்;வரலறுபடைத்துள்ளார்.
இந்திய செஸ் விளையாட்டு என்றாலே விஸ்வநாதன் ஆனந்த்தான் நினைவுக்கு வருவார். அதேபோல் இந்திய அளவில் செஸ் என்றாலே சென்னைதான்நினைவுக்கு வரும். சென்னை செஸ் விளையாட்டின் தலைமையகமாக விளங்குகின்றது என்றால் அது மிகையில்லை. தற்போது வெற்றி பெற்றுள்ளபிரக்ஞா, சென்னையில் இருந்து உருவான விளையாட்டு வீரர்தான். பிரக்ஞா அடுத்த உயரத்துக்கு போக வேண்டும் என அவரே திட்க்ஷ்டமிடுகிறார், அதுஉலக சேம்பியன் என்பதுதான் அவரது நோக்கம். பிரக்ஞாவின் இந்த பேச்சை அலட்சியம் செய்ய முடியாது என்கிறார் அவரின் பயிற்சியாளரான ஆர்.பிரமேஷ். ‘’ பிரக்ஞா இதே போல் தன் முழுத்திறனையும் ஒரே புள்ளில் குவித்து வந்தால் நிச்சயம் அவர் இன்னும் 10 வருடங்களில் உலக சேம்பியன் ஆவார்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.
ஆனந்தான் பிரக்ஞாவின் திறமையைக் கண்டுபிடித்தார் எனலாம். கடந்த வருடம் ஒரு பேட்டியில் ஆனந்த் கூறும்போது, ‘’பிரக்ஞா இந்தியாவிலேயேசிறந்த செஸ் விளையாட்டு வீரர். வருக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. அவர் திறன் மிகுந்தவர், சரியான பதையில் போய்க்கொண்டுள்ளார்’’ என்றுகுறிப்பிட்டார். எதிர்பாராதவகையில் ஆனந்த், இளம் வயது போட்டியாளரின் திறமையை கண்டுணர்ந்தார். ஆனந்த் பாரிஸ் நகரிலிருந்து டுவிட்டரில்கூறிய வாழ்த்து செய்தியில்,’’ பிரக்ஞா செஸ் கிளப்புக்கு உன்னை வரவேற்கிறேன். விரைவில் சென்னையில் உன்னை சந்திக்கிறேன் ’ என்றுகூறியுள்ளார்.
உக்ரைன் நட்டைச் சேர்ந்த கர்ஜாகின்ய், செஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டத்தை 12 வருடம், 7 மாதங்கள் இருக்கும்போது 2002ஆம் ஆண்டுபெற்றார். பிரக்ஞா இந்த வெற்றியைப்பெறும்போது 12 வருடம், 10 மாதங்கள், 13 நாட்கள் ஆனவராக இருக்கிறார். கடந்த ஆண்டு வெற்றி பெற்றஉஸ்பெகிஸ்தான் ஸ்நாட்டைச் சேர்ந்த நோடிபெக்வ், 13 வருடங்கள் ஒரு மாதம் மற்றும் 11 நாட்கள் வயதுடையவராக இருந்தார். பிரக்ஞாஇஇந்த்தாலியில்நடைபெற்ற போட்டியில் தனனி எதிர்த்து விளாஇயாடிய இவான் சாரிக்கை முதல் சுற்றில் ஒன்பதுக்கு 7.5 பாயிண்டுகள் எடுத்து வெற்றிபெற, இரண்டாம் சுற்றில் ஆட்டம் டை பிரேக்கர் முறையில் முடிந்ததால் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
பிரக்ஞா சந்தேகமேயில்லாமல் திறமைமிகுந்த ஆட்டக்காரர் தான், இருந்தாலும் தன் கடுமையான உழைப்பினால் செஸ் விளையாட்டில் தன்னைமெருகேற்றிக்கொண்டார். அவருடைய பயிற்சியாளர் ரமேஷ் இதுகுறித்து பேசும்போது, ‘’இந்த சாதனையை பெறுவதற்கு அவர் கடுமையானஉழைப்பை கொடுத்தார்’’ என்றார். மேலும்,’’அவருக்கு வெற்றியை நோக்கிய தேடல் இருந்துகொண்டே இருக்கும். தன் முயற்சியில் ஒருபோதும்பின்வாங்குவதில்லை. அவர் எப்போதும் ரொம்ப இயல்பாகவும் ஒருங்கிணைந்த மனநிலையுடனும் உள்ளார். இதுவே ஒரு செஸ் வீரருக்கு தேவையானஒன்று’’ என்கிறார் ரமேஷ் பெருமிதத்துடன்.
பயிற்சியாளர் ரமேஷ், பிரக்ஞாவுக்கு 4 வருடங்களுக்கு முன்பிருந்தே பயிற்சியை ஆரம்பித்தார். ஒரு நாளைக்கு 8 மணிநேரம் பயிற்சியளித்திருக்கிறார். பிரக்ஞாவின் அக்கா ஆர்.வைஷாலியும் சர்வதேச செஸ் விளையாட்டு வீராங்கனை. பிர்க்ஞாவின் பெற்ரோரான ரமேஷ் பாபுவும் நாகலஷ்மியும் செஸ்விளையாட்டை அறிமுகம் செய்து வைத்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தனர்.
பிரக்ஞா, ஆட்டத்தின் நடுவிலும் முடிவிலும் அனாயசமாக விளையாடுவார். ஆட்டத்தின் தொடக்கம்தான் கொஞ்சம் தடுமாறும் என்கிறார் ரமேஷ். இதனை ஒத்துக்கொள்லும் பிரக்ஞா, ஆட்டத்தின் தொடக்கத்தில் நன்றாக விளையாட வேண்டும். அதற்காக நான் கடுமையாக உழைக்க வேண்டும். அதே போல் நேர மேலாண்மையிலும் நான் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் சாம்பியன் பிரக்ஞா.
ஒரு சிறுவன், தான் திருத்திக்கொள்ள வேண்டிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறான் என்றால் அவன் உயரத்துக்கு செல்வான். கிராண்ட் மாஸ்டர்பட்டத்தை வென்றதால் இனி கொஞ்சம் சுதந்திரமாக விளையாடலாம். அவருடைய இந்த வெற்றி, ஐரோப்பா முழுவதும் அவரை அறியச் செய்துள்ளது. அடுத்த மாதம் ஸ்பெயினில் விளையாட ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் முக்கியமான விஷயம், தன் மேல் எழும் எதிர்பார்ப்புகளில் இருந்து பிரக்ஞா தன்னை காத்துக்கொள்ள வேண்டும். அவருடையசாதஹ்னைக்குப்பிறகு அவர் மேல் அதிக எதிர்பார்ப்புகள் உருவாகும். 18 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற ஆனந்த இதை உணர்ந்துள்ளதால்தான், பிரக்ஞாவின் திறமைகளை மேன்மைப்படுத்திக்கொள்ள வலியுறுத்துகிறார். ‘’பிரக்ஞா தனக்கென்று ஒரு பெயரை உருவாக்கிவிட்டதால்அவரிடம் அதிகம் எதிர்பார்ப்பார்கள். நல்லவேளையாக அவர் சிறுவயதில் இருப்பதால் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள தேவையான நேரம்அவருக்குள்ளது’’
Read in : English