ஆயுர்வேதத்தில் பக்திக்குப் பதில் பகுத்தறிவைக் கொண்டுவந்தவர் சரகர்
சரக சம்ஹிதை என்னும் ஆதிகால ஆயுர்வேதப் பனுவலின் ஆசிரியரும் அசாதாரணமான மருத்துவருமான சரகர், வட இந்தியாவில் கிமு 200-க்கும் கிபி 100-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஓங்கி வளர்ந்த குசான சாம்ராஜ்யத்தின் காலகட்டத்தில் வாழ்ந்ததாக நம்பப்படுபவர். ஆயுர்வேதத்தின் மூன்று அடிப்படைப் பனுவல்களில் ஒன்று சரக...