Read in : English

Share the Article

ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அஜித் நடித்த வலிமை படம் வெளியாகிவிட்டது. அஜித் மட்டுமே இவ்வளவு பெரியகூட்டத்தை ஈர்க்க முடியும் என்று குஷ்பு டிவிட்டரில் இந்தப் படம் குறித்துப் பதிவிட்டிருந்தார்.

புதன்கிழமை (பிப்ரவரி 24) மாலையில் தூத்துக்குடியில் உள்ள திரையரங்களில் பைக்குகளில் வந்த திரளான இளைஞர்கள் கூட்டம். அவர்கள் அஜித் படத்துக்கு டிக்கெட் வாங்க வந்தவர்கள். அடுத்த நாள் திரையரங்கம் நிரம்பி வழிந்தது. அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டன.

வலிமை மீம்ஸ்

திரைப்படம் சற்று தாமதமாகத் தொடங்கியது என்று திரையரங்கக் காவலர் கூறினார். இதுபோன்ற தாமதத்தின்போது கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தைச் சமாளிப்பது கடினம். அதாவது பகல் 2.35 மணிக்குத் தொடங்க வேண்டிய அந்தப் படம் 3 மணிக்குத் தொடங்கியது. திரைப்படம் தொடங்க ஆரம்பித்ததும் ரசிகர்களிடமிருந்து ஒரே ஆரவாரம். அப்புறம், இந்தப் படத்தின் நாயகியான, ரஜினியின் காலா படத்தில் நடித்து புகழ் பெற்ற ஹீமா குரோஷி வந்தபோதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள்.

அஜித் முதன் முறையாக திரையில் தனது முகத்தைக் காண்பித்தபோது அதைவிடப் பெரிய ஆரவாரம். தல என்று சொல்ல வேண்டாம் என்று அஜித் கேட்டுக் கொண்டதை அடுத்து யாரும் தல என்ற சொல்வதில் கவனமாக இருந்தனர்.

அஜித்துக்கு ஏன் இவ்வளவு கூட்டம் என்பதற்கான காரணத்தை குஷ்பு சொல்லவில்லை. ஆனால் தமிழ் திரைப்பட நடிகர்களில் மிகப் பெரிய இடம் அஜித்துக்கு உள்ளது.

ரஜினிக்கும் விஜய்க்கும் கவர்ச்சி இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. அவர்களிடம் இளைஞர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இருக்கிறது. ரஜினி இளமைக் காலத்தில் இருந்ததுபோலவே தற்போதும் அப்படியே ரசிகர்களை ஈர்க்கக்கூடியவராக இருக்கிறார். ஆனால் அஜித்?

வலிமை மீம்ஸ்

அஜித் நல்ல மனிதர். அதுபோதும் அவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்களை ஈர்க்க. அஜித் பிரபல திரைப்பட நட்சத்திரம். அவர் பணிவானவர். திரைப்படப் படிப்படிப்பு நடக்கும் இடத்தில் அங்கு இருக்கும் அனைவருக்கும், லைட்பாய் உள்பட, அவரே பிரியாணி சமைத்துத் தருவார். அவர்களுக்கு உதவிகள் செய்வார். தல என்ற பெயர் போட்டு அஜித் படத்துடன் சென்னை தெருக்களில் ஆட்டோவைப் பார்க்க முடியும்.

பைக்கில் வந்த அனைத்து இளை]ஞர்களுக்கும் வலிமை படம் எச்சரிக்கையையும் ஆலோசனையும் வழங்கியது. நல்லவனாய் இரு. பெற்றோர்களை அன்புடன் நேசி. உனது கடமையைச் செய் என்கிறது.

எம்ஜிஆர் பார்முலா மீண்டும் வேலை செய்கிறதா? திரைப்படத்தைப் போல நிஜ வாழ்க்கையிலும் நல்லவன் என்ற தோற்றம். எம்ஜிஆரைச் சுற்றி கட்டியமைக்கப்பட்ட பிம்பத்துக்கு, அவர் திமுகவில் இருந்தபோது அக்கட்சியினர் செய்த பிரச்சாரத்துக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.

ஆனால் அஜித் விஷயத்தில் பிம்பம் என்பது நிஜ தோற்றம்தான். அவரைப் பற்றி எந்தப் புகாரும் இல்லை. கிசுகிசு இல்லை. திருவான்மியூர் வீட்டில் அவருக்கு உதவியாக இருந்தவர்களுக்கு அபார்ட்மெண்ட் வாங்கித் தந்து இருக்கிறார்.

அஜித் நடித்த வலிமை படத்தின் முதல் காட்சி எதைச் சொல்கிறது. வேனுக்கு உள்ளிருந்து எழுவது போல, அதாவது ஜெயலலிதா தேர்தல் பிரச்சார வேன்களில் நின்று பிரச்சாரம் செய்வதுபோல உள்ளது. அஜித்தின் இந்தத் திரைப்படம் ஜெயலலிதா பிறந்த நாளில் வெளியாகியிருக்கிறது.

அமைப்பு நொறுங்கிவிடட்து என்று கூறுபவர்களைப் படத்தில் அஜித் விமர்சனம் செய்கிறார். உள்ளே இருந்தே அதைச் சீர்திருத்த வேண்டும் என்கிறார்.

எம்ஜிஆரின் திரைப்பட பிம்பம், விஜயகாந்த்திற்கு அரசியல் வாழ்க்கையை உருவாக்க உதவியது. இது மீண்டும் விரிவுபடுத்தப்படலாம். ரஜினி வேறுபக்கம் போய்விட்டார். தனது திரைப்படங்களைப் பிரபலமாக்குவதற்காக அரசியலுக்கு வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், அரசியலுக்கு வரவே போவதில்லை என்று இறுதியாகச் சொல்லி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும்போதும், அரசிடமிருந்து வரி விலக்கு போன்றவற்றை பெறுவதற்காக, மாநில அரசுக்கு ஆதரவாக ஏதாவது அறிக்கை விடுவதும் ரஜினி வழக்கம்.

வலிமையில் அஜித் பேசும் அரசியல், அந்தத் திரைப்பட வசூலை உறுதி செய்யக்கூடியது. அவ்வளவுதான். எப்படியும் அஜித் படத்தைப் பார்க்க நீண்ட நாட்களாகக் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு படம் எப்படி இருப்பினும் ஒரு விருந்துதான்.

வலிமை மீம்ஸ்

 

வலிமை மீம்ஸ்


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles