உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவை நிர்வாக அதிகாரங்கள்!
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் சுயாட்சியுடன் செயல்படுவதற்குத் தேவையான நிர்வாக அதிகாரங்களை வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் சுயாட்சியுடன் செயல்படுவதற்குத் தேவையான நிர்வாக அதிகாரங்களை வழங்க வேண்டும்.
இந்திய மருத்துவக் கல்வியும் மருத்துவப் பயிற்சியும் ஆதிகாலத்திலே தொடங்கிவிட்டன. ஆதிக்க இனங்களைச் சார்ந்த வைத்தியர்களும் மற்ற இனங்களைச் சார்ந்த பழங்குடி மருத்துவர்களும் நோய்களுக்கு வைத்தியம் பார்த்தார்கள். நவீன மருத்துவத் தொழில் பிரிட்டிஷ் இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டில் உருவெடுத்தது. அடிப்படையில் போரில் காயம்பட்ட வீர்ரகளுக்கு வைத்தியம் பார்க்க உதவி செய்வதற்காக, உடல்நல ஆரோக்கிய ஊழியர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சியளிக்கப்பட்டது. அந்தக் காலம் முதல் இன்றைய ‘நீட்’காலம் வரை, மருத்துவக் கல்வியில் பெரிதாக முன்னேற்றமில்லை. இவ்வளவுக்கும் நிறைய மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1957ஆம் ஆண்டு இரு பெரிய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் ஒரே தனிநபர் வருமானத்தைக் கொண்டிருந்தன. ஆனால் அதன் பின்னர், இரண்டு மாநிலங்களும் தங்கள் வளர்ச்சிப் பாதையில் முக்கிய வளர்ச்சிக் குறியீடுகளில் பல ஆண்டுகள் வேறுபட்டே இருந்தன. இப்போது, தமிழ்நாடு உத்தரப் பிரதேசத்தை விட மூன்று மடங்கு செல்வம் உடைய மாநிலமாக உள்ளது. மேலும், சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி என ஒவ்வொரு அளவுகோலிலும் இந்த இரு மாநிலங்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. பொருளாதார ரீதியில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியதில் மின்துறைக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது.
கோவிட்-19 பெருந்தொற்று எனும் விலங்குகளால் பிணைக்கப்பட்டு கட்டுண்டு கிடந்த பொருளாதாரம் அதிலிருந்து மீண்டு வரும் நிலையில், வரவிருக்கும் மத்திய பட்ஜெட் எதிர்வரும் ஆண்டுக்கான நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. 2022- 2023 மத்திய பட்ஜெட்டுடன் இணைந்து வெளியாகும் 2021-22-க்கான பொருளாதார ஆய்வறிக்கையானது, அரசின் கொள்கைகள் பற்றி விமர்சனபூர்வமான தரவுகள் பகுப்பாய்வு மற்றும் ஆழமான ஆராய்ச்சி மூலமாக முந்தைய ஆண்டை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் வெளியிடப்படும் பொருளாதாரக் குறியீடுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு நாட்டுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கும். இந்தப் பின்னணியில், மத்திய நிதி அமைச்சகத்தினால் அடுத்த தலைமைப் பொருளாதார ஆலோசகராக டாக்டர் வெங்கட்ராமன் அனந்த நாகேஸ்வரன் சமீபத்தில் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
ஒரு டிரில்லியன் (ஒரு லட்சம் கோடி) டாலர் பொருளாதாரம் உள்ள நாடுகளின் பட்டியலில் 2007-இல் இந்தியா நுழைந்தது. 2024-25-க்குள் 5 டிரில்லியன் பொருளாதார அந்தஸ்தை அடையும் இலக்கை இந்தியா 2018-இல் நிர்ணயித்தது. இதற்கிடையில் சில மாநிலங்கள் டிரில்லியன் டாலர் பொருளாதார அந்தஸ்தை எட்டும் தொலைநோக்குக் கனவை,...
பொது விவாதங்கள், ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகள் துடிப்பான ஜனநாயகத்தின் முக்கிய மூலக்கூறுகளாகும். மோசமான ஆட்சி அல்லது தவறான நிர்வாகம் இதை சிதைத்துவிடும். தவறான நிர்வாகம் என்பது மெதுவாக வெளிப்படும். ஒருசிலரால் மட்டுமே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஜனநாயகம் என்பது சிலர்...
சமூக ஒற்றுமையின் காரணமாக சமூகங்களுக்கிடையில் ஒரு பொதுவான பண்பாட்டு நெறி உருவாகும்போது மொழிகள் பரிணாம வளர்ச்சி அடைந்து பரவுகின்றன. இது எல்லா மொழிகளுக்கும் ஏன் தமிழுக்கும் பொருந்தும். காலப்போக்கில் மொழிகளின் உருவாக்கம் மற்றும் பரவலுக்கு எந்த ஒரு நபரோ அல்லது சமூகமோ உரிமை கோர முடியாது. ஒருவருக்கு...
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்ட காலத்தில், மக்களிடம் ஆழ்ந்த ஒற்றுமை நிலவியது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, நிர்வாகத்துக்காக தன்னாட்சியுடன்கூடிய மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, தேசியப் பெருமிதத்துக்கு எதிரான கட்டமைப்புத் தடைகள் உருவாயின. இதனால், உணர்ச்சியால்...