Read in : English
மேகதாது அணைக்கட்டு உபரிநீரைச் சேமிக்குமா?
காவிரியில் இந்த ஆண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது; ஆறு நிரம்பி உபரிநீர் கடலுக்குச் செல்கிறது. ஆகவே, மேகதாது அணைக்கட்டு முலம் உபரி நீரைச் சேமிக்க இயலும் என்று பெங்களூரு, மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் பேசப்படுகிறது. இதற்குச் சான்றாகச் சில புள்ளிவிவரங்களும் சுட்டிக்காட்டப்படுகிறது. காவிரி...
தடைகளைக் கடந்து வென்ற ரயில்-18
கடந்த திங்கள்கிழமை இந்தியா தனது 75 ஆம் விடுதலை நாளைக் கொண்டாடியது. அதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு சென்னையின் பெரம்பூரில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு நடந்தேறியது. இந்த நாட்டில் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கும் பொதுத்துறை எல்லாம் தனியார்மயமாகும் சூழலில் உற்பத்தித் துறையில் பெரிதாக எதைச்...
மேகதாது அணை: கர்நாடகத்தின் பார்வை என்ன?
கர்நாடகம் கட்ட விரும்பும் மேகதாது அணை பற்றிய கர்நாடகத்தின் பார்வையைப் புரிந்துகொள்ளக் காவிரி நதிநீப் பங்கீடு பற்றி விரிவாக அறிந்துகொள்ள வேண்டும். காவிரி நதிநீர்ப் பங்கீட்டின் கதை நீண்ட வரலாற்றைக் கொண்டது; அதன் பின்னணியைச் சற்று ஆராய்வோம். கர்நாடகத்தில் மாண்டியா மாவட்டத்தில் காவிரி நதியின்...
குஞ்சாக்கோ போபன் ஒரு முன்னுதாரணம்
சில திரைப்படங்கள் வெறுமனே பொழுதுபோக்காக மட்டும் அமையாமல் சமூகத்தில், கலாசாரத்தில், மக்களின் வாழ்க்கையமைப்பில், அரசியல் செயல்பாடுகளில் தாக்கங்களை உருவாக்கும். அதற்காக அப்படங்களின் ஒவ்வொரு பிரேமிலும் புரட்சிக் கருத்துகள் பொங்கியாக வேண்டுமென்ற கட்டாயமில்லை. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் ஏதேனும் ஒரு...
இலவச வாக்குறுதிகள் சமூகநலனுக்கானவையா?
தலைமை நீதிபதி எம்.வி.ரமணாவின் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் முன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு பொதுநலன் வழக்கொன்றை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அஷ்வினி குமார் உபாத்யாய என்னும் பாஜக உறுப்பினர் ஒருவர், தேர்தல் அறிக்கைகளில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இலவச வாக்குறுதிகளைத் தரும் கட்சிகளின்...
சல்மான் ருஷ்டி: மாயமும் யதார்த்தமும்
மாய யதார்த்தவாதப் புதினத்தில் மாயமே அடிக்கடி கணிசமான அளவில் நிஜமாக இருக்கிறது. அந்த வகைப் படைப்புகளில் உலவும் பாத்திரங்கள் பல கேலிச்சித்திரங்களாகவும் சில வழமையாகவும் இருக்கும். ஆனால் உண்டு உயிர்த்து உரையாடி உலவும் மனித யதார்த்தத்தின் பிரதிநிதிகள்தான் அவர்கள். மாயம் என்பது புத்தகங்களில் மட்டுமே...
பருவநிலை மாற்றம்: காற்று மின்சக்திக்கு உதவுமா?
நடுத்தர, உயர்நிலை பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாடுகளால் ஏற்பட்டிருக்கும் பருவநிலை மாற்றத்தின் பின்னணியில், இந்தியாவின் காற்று மின்சக்தி, சூரியவொளி மின்சக்தி ஆகியவற்றின் சாத்தியம் குறித்த விரிவான முன்மாதிரி அடிப்படையிலான ஒரு கணிப்பு வெளிவந்திருக்கிறது. இந்தியாவின் பெருநிலப் பரப்பில் சூரியவொளி...
தமிழக புத்தர் சிலை மீட்கப்படுமா?
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒருநாள் சென்றிருந்தோம்; கோவிலைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். கோவிலுக்கு இடப்புறம் முள்புதரில், இரண்டு சிலைகள் கிடந்தன. அந்த இடம், புத்தர் தோட்டம் என...
‘அரகலயா’ கற்றுக்கொடுத்த அரசியல் பாலபாடம்
இலங்கை வரலாற்றில் முதன்முதலாக மக்கள் தாங்கள் வெறுத்த தலைவர் ஒருவரை ‘அமைதிவழிப் போராட்டம்’ மூலம் விரட்டியடித்திருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களது அமைதிப் போராட்டம் வெற்றிகரமான ஒன்றே! இனம், மதம், சமூகம் என்ற வேறுபாடுகளைக் கடந்து இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ‘அரகலயா’ என அழைக்கப்படும் மக்கள்...
சுடாத செங்கல் கொண்டு ஒரு பசுமை வீடு
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏ. ஜெகதீசன் என்னும் கட்டடப் பொறியாளர் சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடு ஒன்றைக் கட்ட விரும்பினார். அப்போது அவர் அந்த வீட்டின் கட்டுமான விஷயத்தில் இரண்டு நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்தார். வழக்கமாக வீடு கட்ட சுட்ட செங்கற்களைத் தான் பயன்படுத்துவார்கள். ஜெகதீசன் சுடாத...
Read in : English