ஐஏஎஸ் சட்டவிதிகளை மாற்றும் ஒன்றிய அரசின் முடிவு: திமுக அரசுடன் மேலும் புதிய உரசல்
இந்திய ஆட்சிப்பணி சட்டவிதிகளை மாற்றியைமைக்க முனைகிறது ஒன்றிய அரசு. அதன்மூலம் எந்த ஐஏஎஸ் அதிகாரியையும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் சம்மதமில்லாமலே ஒன்றிய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்ளும் அதிகாரத்தைப் பெற ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மாநில அரசுகளோடு மோதும் போக்கை அதிகரிக்கும் மற்றுமொரு செயற்பாடு இது; மேலும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும் பாஜகவுக்கும் இடையில் மற்றொமொரு விரிசலையும் உரசலையும் உண்டாக்கும் செயல்பாடு இது.