முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தும் `லேண்ட் ரோவர் டிபண்டர்’ காரில் என்ன வசதிகள் இருக்கின்றன?
எட்டு விநாடிக்குள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும் அளவுக்கு அதிக ஆற்றல் வாய்ந்தது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடைய கார். சாலையிலும், சாலையை விட்டு விலகி புழுதித் தடங்கள், கருங்கல் சாலைகளில் செல்லும் வகையிலும், மண் மீதும் கூழாங்கற்கள் மீதுமாக மலைப் பகுதிகளில் சிரமமின்றி ஏறும்...