ஸ்வத்சித் சர்வேக்ஷன் அறிக்கை: கழிவு மேலாண்மையில் பின்தங்கியுள்ளதா தமிழ்நாடு?
இந்தியாவில் 40 லட்சம் மக்கள் தொகையிலிருந்து 25 ஆயிரம் மக்கள் தொகை வரையுள்ள இந்திய நகர நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பிரச்சினையைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டில் ஒரு நாளில் உருவாகும் நகராட்சித் திடக்கழிவு 1,40,980 டன்கள் என்று மக்களவையின் அதிகாரப்பூர்வத் தகவல்...