மின்வாகன உற்பத்தி: டெஸ்லாவுக்குத் தமிழ்நாட்டின் கதவுகள் திறந்தே இருக்கின்றன!
போர்டு இந்தியா சென்னையின் புறநகர்ப்பகுதியில் இருந்த தனது ஆலையை மூடிவிட்டு இந்தியச் சந்தையை விட்டு வெளியேறிய பின்பு தமிழ்நாடு மின்வாகன (எலெக்ட்ரிக் வீஹிக்கிள் - ஈவி) உற்பத்தியில் நிறைய முதலீடுகளை கொண்டுவர முயன்றுக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு ஈவி உற்பத்தியாளர்கள் தமிழ்நாட்டில் வரிசையாக முதலீடு செய்கிறார்கள் என்று கடந்தவருடம் அக்டோபரில், தொழில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.