மளிகைக் கடையில் வேலை பார்த்த ஏழை மாணவர், இன்று டாக்டர்!
சேலம் மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் பிறந்து மளிகைக் கடையில் வேலை பார்த்த ஏழை மாணவரான கமலக்கண்ணன், தனது விடாமுயற்சியால் எம்பிபிஎஸ் படித்து தற்போது டாக்டராகியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் பிறந்து மளிகைக் கடையில் வேலை பார்த்த ஏழை மாணவரான கமலக்கண்ணன், தனது விடாமுயற்சியால் எம்பிபிஎஸ் படித்து தற்போது டாக்டராகியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுதுவதற்காக, அறந்தாங்கியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்த முன்னாள் மாணவர்களும் மாணவிகளும் இலவசப் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டுவிட்டு கட்டடம் கட்டும் பணிகளில் குழந்தைத் தொழிலாளியாக வேலை பார்த்த கிராமத்து விளிம்பு நிலை குடும்பத்தைச் சேர்ந்த சி. செல்வம் (33), மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்ந்து தன்னம்பிக்கையுடன் படித்து, பிளஸ் டூ தேர்ச்சி பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தின் குரோம்பேட்டை எம்ஐடியில் பிஇ படித்து என்ஜினியராகி, சொந்தமாகக் கட்டுமான நிறுவனத்தை உருவாக்கி, அதன் மேனேஜிங் டைரக்டராக உயர்ந்துள்ளார். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த அவர், அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி.
ஆர்வம், நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் பயிற்சியே சாதனைகளுக்கு அடித்தளம். இதை நிரூபிக்கும் விதமாக ‘போட்டோகிராபி’ என்ற ஒளிப்படக்கலையில், கானுயிர்களை படம் எடுத்து உலக அளவில் புகழ்பெற்றுள்ளார் கலைஞர் பாரிவேல் வீராச்சாமி. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே அவரிக்காடு கிராமத்தை சேர்ந்தவர்....
வறுமைச் சூழ்நிலையால் பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டு விட்டு நான்கு ஆண்டுகள் குடும்ப வருமானத்துக்காக டீ கடை வேலை உள்ளிட்ட வேலைகளைச் செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளான விளிம்பு நிலை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் பேச்சிமுத்து (28), தனது விடாமுயற்சியால் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படித்து பிளஸ் டூ...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் சிங்காரத் தோப்புப் பகுதியில் இருக்கும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை பார்ப்போருக்கு அது பள்ளியா அல்லது ரயில் பெட்டிகளா என்ற சந்தேகம் கண்டிப்பாக வரும். ஏனெனில் பள்ளி வகுப்பறைகள் ரயில் பெட்டியை போன்று சுவர்கள் பல வண்ணங்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேல்...
அரசுப் பள்ளியிலும் சட்டக் கல்லூரியிலும் தமிழ் வழியில் படித்து 26 வயதில் மாவட்ட உரிமையியல் நீதிபதியாகி இருக்கிறார் ஆதியான் என்ற மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமத்து மாணவர்....
அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளியின் மகனான எம். அரவிந்த் (28) அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் அப்பேரல் டெக்னாலஜியில் பி.டெக். பட்டம் பெற்று, தற்போது கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராகப்...