அடுத்த குடியரசுத் தலைவர் ஆவாரா தமிழிசை? ஜோடனையும் அல்ல, ஜோக்கும் அல்ல!
எம்ஜிஆர், -கருணாநிதி நட்புறவு பற்றி மணிரத்தினம் இயக்கிய இருவர் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு காலத்தில் சேர்ந்து செயல்பட்ட முன்னாள் நண்பர்கள் நீண்டபிரிவுக்குப் பின்பு ஒருநாள் சந்திக்கும் காட்சி அது. ஒரு திருமண நிகழ்வு. அதில் அருகருகே உட்கார்ந்திருக்கும் எம்ஜிஆரும், கருணாநிதியும் அந்தப் பழைய, பரிச்சய உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இருவரும் நட்போடு காட்சி தருவது நல்லதல்ல என்றும், போட்டியும் பகையும்தான் தங்களின் தேர்தல் வெற்றிக்கும் தோல்விக்கும் அச்சாணி என்றும் எம்ஜிஆராக நடித்திருக்கும் மோகன்லால் சொல்வார்