இசை இணையர்: பெங்களூரைச் சேர்ந்த வித்வான்கள் எஸ்.பி. பழனிவேல்,ஆர்.பிரபாவதி
பிரபாவதி கோலார் மாவட்டம் தொட்டபன்னந்தஹல்லியைச் சேர்ந்தவர். பெற்றோர் ராமகிருஷ்ணப்பா, தனலக்ஷ்மி இருவரும் நாகஸ்வரக் கலைஞர்கள். பிரபாவதி குழந்தையாக இருந்தபோதே அவர்கள் பெங்களூருக்குப் பெயர்ந்துவிட்டனர். சிறு வயதிலேயே பிரபாவதி இசையில் ஆர்வம்காட்டவும், அவரை திருப்பதியில் இருந்த ஆர்.ரேணுவிடம் குருகுல...